சௌதாமினி யோசித்துக் கொண்டிருந்தாள். இன்றுடன் 18 நாட்கள்
இருக்குமா. வியாழனோடு வியாழன் எட்டு அடுத்த வியாழன் பதினைந்து . வெள்ளி பதினாறு சனி
பதினேழு, ஞாயிறு பதினெட்டு. இருக்குமென மனம் கணக்குப் போட்டது. இப்போதுதான் கௌசிக்
அவளைக் கைபிடித்தது போலிருந்தது. அதற்குள் பதினெட்டு நாட்கள் ஓடிவிட்டனவா.. அவளால்
நம்பத்தான் முடியவில்லை.
ஜப்பான் கடிகாரத்தில் ஐந்து முறை குயில் வந்து எட்டிப் பார்த்துக்
கூவிவிட்டுப் போனது.
