எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 மார்ச், 2023

பசிக்கும் ருசிக்கும் ஆரோக்கியமா சாப்பிடுவோம்.

பசிக்கும் ருசிக்கும் ஆரோக்கியமா சாப்பிடுவோம்.


முன்பெல்லாம் பசிக்கும் ருசிக்கும் சாப்பிட்டோம். ஆனால் இப்ப ஹெல்த் கான்சியஸ் அதிகமாகி மக்கள் ஒவ்வொரு உணவிலும் என்னென்ன சத்துக்கள் இருக்கு. அதில் எதை சாப்பிடலாம்னு தேர்ந்தெடுத்து சாப்பிடுறாங்க. அப்படி சில ஆரோக்கியமான உணவுகள் பத்தியும் அவற்றின் செய்முறை மற்றும் பலன்கள் பற்றியும் கொடுத்துள்ளேன்.

உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு ப்ரோட்டீன் முக்கியம் எனவே முளைவிட்ட பாசிப்பயறு பீட்ரூட் தோசை கொடுக்கலாம். இதன் பெயரே ப்ரோட்டீன் தோசைதான். இதுக்குத் தேவை பாசிப்பயிறு ஒரு கப்.

பாசிப்பயறை முதல்நாள் பகலில் கழுவி ஊறவைக்கவும். 4 மணி நேரம்கழித்து தண்ணீரை வடித்து மஸ்லின் துணி அல்லது காட்டன் துணியில் இறுக்க மூட்டையாகக் கட்டி தொங்கவிடவும் இரவு முழுவதும்..அல்லது ஒரு டிஃபன் பாக்ஸில் அல்லது காஸரோலில் போட்டு டைட்டாக மூடி வைக்கவும்மறுநாள் காலை முளை விட்டு இருக்கும்..

இதோட  பச்சைமிளகாய் 1, பூண்டு 2 பல், இஞ்சி 1 துண்டு கால் டீஸ்புன் உப்பு சேர்த்து அரைச்சுக்கணும்.  பெரிய வெங்காயம் ஒன்று பொடியா அரியவும். பீட்ரூட் கால் பாகம் துருவிப் போடவும். இதுல மிளகாய்ட்தூள் கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் 1 டேபிள் ஸ்பூன், ஜீரகம் அரை டீஸ்பூன், பொடியா அரிந்த கொத்துமல்லித்தழை போட்டு நன்கு கலக்கி மெல்லிய தோசைகளா சுட்டெடுத்து சாப்பிடக் கொடுக்கலாம். இதுல பீட்ரூட் மல்லி சேர்ப்பதால் கலராக இருக்கும். இரும்புச் சத்தும் கூட. இஞ்சி பூண்டு செரிமானம் கொடுக்கும். 

இதுக்குத் தொட்டுக்க இரும்புச் சத்து உள்ள துவையல் ஒண்ணு சொல்றேன். இதுல ஃபைபர் கண்டெண்ட் அதிகமா ( நார்ச்சத்து ) இருப்பதால் ஜீரணமும் எளிதாகும். மிக ருசியாகவும் இருக்கும். துளிரான கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினாமூன்றும் அரைக் கட்டு வாங்கி சுத்தம் செய்யவும். 3 பெரிய வெங்காயத்தைத் தோலுரித்துப் பொடியாக அரியவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தலா ஒரு டீஸ்பூன் தாளித்து நான்கு பச்சை மிளகாயை வெட்டிப் போட்டு அத்துடன் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அரை டீஸ்பூன் உப்பு, இரண்டு சுளை புளி, சிறிது பெருங்காயம் போட்டு அத்துடன் சுத்தம் செய்த கருவேப்பிலை கொத்துமல்லி புதினாவைப் போட்டுப் புரட்டி இறக்கி விடவும். ரொம்ப வதக்க வேண்டாம். ஆறியதும் இதை அரைத்து ப்ரோட்டீன் தோசையோடு பரிமாறவும். இரும்புச் சத்தும் நார்ச்சத்தும் அதிகம் என்பதால் ஜீரணம் எளிதாலும். ஹீமோக்ளோபின் கூடும். தலை முடி வளர்ச்சிக்கும் ஏற்றது.


ஆவியில் வேக வைத்த கொழுக்கட்டைகளை எப்போதும் சாப்பிடலாம். வித்யாசமா ஒரு காய்கறிக் கொழுக்கட்டை ஒன்று இங்கே சொல்லி இருக்கேன். ஒரு கப் பச்சரிசி, ஒருகப்  புழுங்கல் அரிசி இரண்டையும் களைந்து தனித்தனியாக ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து சலிக்கவும்மிக நைசானதை கொழுக்கட்டைக்குலேசாக பெருபெருவென இருப்பதை புட்டுக்கும் வைத்துக் கொள்ளலாம்நெய்யில் சீரகம் தாளித்து பொடியாக அரிந்த 2 பச்சைமிளகாய், 1 பெரிய  வெங்காயம்போட்டு அத்துடன் அரை கப்  காய்கறிக் கலவை ( காரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி ) தாளித்து ஒரு கப் தேங்காய்த்துருவல் போட்டுப் பிரட்டி சலித்த மாவையும் உப்பையும் அந்தச் சூட்டில் பிரட்டி இறக்கவும்அதில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி மூடி வைக்கவும்ஐந்து நிமிடம் கழித்து நன்கு பிசைந்து கொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து எள்ளுத் துவையலோடு பரிமாறவும் நார்ச்சத்து மிகுந்தது. எண்ணெயில்லாமல் செய்வதால் இதயத்துக்கு ஏற்றது. ஆவியில் வேகவைத்து உண்பதால் எடை கூடாது.

