21. ஷார்ஜா - அரேபிய கலாச்சார நினைவுச் சின்னம், வனவாழ் உயிரின மையம், பாலைவன அருங்காட்சியகம்.
ஷார்ஜா
- அரேபிய
கலாச்சார நினைவுச் சின்னமும் வனவாழ்
உயிரின
மையமும், பாலைவன
அருங்காட்சியகமும்.
தலைப்பே ரொம்ப
நீளமா
இருக்கா. ஆமாம்
இன்னிக்கு இதில்
ஷார்ஜாவில் இருக்கும் மூன்று
முக்கிய இடங்களைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறேன்.
முதலில் அரேபிய
கலாச்சார நினைவுச் சின்னமும் அடுத்ததா வனவாழ்
உயிரினக் காப்பக
மையமும், மூன்றாவதா பாலைவன
வாழ்வியலின் வரலாறும் அதன்
அருங்காட்சியகமும். ( MONUMENT , ZOO & MUSEUM )
1. SHARJAH ARAB CULTURE CAPITAL MONUMENT 1998.
2. ARABIA'S WILDLIFE CENTRE.
3. THE NATURAL HISTORY MUSEUM DESERT PARK.
1998 இல் ஷார்ஜாவின் உச்ச நீதிமன்றத்தின் அங்கத்தினரும் ஆட்சித் தலைவருமான மாட்சிமை தாங்கிய டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிம் அவர்கள் யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் ஃபெடரிக்கோ மேயர் அவர்களுடன் இணைந்து திறந்து வைத்ததுதான் இந்த ஷார்ஜா அரேபிய கலாச்சார நினைவுச்சின்னம். இது அல் தாஹித் ரோட்டில் அமைந்துள்ளது.
சுற்றுச்சூழலையும் இயற்கை வாழ்வியலையும் பாதுகாக்க ஷார்ஜா எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டும் வண்ணம் மாபெரும் ஸ்தூபி ஒன்று நினைவுசின்னமாக அமைக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ ஷார்ஜாவின் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து இஸ்லாமிய கலாச்சாரம் காக்கும் இடமாக உலகறிய அறிவிப்பதற்காக அமைத்த இந்த நினைவுச்சின்னத்தை நாங்க 2009 இல் பார்த்தோம்.
22.ஷார்ஜா- அராபிய
வனவாழ்வியல் காப்பு மையம்.
இதுவும் 1999 இல் ஷார்ஜாவின் மாட்சிமை தாங்கிய ஆட்சித்தலைவர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி அவர்களால் நிறுவப்பட்டது.
விலங்குகளைப் பார்த்தபடி நாம் நடந்து செல்லும் பாதை முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட இடம் இது.
அரேபியாவில் இருக்கும், இருந்த வன உயிரினங்களின் காப்பகமாக இது செயல்படுது. இங்கே நாங்க மிகப் பிரம்மாண்டமான டைனோஸர் எலும்புக்கூடு பார்த்தோம்.
அது போக மணல் மீன்,
பாம்பு, ஒட்டகம் ஆகியவற்றின் ஃபாஸில் கூட பார்த்தோம். எவ்வளவோ உயிரினங்கள்
பாலைவனங்களில் கூட உயிர்த்துக் கிடப்பது குறித்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
மேலும் ஹைபர்நேஷன் எனப்படும் நீள் துயிலில் ஆழும் உயிரினங்கள் பற்றிய குறிப்புகளும் உண்டு. வியக்க வைக்கும் அளவில் உயிர்வாழும் உயிரினங்களும் காக்கப்படுகின்றன. அனைத்தையும் கண்டு மிரண்டு பிரமித்தோம்.
பல்வகைப் பாம்புகள் ( அரேபியன் கோப்ரா, விரியன் வகைப் பாம்புகள் , மஞ்சள் நிறப் பாம்புகள் ) , பல்வேறு வகை ஊர்வன, மீன்கள், பூச்சிகள், மிருகங்கள் என மிரட்சியாக இருந்தது.
மிருகங்களைக் காக்கும் இடங்களில் சுவர் எல்லாம் மண் பூசியது போல் இருந்தன. பல்வேறு பறவைகள், கனி தின்னி வௌவால்கள், மாமிசபட்சிணிப் பறவைகள் இருந்தன. ஃப்ளெம்ம்மிங்கோவையும், நெருப்புக் கோழியையும் கூட பார்த்தோம்.
நரி, ஆந்தை , காட்டுப் பூனை, முள்ளம்பன்றி, முள்ளெலி, போன்ற இரவு நேர மிருகங்களும் பறவைகளும் கூட இருந்தன.
குரங்கு வகையறா, புலிகள், ஓநாய்கள், அரேபிய சிறுத்தைகள் இவையும் காணக்கிடைத்தன. முக்கியமா இங்கே அனைத்தையும் பற்றி விவரமா ஆங்கிலத்தில் எழுதி வைச்சிருக்காங்க. படிக்கத்தான் டைம் பத்தல.
சம்மர்ல
குழந்தைகளுக்கு சுற்றிக்காட்ட ஏற்ற இடம். அறிவியல் அறிவையும் உயிரினங்கள் பற்றிய
அறிவையும் நேரடியாகப் புகட்டும் இடம் இது
23.ஷார்ஜா – பாலைவன வாழ்வியல் வரலாறும் அருங்காட்சியகமும்.
இதில் பாலைவனப் பூக்கள் பற்றி அறிய முடிந்தது. சாக்லேட் காஸ்மாஸ் என்றொரு பூ நான் பார்த்து வியந்த ஒன்று. மிக அற்புதம். எரிக்கும் வெய்யிலிலும் தண்ணீரில் லில்லிப்பூக்கள் கூட பூத்திருந்தன.
இது பாலைவனத்தில் எரிக்கும் வெய்யிலிலும் உயிர்க்கும் பல்வேறு வகைத் தாவரங்கள் பற்றிய சேமிப்பும் தொகுப்புமாக இருக்குது.
இதுவும் 1997 – 98 வாகில் அமைக்கப்பட்டது. இதுவும் மாணவர்களுக்குப் பயனுள்ள உயிர் கல்வி அளிக்கும் இடம்.
இங்கே இல்லாத பாலைவனச் செடியோ பூவோ புதர்களோ கிடையாது. அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதாலும் அவை பற்றிய விளக்கங்கள் விவரமாக எழுதப்பட்டிருப்பதாலும் இவற்றை ஷார்ஜா செல்லும் அனைவரும் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும்.
இங்கே பார்வையாளர் நேரம் காலை 9 – மாலை 5 – 30 வரைதான். வெள்ளிக்கிழமைகளில் மதியம்
2 – 5 . 30, வியாழக்கிழமைகளில் 11 – 5.30. திங்கட்கிழமை விடுமுறை நாள்.
எண்ட்ரன்ஸ் எவ்வளவுன்னு தெரியல. குழந்தைகளுக்கு குறைவா
இருக்கலாம்னு நினைக்கிறேன். இதன் அமைவிடம் ஷார்ஜா சிட்டியில் இருந்து 26 கிமீ
தொலைவில் இருக்கு. ஷார்ஜாவிலும் பார்க்க ஏகப்பட்ட இடம் இருக்கதால உங்க
குழந்தைகளுடன் அடுத்த சம்மரை ஷார்ஜாவில் கொண்டாடுங்க. J
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!