எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கேட்டராக்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேட்டராக்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஜூலை, 2017

சாட்டர்டே போஸ்ட் :- கேட்டராக்டைத் தாமதிக்க திரு. இருங்கோவேள் சொல்லும் யோசனைகள்.


நண்பர் திரு இருங்கோவேள் அவர்களின் இவ்விடுகை மிகமுக்கியம் என்பதால் இன்றே இரண்டாவது சாட்டர்டே போஸ்டாக இதையும் வெளியிடுகிறேன். 

கண் புரை (கேட்டராக்ட்) -

வருவதை தவிர்க்க முடியுமா? - ஓர் விளக்கம்

கட்டுரை ஆசிரியர்:
அ போ இருங்கோவேள்,
சங்கர நேத்ராலயா,
சென்னை 600 006.

800px-Shushrut_statue.jpg

மனிதகுலத்தில் முதன் முதலாக
கேட்டராக்ட் ஆபரேஷன் செய்த கண் மருத்துவர் சுஸ்ருதர்
ஒரு இளைஞர் ஒரு கண் மருத்துவரைப் போய் பார்த்து, என் தாத்தாவும் என் அப்பாவும் கண்ணில் கேட்டராக்ட் வந்து ஆபரேஷன் செய்து கொண்டார்கள். கண்ணே இத்துணூண்டு உடல் உறுப்பு, அதிலே ஆபரேஷனா? நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்த கேட்டராக்ட்டே வராம இருக்க ஏதாச்சும் செய்ய முடியுமா?ன்னு கேட்டார்..

டாக்டர் சிரித்துக் கொண்டே, ”கேட்டராக்ட் பற்றி பயம் வேண்டாம் ”, என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்.

1. கேட்டராக்ட் பொதுவாக வயோதிகம் காரணமாக வருவதாக பலரும் நினைத்தாலும், அது மட்டுமே காரணமில்லை. உண்மையைச் சொல்வதானால், இதனால்தான் கேட்டராக்ட் வருகிறது என்று என்று இன்று வரை யாரும் உறுதியாக அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. (Cataract is still unknown etiology).

2. கேட்டராக்டை குணப்படுத்த முடியும் - தவிர்க்க முடியாது, ஆனால்
உங்களுடைய நடவடிக்கைகளை, வாழ்க்கை முறைகளை முறைப்படுத்துவதன் மூலம்(லைஃப் ஸ்டைல்) தாமதப்படுத்த முடியும்.