நந்தவனம் சந்திரசேகர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக மாதந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றது இனிய நந்தவனம் என்னும் மக்கள் மேம்பாட்டு இதழ்.
சென்னை மகளிர் சிறப்பிதழ், யாழ்ப்பாணச் சிறப்பிதழ், கரூர்ச் சிறப்பிதழ் என ஒவ்வொரு இதழையும் கவினுற அழகு படுத்தி வெளியிட்டு இருக்கிறார் ஆசிரியர். அந்தந்த ஊரின் பிரபலங்கள், மருத்துவர்கள், வணிகர்கள் ஆகியோரிடம் பேட்டியும் அவர்கள் பற்றிய கவிதையும், அவர்களின்/அவர்களைப் பற்றிய (கவிதைகள்) படைப்பாக்கமும் கூட இடம்பெற்றுள்ளன.
ஜனரஞ்சகமான இதழில் வெகுஜனக் கவிதைகளும் ஹைக்கூக்களும் கூட இடம்பெற்றுள்ளன. தலையங்கத்தோடு திருக்குறளும் அதன் விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
பாவைமலர் ஆசிரியை கண்டெயினர் க்வீன் வான்மதி, 1500 பெண் ஆசிரியைகளை உருவாக்கிய ஆசிரியை விஜயா, தொகுப்பாளர் ஆர்த்தி, அமுதா பாலகிருஷ்ணன் ( தொழில் முனைவோர்) , நாதன்ஸ் மரச்செக்கு அனுசியா பாலாஜி , கரூர் ரோட்டரி பாஸ்கர், வள்ளுவர் ஹோட்டல் அதிபர் செங்குட்டுவன், சமூக சேவகி சகிலா பேகம், கரூர் குரலின் ஆசிரியர் சக்தீஸ், ஆர்த்தி கண் மருத்துவமனை டாக்டர் ப ரமேஷ், நல்லாசிரியர் திலகவதி ஆகியோரின் நேர்காணல்கள் வெளியாகி உள்ளன.
அதோடு இறைநகர் மாமணி என்று தன் மனைவி ஜெய்புன்னிசாவின் படைப்புலகம் பற்றி இலக்கியச்சுடர் இலைமறைதாசன் எனப்படும் டாக்டர் எம் ஏ எம் தாஜுதீன் கொடுத்திருக்கும் பேட்டி அதி அற்புதம்.
ஜிப்ரன், தென்றல்சாய் ( நீசமாக எண்ணாதே நீச்சலடிக்கக் கற்று கொடு, வானவில்லும் வண்ணத்துப் பூச்சிகளும் ) , கவி. முருகபாரதி, கண்மணி ராஜா முகமது, சொர்ணபாரதி ஆகியோரின் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரைகள் வளம் சேர்க்கின்றன. இதில் தென்றல் சாய் தான் வாசித்த அநேக நூல்களில் இருந்து எடுத்துக்காட்டுக் கூறியும் மாபெரும் அறிஞர்களின் பொன்மொழிகளைச் சுட்டியும் கட்டுரை யாத்திருப்பது வெகு சிறப்பு.
கல்வி பற்றிய நந்தவனம் சந்திரசேகரின் கட்டுரை சிந்தனையைத் தூண்டியது. அடியேன் ஆவியூரானின் ஆன்மீகக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
நூல் நயம், பெத்தாச்சி வள்ளல், மேலை பழனியப்பன் பற்றிய கவிதை, வன்னிமகள் எஸ். கே. சஞ்சிகா, வந்தவனம் என்ற பகுதியில் வாசகர் கடிதங்கள், யாழ்ப்பாண நூல் வெளியீடு, பன்னாட்டு இதழியல் கருத்தரங்கம், பெங்களூரில் நடைபெற்ற “ தற்கால இலக்கியம்” கருத்தரங்கம், கன்னடக் கவிதைகள் மொழிபெயர்ப்பு என நிறையப் பக்கங்கள், பகிர்வுகள், புகைப்படங்களோடு வண்ணப் பக்கங்களாக வெளியாகி இருக்கும் இந்நூலின் விலை ரூபாய் 20 என்பதுதான் என்னை அதிசயிக்க வைத்த விஷயம். உலகளாவிய அளவில் இதன் ஆலோசனைக் குழுவினர் இடம் பெற்றுள்ளது இன்னொரு வித்யாசம்.
நந்தவனம் பதிப்பகம் மூலம் அவ்வப்போது நிறைய இலக்கிய நூல்களும் வெளியிட்டு வருவது பாராட்டத்தக்கது.
இதனை ஆன்லைனிலும் படிக்கலாம்.
நூல் :- இனிய நந்தவனம் ( மாதாந்திரி)
ஆசிரியர் :- சந்திரசேகரன்
விலை :- ரூ 20/-

சிறப்பு. ஜேர்மனி இதழையும் வெளியிடவுள்ளார்
பதிலளிநீக்குசிறப்பான இதழ்
பதிலளிநீக்குபாராட்டுகள்
ஆசிரியருக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி கௌசி. ஜெர்மனி இதழும் சிறப்பாக உள்ளது.
பதிலளிநீக்குநன்றி யாழ்பாவண்ணன் சகோ
நன்றி டிடி சகோ.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!