எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மெனோபாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மெனோபாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஜூலை, 2024

19.மெனோபாஸ் மற்றும் ஆஸ்டியோபோராஸிஸ்

 19.மெனோபாஸ் மற்றும் ஆஸ்டியோபோராஸிஸ்


கருப்பை என்பது தலைகீழான பேரிக்காய் வடிவத்தில் சித்தரிக்கப்படுகின்றது. இதன் மேற்புறம் இருக்கும் இரு கொம்பு போன்ற குழாய்கள் பிரசவத்தின் போது விரிவடைந்து கருப்பை வாயுடன் இணைகின்றன. ஃபண்டஸ், கார்ப்பஸ், இஸ்த்மஸ், கருப்பை வாய் ஆகிய பிரிவுகள் கருப்பையில் உள்ளன. இடுப்பு மற்றும் கீழ்முதுகின் தசை நார்கள் கருப்பையைச் சரியான இடத்தில் வைத்திருக்க உதவுகின்றன. பெரிமெட்ரியம், மயோமெட்ரியம், எண்டோமெட்ரியம் ஆகிய மூன்று அடுக்குகளால் ஆனது கருப்பை.

சிலருக்கு ஒழுங்கற்ற வடிவக் கருப்பை இருக்கலாம். நார்த்திசுக் கட்டி, பாலிப்கள், புற்றுநோய், இனப்பெருக்க உறுப்புகளின் தொற்றால் இடுப்பு அழற்சி நோய், கருப்பைச் சரிவு, கர்ப்பம் தரிக்க இயலாமை, அதீதவலி ஆகியனவும் ஏற்படலாம். மெனோபாஸ் சமயத்திலும் அதீத ரத்தப் போக்கு ஏற்படலாம். கருப்பைக் குழாய்களின் நீண்டகால அழற்சி கருவுறாமைக்கு வழிவகுக்கும். இரண்டு முல்லேரியன் குழாய்கள் இணைந்து கருப்பைக் குழியை உருவாக்குகின்றன. சிலருக்கு இது சரியாக இணையாததால் ஒழுங்கற்ற வடிவ கருப்பை உருவாகின்றது. பைகார்னுவேட் கருப்பை (இதய வடிவம்), ஆர்குவேட் கருப்பை, செப்டேட் கருப்பை ( ஒரு சவ்வு மூலம் இரண்டாகப் பிரிக்கப்படுதல்), யுனிகார்னுவேட் கருப்பை, டிடெல்ஃபிஸ் கருப்பை ( இரண்டு கருப்பைகள் கொண்டது) ஆகியன இதன் வகைகள்.