எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 7 மார்ச், 2023

3.லுகேரியா ( வெள்ளைப்படுதல் ) இயல்பானதா அல்லது நோயின் அறிகுறியா

 3.லுகேரியா ( வெள்ளைப்படுதல் )  இயல்பானதா அல்லது நோயின் அறிகுறியா


மாதவிடாய்க் கோளாறுகள் என்று எடுத்துக் கொண்டால் அதிக ரத்தப் போக்கு, குறைந்த ரத்தப் போக்கு, சீக்கிரப் பூப்பு, தாமதப் பூப்பு, ஹார்மோன் கோளாறுகள் இவற்றோடு நாம் வெள்ளைப் படுதலையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

முறையான வயதில் பூப்பெய்துவதற்கு உணவுப் பழக்கம்வாழ்க்கை முறை மற்றும் பரம்பரையும் காரணமாகின்றனஉடல் உழைப்பின்மைமுறையற்ற உணவுப் பழக்கம் காரணமாக ஏற்படும்  உடல் பருமனால் உடலில் ஹார்மோன் உந்துதல் ஏற்பட்டுவிரைவில் பூப்பெய்துகின்றனர் குழந்தைகள்.அதுமட்டுமல்லாமல்உணவுப் பொருள்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம்விரைவாகப் பூப்பு ஏற்படுவதற்குக் காரணமாகிறது.

பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள `பிஸ்பீனால் ’, தாலேட்ஸ்  போன்ற வேதிப் பொருள்கள்இயல்பான ஹார்மோன் செயல்பாட்டுக்குக் குந்தகம் உண்டாக்கிவிரைவில் பூப்பு சுழற்சியை ஏற்படுத்துகின்றனகுழந்தைப் பருவத்தில் பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு மாற்றாக மரப்பாச்சி பொம்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்குழந்தைகளுக்கு ஏற்படும் மனவழுத்தமும் விரைவில் பருவமடையச் செய்யும்.

தாமதப் பூப்பு என்பது பெரும்பாலும் பரம்பரை வாகின் காரணமாக ஏற்படுவது. ஒருவர் வீட்டில் அம்மா, பாட்டி ஆகியோர் தாமதமாகப் பூப்படைந்திருந்தால் அது பேத்திக்கும் தொடரும். உடலில் போதிய ஊட்டச்சத்து இன்மை, சுற்றுச்சூழல் மாசு, கல்வி மற்றும் போட்டிகளால் ஏற்படும் பதற்றம், ஸ்ட்ரெஸ், ஸ்ட்ரெயின் போன்றவையும் வளர்ச்சி குன்றுதலுக்கும் தாமதப் பூப்புக்கும் காரணம். கருப்பையின் வளர்ச்சி, கருமுட்டைகளின் வளர்ச்சி பொறுத்தும் தாமதப் பூப்பு நிகழ்கிறது.

டிஸ்மெனோரியா என்பது வலி மிகுந்த மாதவிடாய் ஆகும். அமினோரியா என்பது மாதவிடாய் இல்லாமல் இருப்பதாகும். அதிகப்படியான வெள்ளைப் போக்கு லுகேரியா எனப்படுகிறது.

பருவப் பெண்களுக்கும் சரி, திருமணமான பெண்களுக்கும் சரி, மாதவிடாய்க்கு முன்பு மூன்று நாட்களும் மாதவிடாய்க்குப் பின்பு மூன்று நாட்களும் வெள்ளைப்படுதல் இயல்பானதே. ஆனால் அதிக வெள்ளைப் போக்கு ஆளை உருக்கிவிடும். அதேபோல் வெள்ளைப்படுதலில் நிற வித்யாசம், துர்நாற்றம் அடித்தல் ஆகியனவும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. பிறப்புறுப்பில் அரிப்புடன் கூடிய வெள்ளைப்படுதல் ஏற்பட்டாலும் அல்லது  மஞ்சள், பச்சை, பழுப்பு நிறத்தில் வெள்ளைப்படுதல் ஏற்பட்டாலும், தயிர் போல் கெட்டியாகவோ, பால் போல் நீர்த்தோ, அல்லது தண்ணீராகவோ ஏற்பட்டாலும் மேலும் அது துர்நாற்றம் வீசினாலும் மகளிர் மருத்துவரை அணுகி அது எதனால் ஏற்பட்டது என்பதைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

 

இனிப்பு நீர் நோய் உள்ளவர்கள், அதிகம் ஆண்டிபயாடிக் மருத்து எடுத்துக் கொண்டவர்கள், அடிக்கடி சிறுநீர்த் தொற்றுக்கு ஆளாகுபவர்கள், போதிய தண்ணீர் அருந்தாமல் இருப்பவர்கள், உள்ளுடை சுகாதாரம் பேணாதவர்களுக்கும் அரிப்புடன் கூடிய வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.


 

இதனால் ஏற்படும் விளைவுகள்.

 

இது பின்னாளில் கருப்பைப் புற்று நோயாகவோ, பாக்டீரியா அல்லது ஈஸ்ட் ஆகியவற்றால் ஏற்படும் தொற்று நோயாகவோ,பெண்ணுறுப்புப் புற்றுநோயாகவோ உருவெடுக்கலாம். எனவே முன்பே பரிசோதித்துத் தக்க மருத்துவம் எடுத்துக் கொள்ளுதல் நலம்.  

