எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பேரன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேரன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

விருந்து

பவள மல்லியும்,
மகிழம் பூக்களும்
இரவுச்சரத்தை வாசமேற்ற...

தலை கலைந்த பனையும்
நிலவு வருடும் தென்னையும்
சிற்பமாக...

குழந்தைகள் சிரிப்பை
அள்ளி விசிறியதாய்
நட்சத்திரங்களும்...

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

காட்டாறு

நீர் தேங்கிக் கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்.,,,
கையில் அள்ளிப்
பருகத்தான் வேண்டாம்...
அட கால் நனைத்தாலாவது
கலக்கிச்சென்றாலென்ன...?

விவசாயம் காணாமல்..
மாட்டின் கூர்வாய் அறியாமல்..
மரங்கள் துப்பிய
எச்சில் இலைகளுடன்...