எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நினைவுக் குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுக் குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 மார்ச், 2020

மலரானவளுக்காக..

**நோய் வரும்போது
அழகு அறிவு அன்பு
எதுவுமே பயனற்றுப் போகிறது.

**என்ன செய்துகொண்டிருக்கிறோம்
எதுவரை இயங்குவோம்
எது நமக்கான விளிம்பு..

**அந்தரத்தில் பறப்பதுபோல் இருக்கிறது
வயிற்றில் பட்டாம்பூச்சிகள் அல்ல
வெட்டுக்கிளிகள் துடிக்கின்றன.

**என்ன செய்துவிட்டாய் ஒரு நொடியில்
என்ன செய்துகொண்டிருக்கிறேனென்பதே புரியவில்லை
உனக்குப் பிறகு.

**வந்தாய் கவர்ந்தாய்
அழகைக் கண்டு அறிவைக் கண்டு பொறாமைப்பட்டேன்
சென்றுவிட்டாய்
சாம்பல் என்னை அச்சுறுத்துகிறது