எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

பிருந்தாவனம் தெரு

அந்தத் தெருவிலேதான் இருந்தது,
எங்கள் வீட்டை வாங்கியவரின் வீடும்......

வாங்குவதற்கு எந்த முகாந்திரமும்
இல்லாததுபோல, விற்பதற்கும்
எந்த முகாந்திரமும் இல்லாமல் இருந்தது,
பராமரிக்க முடியவில்லை என்பது தவிர. .....

நூறாண்டுகளுக்கும் மேலாய்
முன்னோர்களெல்லாம்
ஒரே வீட்டில் வாழ்ந்திருக்க,
நூறு நாட்கள் கூட
இருக்க இயலாமல்
பணிக்கான மாறுதலில்
பிரிந்து வந்தோம்......

எடுக்க முடிந்த பொருட்களுடன்,
எடுக்க முடியா நினைவுகளுடன்......

அடிக்கடி சந்திக்க இயலா
ஏழைச் சினேகிதியின் வாழ்க்கைச் சித்திரம்
போலப் பாழ்பட்டுக் கிடந்தது......

ஒவ்வொரு முறை சென்று பார்க்கும் போதும்
வந்து குடியிருந்தவர் போலெல்லாம்
முகம் மாறிற்று வீடு. ....

நாடோடிகள் போல நாம் பயணம் செய்ய
நமது ராஜாங்கமோ இன்னொருவர் பிடியில்.....

கும்பாபிஷேகம் போல் நடந்த கிரஹப்பிரவேசம். ....
வெள்ளிக்குடங்களும் பட்டுப்புடவைகளுமாய்,
சாண்ட்லியரும் கிரானைட் பாலீஷுமாய்,
ப்ரென்ச் டோரும் காலப் வைத்த திரைகளுமாய்,
வாஸ்துப்படிக் கட்டி ஹோமம் செய்த வீடு. ...!!!

லவ குசர்களாயும், ராமலக்ஷுமணர்களாயும்,
கிருஷ்ண பலராமர்களாயும் என் பிள்ளைகள்
இணை பிரியாமல் கிடந்து அதகளம் செய்த வீடு...!!!

லா.ச. ராமாமிர்தத்தின் அருந்தாத பாயாசமாய்
இனித்துக்கிடக்கிறது எனது வீடு....!!!!

வாழ்வாதாரங்களை விட்டுப் புலங்கள் பெயரும்
எல்லா தேசத்து அகதிகளுக்கும்
என் மனதின் இரங்கற்பா இது......

6 கருத்துகள்:

 1. பெரிய வீடு குறித்த எனது கவலையைப் பிரதிபலிக்கிறது

  பதிலளிநீக்கு
 2. உண்மை உண்மை - புலம் பெயர்ந்து - பிறந்த - பெருமை நிறைந்த வீட்டினை விடும் நிலை வரும் போது மனம் வருந்துகிறது - என்ன செய்வது -கால ஓட்டத்தில்- வெள்ளத்தில் நாம் துரும்பாய் மாறி விடுகிறோமே !

  வெள்ளிக்குடங்களும் பட்டுப்புடவைகளும் - அடடா அவ்வினிய காட்சி என்றுமே மந்தில் நிழலாடும்

  நலல் கவிதை நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. சீனா ஸார் உங்க வாழ்த்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...