 

இது எதுவும் காரணமாக இல்லாதபோதும் வெள்ளைப்படுதல் எதனால் ஏற்படுகிறது என்பதைப் பார்ப்போம். இவ்வாறு அதிக வெள்ளைப் போக்குக்கு உடல் சூடு என்பதுதான் முக்கியக் காரணி. உடலின் வெப்பத்தால் அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட்டு அதனால் அது உடலை மேலும் உருக்கி ஒல்லியாக்கி விடும். எடை குறைதல், உடல் வறட்சியாகக் காணப்படுதல், உடம்பு எப்போதும் காய்ச்சல் அடிப்பது போல் கொதிப்பது, பெண்ணுறுப்பில் அரிப்பு, வீங்குதல், கிட்டே வந்தாலே கெட்ட வாடை, கண் எரிச்சல், எப்போதும் மன அழுத்தத்தோடு இருப்பது, உடலில் கால்சியம் இழப்பு, முடி உதிர்தல் ஆகியன இதன் விளைவுகள்.

 

பருமனானவர்களுக்கு இது வெளிப்படையாகத் தெரிவதில்லை என்பதால் விட்டுவிடக் கூடாது. ஆனால் மெலிவாய் இருப்பவர்கள் உடல் பலம் இழந்து இன்னும் மெலிந்து விடுவார்கள். பருமனாய் இருந்தாலும் மெலிவாய் இருந்தாலும் இதுவும் வளரிளம் குழந்தைகளுக்கு ரத்தப் போக்குப் போலவே அசௌகரியத்தை உண்டு பண்ணும். இதைப் போய்ப் பெற்றோரிடம் எப்படிச் சொல்வதென அவர்களும் தவிப்பார்கள். எனவே பெற்றோர் இவ்விஷயத்தை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு மருத்துவம் செய்வது முக்கியம்.

 

இதைக் களைவது எப்படி? என்ன மருத்துவம் ?

 

குழந்தைகளுக்குப் பெண்ணுறுப்பு சுகாதாரம் பேணக் கற்றுக் கொடுக்க வேண்டும். சிறுநீர் கழித்ததும் கழுவச் சொல்ல வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தைத் தவிர்க்கச் செய்ய வேண்டும். ரோட்டில் விற்கும் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட்டைத் தவிர்க்கவேண்டும். மகளிர் மருத்துவரிடம் காட்டி அவர் கூறும் பரிசோதனைகளை செய்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

மேலும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளை உண்ணச் சொல்ல வேண்டும். நுங்கு, பதநீர், இளநீர், வெள்ளரிக்காய், தேன்நெல்லி, தேன்காய்ப்பூ,வாழைப்பழம் போன்றவை உடலைக் குளிர்ச்சியாக்கும். பழைய சாதத்தில் இருக்கும் நீராகாரம் மிகச் சிறந்த நிவாரணி. மோர், பால், நன்னாரி, வெட்டிவேர் ஊறவைத்த தண்ணீர், கற்றாழைச் சாறு போன்றவையும் நன்மை பயக்கும்.

 

வெந்தயம் போட்டுச் செய்த இட்லி, தோசை போன்றவையும் தேங்காய்ப்பால் கஞ்சி, வெந்தய லட்டு, கேழ்வரகுப் புட்டு, நுங்குப் பாயாசம், இளநீர் ரசம் ஆகியன கொடுக்கலாம். உணவில் அதிக காரம், அதிக இனிப்பு தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறையாவது எண்ணெய்க் குளியல் எடுக்கச் சொல்ல வேண்டும்.

 

ஒரு கப் பச்சரிசியுடன் இரண்டு டீஸ்பூன் வெந்தயம், 20 பல்பூண்டு போட்டு மூன்று கப் தேங்காய்ப் பாலில் வேகவைத்து உப்புப் போட்டு மசித்துத் தேங்காய்ப் பால் கஞ்சியாகச் சாப்பிடலாம். கால்கப் வெந்தயத்தை வறுத்து அரைகப் வெல்லம் சேர்த்து இடித்து நெல்லி அளவு உருண்டை செய்து வெந்தய லட்டாகச் சாப்பிடலாம். கேழ்வரகை அரைத்துப் புட்டு அவித்து தேங்காய்த்துருவல், தூள் வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது அதைக் கூழாகக் கிண்டி மோர் சேர்த்துப் பருகலாம். பால் பாயாசம் வைத்து அதில் நுங்கை அரைத்துச் சேர்த்துப் பருகலாம். காரம் புளியைக் குறைத்து ரசம் வைத்து இறக்கியபின் அதில் இளநீர் சேர்த்து அருந்தக் கொடுக்கலாம்.

 

இவற்றைக் கடைப்பிடித்து உடலைக் குளிர்ச்சியாக வைத்தால் வெள்ளைப்படுதல் என்ற நோயிலிருந்து விடுபடலாம். அடுத்து மாதவிடாய்க் கோளாறுகளையும் அதிக குறைந்த ரத்தப்போக்கு, மாதவிடாய் வலி, ரத்தசோகை ஆகியவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...