எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சுமிதா ரமேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுமிதா ரமேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 ஆகஸ்ட், 2015

சாட்டர்டே போஸ்ட் :- ஆழ்வார்களும் அரங்கனும் சூடிய சுடர்க்கொடி சுமிதாவும்.

முகநூலில் என் அன்பிற்குரிய தங்கைகளுள் ஒருவர் சுமிதா ரமேஷ். அழகான கவிதைகளும் அதைவிட அழகான அரங்கன் பதிவுகளுமாக மனதைத் தொட்டவர். என்றும் புன்னகை, எளிமை, அசத்தலான பதிவுகள் எனக் கலக்கி வருபவர். முகநூலில் மட்டுமல்ல கூகுள் ப்ளஸ்ஸிலும் இவர் பதிவுகள் பார்த்து அசந்ததுண்டு. அரங்கன் மேல் எனக்கும் பித்தென்றாலும் இவர் வழி தனி வழி. தினமும் தவறாமல் ரசனையோடு அரங்கனைப் பாடிப் பரவிப் புகழும் இவரின் பதிவை என் வலைத்தளத்திலும் வெளியிட ஆவல் மிகுந்தது. 

/// அரங்கனைப் பற்றி ாயிரிவ்யப் ப்ரந்தப் பாடல்குடன் எனது தளத்துக்காக எழுதித்தரமுடியுமா சுமி. // 

 என முகநூல் உள் டப்பியில் தொடர்பு கொண்டபோது தினம் அரங்கனைப் பற்றி எழுதி வரும் அவர் ஆழ்வார்களைப் பற்றியும் எழுதித் தருவதாகச்சொன்னது களிகூரச் செய்தது. எம்பெருமான் சங்கல்பம். இதையே அவரும் சொன்னது பார்த்து இன்புற்றேன். :)
 



வைணவத்தில்  திளைத்த  ஆழ்வார்கள்
 நம் தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியங்கள் இறைவனை ஆண்டவை  நம் மனதையும் என்றென்றும் ஆள்பவை.