எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 செப்டம்பர், 2009

செவ்வரளி

அநேகப் பூக்களை
மனிதர் சூட
தெய்வத்துக்கு மட்டுமே
உரிய பூ நீ...

சிவப்பு சிந்தனையிலும்
சித்தாந்தங்களிலும்
செந்நிறமாகவே
பிரசவிக்கப்பட்டவள் நீ...

விதைகளில் எல்லாம்
சயனைடு குப்பி
மாட்டியே பிறந்தாய்...

ஆன்மீகத்திலும்
வேதாந்தத்திலும்
உழன்ற நான் உனைக்
கைக்கொள்ள இயலாமல்
தெய்வத்துக்கும்
மனிதகுலத்துக்கும்
ஒப்புக் கொடுத்தேன்...

குமரி முனையில்
அம்மன் சூடிக்
கடலில் வீசிய
செவ்வரளி
கனல் மூடிய
செந்தீயாய்....

9 கருத்துகள்:

  1. குமரியம்மன் மூக்குத்தி ஒளி கலங்கரை விளக்கமாக அமைந்ததாக படித்து உள்ளேன்.. தற்போது தமிழ் இனம் தணல் மூடிய செந்தீயில் ஆகுதீயாய்... அழிந்து படும் மக்கள் துயர் கண்டு அம்மன் தன்னை அலங்கரிக்கும் மாலை எதற்கு என்று தூக்கி எறிந்ததாய் உருவகப்படுத்தி உள்ளேன்

    பதிலளிநீக்கு
  2. விதைகளில் எல்லாம்
    சயனைடு குப்பி
    மாட்டியே பிறந்தாய்...
    பூக்கள் குறித்து மிக மிக அதிகமாய் தெரிந்து வைத்துள்ளீர்கள். பூக்கள் உங்களிடத்தில் மீண்டும், இரண்டாம் முறை கவிதையாய் மலர்கிறது.

    பதிலளிநீக்கு
  3. தேடிப்பிடித்து பூக்களின் படத்தையும் போடலாம் நீங்கள்... கவிதை அருமை:))

    பதிலளிநீக்கு
  4. நன்றி தமிழுதயம் உங்க வாழ்த்துக்கும் வரவுக்கும்

    பதிலளிநீக்கு
  5. நன்றி அண்ணாமலயான் உங்க பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...