எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கருத்தரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்தரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 பிப்ரவரி, 2024

14.இயற்கைக் கருத்தரிப்பும் செயற்கைக் கருத்தரிப்பும்

 14.இயற்கைக் கருத்தரிப்பும் செயற்கைக் கருத்தரிப்பும்


கருத்தரிப்பு என்பது பாலூட்டிகளில் நிகழும் ஒன்று. அடுத்த சந்ததியை உருவாக்க, மனித இனம் செழித்துப் பெருக கருத்தரிப்பு இன்றிமையாதது. பரிணாம வளர்ச்சியில் மனித இனமே முதல்நிலை வளர்ச்சி அடைந்த ஆறாம் அறிவு பெற்ற உயிரினமாகும். உறவு கொள்ளும்போது ஆணின் விந்தணு பெண்ணின் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுவது இயற்கைக் கருத்தரிப்பு.

இயற்கைக் கருத்தரிப்பில் கலவியின் போது ஆணின் விந்தணு பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் பலமணி நேரங்கள் நீந்திச் சென்று கருப்பை வாய் வழியாக ஃபலோப்பியன் குழாயை அடைகிறது. கருப்பையிலிருந்து வெளியேறி ஃபலோப்பியன் குழாய்க்கு வரும் சினைமுட்டையை துளைத்துச் சென்று இணைந்து கரு உருவாகிறது. இதன் பின்னர் கருவணுவானது கருப்பை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. இதற்கு 4 – 7 நாட்கள் ஆகும்.