இதற்குத் தொட்டுக்கொள்ள எள்ளுத் துவையல் பொருத்தமாய் இருக்கும். எள்ளை உண்பதால் ரத்தவிருத்தியாகும். ஹீமோக்ளோபின் அதிகரிக்கும். 50 கி கறுப்பு எள்ளைக் கழுவிசுத்தம்செய்துஎண்ணெய் ஊற்றாமல் கடாயில் போட்டு வறுக்கவும்லேசாக வெடிக்க ஆரம்பித்ததும் இறக்கி ஆறவைக்கவும்அதே கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஒருடேபிள்ஸ்பூன்வெள்ளைஉளுந்தை சிவப்பாக வறுக்கவும்அதிலேயே 4 மிளகாய்ஒருசுளைபுளி,பல்  பூண்டு,ஒருடேபிள்ஸ்பூன்  தேங்காய்த்துருவல்  எல்லாம் போட்டு வறுத்து இறக்கி ஆறவைத்து உப்பு எள்ளுடன் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும்இது வெஜ் கொழுக்கட்டையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடை கூடுதுன்னு அங்கலாய்க்கிறவங்க இப்பல்லாம் அதிகரிச்சிட்டாங்க. அதுக்காக அரை வயிறு கால் வயிறுன்னு சாப்பிட்டு எடையைக் குறைக்க வேண்டாம். இந்தக் கொள்ளு சாதத்தைச் சாப்பிட்டா தன்னாலே வெயிட் லாஸ் ஆகி ஃபிட் ஆகிடுவீங்க. இதை செய்ய ஒரு கப் சாதம், 1 கப் சுத்தம் செய்து வறுத்து வேகவைத்த கொள்ளு இது இரண்டும் வேண்டும். 1 பெரிய வெங்காயம், 1 வரமிளகாய்அரைடீஸ்பூன் உப்பு, 2 பல்  பூண்டு இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டுப் பொரிந்ததும் அரைத்த கலவையைப் போட்டு அடுத்த நிமிஷமே கொள்ளு & சாதம் போட்டு நன்கு கலக்கவும்உடனே இறக்கி வைத்து நன்கு கலந்து சுண்டைக்காய்த் துவையலோடு பரிமாறவும்இதை உண்டால் ஊளை சதைக்கு குட்பை சொல்லிடலாம்.

அடுத்து இதுக்குத் தொட்டுக்க சுண்டைக்காய்த் துவையல் செய்வோம். இதுவும் நம்ம உடல் நலத்துக்கு ஏற்றது. இரும்புச் சத்து உள்ளது. 30 முற்றிய சுண்டைக்காய்களை நறுக்கித் தண்ணீரில் போடவும். 1 பெரிய வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கவும்கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து ஒரு டீஸ்பூன் கடுகு போட்டு வெடித்ததும் ஒரு டீஸ்பூன்  உளுந்து போட்டு சிவந்ததும் சிறுதுண்டு பெருங்காயம், 3 வரமிளகாய் போட்டு பொரிந்து வாசம் வந்ததும் 3 பச்சைமிளகாயைப் போடவும்அரை நிமிடம் வதக்கி சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும்அது பாதி வதங்கும்போது வெங்காயம் போட்டு வதக்கவும்முக்கால் பதம் வதங்கியதும் கால் டீஸ்பூன் உப்பு  2 சுளை புளி சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் போடவும்அரைநிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்ஆறியதும் தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளு சாதத்தோடு பரிமாறவும்மிக சுவையான துவையல் இது. துளிக்கூடக் கசப்பே தெரியாது.

நன்கு பசியெடுத்து ஆரோக்கியமா சாப்பிடணும்னா பிரண்டைப் பச்சடி ஏற்றது. இது குடலையும் சுத்தப்படுத்துது. 20 கணு பிரண்டையை ஓரத்து நரம்பு தோல் உரித்தபடி ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி கால் இஞ்சுக்கு நறுக்கிக் கொள்ளவும். 1 பெரிய வெங்காயம் 1 தக்காளியைப் பொடியாக நறுக்கவும். 3 சுளைப் புளியை 1 கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் உப்போடு ஊறவைத்து சாறெடுத்து 1 சிட்டிகை மஞ்சள் பொடி 1 டீஸ்பூன் சாம்பார் பொடி போட்டு வைக்கவும்ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் சீரகம் பெருங்காயம் பொடி போட்டு கருவேப்பிலையையும் பிரண்டையையும் போட்டு வதக்கவும்ஒரு நிமிடம் வதக்கியபின் பெரிய வெங்காயம் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்ஒரு நிமிடம் வதக்கியபின் புளிக்கரைசலை ஊற்றவும் கொதி வந்ததும் அடக்கி வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்மூடியைத் திறந்து அரைகப் வெந்த துவரம் பருப்பைப் போட்டு ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.

