ராமனுக்கு மூன்று தம்பிகள் தானே அது எப்படி சாதாரண படகோட்டியான குகன் மாமன்னனான ராமனுக்கு நான்காவது தம்பியாக ஆனார் என்று யோசிக்கிறீர்கள்தானே குழந்தைகளே. குகன் யார், அவர் எப்படி ராமருக்குத் தம்பியானார் என்று பார்ப்போம்.
அயோத்தி மன்னன் தசரதன் இட்ட கட்டளைப்படி ராமன் இலக்குவனோடும் சீதையோடும் வனவாசம் புகுந்தார். மரவுரி பாதுகை தரித்து அவர் வனம் புகுந்த போது கங்கையைக் கடக்க வேண்டி வந்தது.
சிருங்கிபேரபுரம் என்னும் நாட்டின் தலைவனான நிசாத மன்னன் குகன். அவன் வேடுவ குலத்தைச் சேர்ந்த தீரன். அடர்ந்த கருங்குழல்கள் தொங்கும் நீண்ட தோள்கள் உடையவன். கங்கை ஆற்றில் படகோட்டி திண்மையான புயங்கள் பெற்றிருந்தான். நூலாடை போல் தோலாடை அணிந்தவன். அவன் ராம லெக்ஷ்மண சீதாதேவியின் வருகையைக் கேள்வியுற்றான்.
மன்னர்மன்னன் வருகிறாரா. இவரைக்காணத்தானே அவன் பிறவியென்னும் பெருங்கடலை நீந்தாமல் காத்திருக்கிறான். உடனே தேனும் மீனும். தினைமாவும் எடுத்துக்கொண்டு ராமரைப் பார்க்கச் சென்றான்.