எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திருமயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஜூலை, 2017

ஊமையன் கோட்டையா காதலர் கோட்டையா.



ஊமையன் கோட்டை என்றொரு நாவல் வானதி பதிப்பகத்தில் வெளியாகி இருக்கிறது. இதை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

/// "ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை எழுதியுள்ளார் கண்ணதாசன், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருக்கும் ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊமையன்கோட்டையைப் பற்றி குறைவான செய்திகளையே அளித்திருக்கிறார். கதையின் நாயகனான ஊமைத்துரை இருந்தபோதும், வீரத்தேவன் என்ற மறவர்குல இளைஞனை சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. இந்நாவலின் காட்சிகள், அனைத்தும் கண்முன் நடப்பது போன்ற தோற்றமும் வாசிப்போருக்கு ஏற்படுகிறது."///

திருமயம் கோட்டைதான் ஊமையன் கோட்டை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கே கட்டபொம்மன் ஒளிந்திருந்த இடம் என்று உறவினர் கூறினார். ஆனால் இது ஊமைத்துரை ஒளிந்திருந்த இடம் என்று கூகுள் சொல்கிறது. ஆனால் இக்கோட்டை இன்று காதலிப்பவர்கள் ஒளிந்திருக்கும் இடமாக மாறி வருவது வருத்தத்துக்குரியது. 



புதன், 28 ஜூன், 2017

திருமயம் கோட்டையில் ஒரு உலா.



சிலநாள் முன்பு திருமயம் கோட்டைக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்து. அங்கே இரு கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் பெருமாள் கோயிலை முன்பு பார்த்திருக்கிறேன்.






இந்த முறை கோயில் உலா இல்லை. இது கோட்டை உலா மட்டுமே.


 ஹைவேஸில் காரில் இருந்து எடுத்தேன்.