அதே வயிற்றுப் புண், அல்சர் என்றால் சாப்பிட வேண்டியது அகத்திக் கீரை. அகத்தை சுத்தம் செய்யும். இதில் அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி மண்டி செய்து சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட வாய்ப்புண்ணும் வயிற்றுப் புண்ணும் குணமாகும். 1 கட்டு அகத்திக்கீரையை ஆய்ந்து கழுவிக் கொள்ளவும். 10சின்ன வெங்காயத்தை உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்கடாயில்  1 டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்துத் தலா அரை டீஸ்பூன் உளுந்து சீரகம் தாளித்து பொரிந்ததும் ஒரு வரமிளகாயைக் கிள்ளிச் சேர்க்கவும்அதன் பின் வெங்காயத்தை வதக்கி கீரையையும் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி 2 கப் அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவும்கொதிவந்ததும் மூடி வைத்து சிம்மில் 10 நிமிடம் வேகவிடவும்நன்கு வெந்ததும் உப்பும் அரை கப் தேங்காய்ப் பாலும் சேர்த்து இறக்கவும். தேங்காய்ப்பால் சேர்த்ததும் கொதிக்க விட வேண்டாம் திரைந்து போய்விடும்இதை அப்படியே சூப் போலவும் அருந்தலாம் சாதத்தில் போட்டும் சாப்பிடலாம்.

இந்த வருடக் கோடை வெய்யிலை எதிர்கொள்ள ஒரு குளு குளு பச்சடி சொல்றேன். அதுல விட்டமின் பியும் சியும் கூட இருக்கு. அதுதான் நெல்லி மல்லித் தயிர்ப்பச்சடி. 6 நெல்லிக்காய்களைக் கொட்டை எடுத்துத் துண்டுகளாக்கி 1 பச்சைமிளகாய் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்அதை வழித்து ஒரு பௌலில்  போட்டு பொடியாக அரிந்த ஒரு கைப்பிடி கொத்துமல்லியையும், ஒரு கப்  தயிரையும்  சேர்க்கவும்எண்ணெயில் கடுகு தாளித்துப் போட்டு நன்கு கலந்து உபயோகிக்கவும். இது விருவிருப்பாகவும் மிகவும் ருசியாகவும் இருக்கும். நெல்லிக்காய் சாப்பிட்டால் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்கும்.

வயலட் கேபேஜ் சாலட் ஒண்ணும் சொல்லிடுறேன். ஒரு கப் துருவிய வயலட் கேபேஜில் 216 மிகி பொட்டாசியம் இருக்குதுஇதைத் தினமும் சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம்இதயத்தின் தசைகளில் ஏற்படும் அழுத்தத்தைப் போக்குதுகுடல் புண்ணைப் போக்கும்ஹெல்த்தியான ஃபைபர் டயட்ஒரு கப் துருவிய வயலட் முட்டைக்கோசுடன் வேகவைத்த பச்சை அவரை  ஒரு கைப்பிடி, பொடியாக அரிந்த பைனாப்பிள் 2 ஸ்லைஸ், பொடியாக அரிந்த சிவப்புக் குடைமிளகாய் கால் பாகம், பொடியா அரிந்த புதினா 2 டீஸ்பூன், கால் டீஸ்பூன் உப்பு அல்லது காலா நமக் போட்டு 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் தேன் கலந்து பரிமாறுங்க இன்னும் இன்னும்னு கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க.

இதுல குடலுக்குத் தேவையான நார்ச்சத்துக் கிடைக்குதுஇரத்தத்தில் கொழுப்புப் படிவதைத் தடுக்குதுஅதிகப்படியான கொழுப்பையும் சுத்திகரிச்சு வெளியேற்றிடுது. 85 சதவிகிதம் விட்டமின் சி உள்ளதால் இது ஆண்டி ஆக்ஸிடெண்டாகச் செயல்பட்டு செல்களை டிஎன்ஏவால் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் இருந்து காப்பாற்றுதுவிட்டமின்  கண்களில் ரெட்டினா பிக்மெண்ட்ஸை உருவாக்குதுஇரவிலும் கண்பார்வையை தீட்சண்யமாகவும்உடல் நலத்தை சிறப்பாகவும் பாதுகாக்குதுதொற்று வியாதிகளையும் தடுக்குது.

இதில் இருக்கும் பச்சை அவரை புரத்தச்சத்து மிக்கதுபைனாப்பிள் வாய்ப்புண்ணைப் போக்கும்சிவப்புக் குடைமிளகாய் ஜீரணத்துக்கு உதவுதுபுதினா எலுமிச்சைச் சாறு தேன் வாயை சுத்தமாக்கும்புது சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்எனவே இதையெல்லாம் அள்ளி வச்சு சாப்பிட்டாலும் ஆரோக்கியமா வாழ்வீங்க. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...