எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கருத்தரியாமைக்குக் காரணங்களும் தீர்வுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்தரியாமைக்குக் காரணங்களும் தீர்வுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஜூன், 2024

17.கருத்தரியாமைக்குக் காரணங்களும் தீர்வுகளும்

 17.கருத்தரியாமைக்குக் காரணங்களும் தீர்வுகளும்



சில பெண்களுக்குப் பிறப்பிலேயே கருப்பையும் கருமுட்டைகளும் இல்லாமலிருக்கும். சிலருக்குக் கருமுட்டை சரியாக உற்பத்தி ஆகாததால் மாதவிடாய் சரியாக வராது. சிலருக்கு மாதவிடாய் சரியாக இருந்தாலும் கருமுட்டை உற்பத்தி சீராக இருக்காது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்குக் கருமுட்டை உற்பத்தியே இருக்காது.

 

சிலருக்கு இளம் வயதிலேயே கருவகம் செயல் இழந்து விடும் ( இதற்குப் ப்ரிமெச்சூர் ஓவேரியன் ஃபெயிலியர்) என்று பெயர். கருப்பையில் சுரக்கும் ம்யூக்கல் என்னும் திரவம் கெட்டியாகவும் எதிர்ப்பு சக்தி நிறைந்தும் இருந்தால் கரு இணைவதைத் தடுத்தல், கரு இணை குழாயில் கருமுட்டை நுழைய வாய்ப்பு இல்லாமல் போதல், பெண்ணுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிடுதல் ஆகியவற்றால் கருத்தரிப்பு நிகழாது.

Related Posts Plugin for WordPress, Blogger...