வியாழன், 20 ஆகஸ்ட், 2009

காட்டாறு

நீர் தேங்கிக் கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்.,,,
கையில் அள்ளிப்
பருகத்தான் வேண்டாம்...
அட கால் நனைத்தாலாவது
கலக்கிச்சென்றாலென்ன...?

விவசாயம் காணாமல்..
மாட்டின் கூர்வாய் அறியாமல்..
மரங்கள் துப்பிய
எச்சில் இலைகளுடன்...

என்றோ கிளைக்குளமொன்றில்
மலர்ந்த அல்லியும்
ஆம்பலும் நினைத்து..
ஆகாயத்தாமரை மலர்த்தி...

வறியவனின் வயிறு
போல் தீவுகள் விழுந்து..
சப்பாதிக்கள்ளியும்
பனைமரமும் கிளைத்து..
சாலையோரத் தார்த்தூசி தின்று...

வண்டிக்காரன் கொட்டிய
பழக்கழிவு போர்த்தி...
மாதமொருமுறை
பொதிக்கழுதையும்
வண்ணானும்
வெள்ளாவியும் பார்த்து...

தினம்தினம் அஸ்தமனம்
சூர்யோதயம் அனுபவித்து
உலகத்துப் பிறப்பெல்லாம்
ஒரு சேரப் பட்டது போல்
அலமலந்து...

மழை.....
பெருகியது காட்டாறு...
மரமும்செடியும் கொடியும் தழுவி.,
அணைத்து அன்பைப் பெருக்கி.,
கசடையெல்லாம் கடலில் போக்கி.,
மலர்ந்து கிடந்தது வாய்க்கால்..,
பெருவெளியில்...!!!

7 கருத்துகள் :

Nagappan சொன்னது…

வார்த்தைகள் வசப்பட்டு வணங்கி நிற்பதை காண முடிகிறது. வாழ்த்துக்கள் தேனம்மை!

thenammailakshmanan சொன்னது…

Welcome Nagu Mama
Thanks

cheena (சீனா) சொன்னது…

இயற்கையின் கைவண்னம் கவிதையாய மல்ர்கிறது - பெருமழை பொழிந்து காட்டாறாஉ மாறி வாய்க்காலைச் சுத்தம் செய்கிறது. கற்பனை வளம் பாராட்டத் தக்கது - நல்வாழ்த்துகள்

thenammailakshmanan சொன்னது…

சீனா ஸார் உங்க வாழ்த்துக்கு நன்றி

ஈரோடு கதிர் சொன்னது…

//அட கால் நனைத்தாலாவது
கலக்கிச்சென்றாலென்ன...?//

அருமையான ஏக்கம்

thenammailakshmanan சொன்னது…

நன்றி கதிர் கருத்துக்கு

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...