துபாய் மாலில் இசை நடன நீரூற்று
புர்ஜ் கலீஃபா ஏரியில் இந்த இசை வண்ண நீரூற்று மிகப் பிரபலம். மைசூர் பிருந்தாவன் கார்டன், டெல்லியின் ம்யூசிக் ஃபவுண்டன் ஆகியவற்றை எல்லாம் விட மிகப் பெரியது. 6, 600 விளக்கு & 25 வண்ண ப்ரொஜெக்டர்களால் இது இயக்கப்படுதாம். ! $ 218 மில்லியன் டாலர்கள் செலவு செய்து சுமார் 30 ஏக்கர்ல இதை அமைச்சிருக்காங்க.
இயந்திரங்கள் ( ஜெட்
& துப்பாக்கி ) மூலமாகவும், சுழற்சியின் மூலமாகவும் இந்த
நீரூற்று இயக்கப்படுதாம். உலகத்தரம் வாய்ந்த இசை
இசைக்கப்பட இந்த
நீரூற்று செயல்படத்துவங்குது. இதுலேருந்து வர்ற
வெளிச்சத்தை 20 மைல்
தொலைவிலிருந்து கூட
பார்க்கலாம்னு சொல்றாங்க.
2009 அக்டோபர் ல நாங்க போயிருந்த போது இத பார்த்தோம். இப்போதான் போஸ்ட் போடுறேன் :) ஹிந்தி, உருதுப் பாடல்கள் சில இசைக்கப்பட அதுக்குத் தோதா இந்த நடனம் அமைந்தது.
துபாய்
ஆட்சியாளரான ஷேக்
முகம்மது அவர்களுக்கு வந்தனம் செய்யும் சமா
துபாய்
என்ற
பாடலும், ஷிக்
ஷாக்
ஷோக்
என்ற
அரபு
நடனப்
பாடலும் , தூம் தானா
என்ற
ஹிந்திப் பாடலும் , ஈஷி
பிலடி
என்ற
யூ
ஏ ஏ யின் தேசியப் பாடலும் இசைக்கப்பட்டது.
சும்மா
நூறு
அடிக்கும் மேலே
வண்ண
நீரூற்றின் நடனம்
அழகுற
அமைந்தது. ஒரே
த்ரில்
& ஜில்தான். 240அடிலேருந்து 500 அடி
வரை
போகுதுன்னு சொல்றாங்க. இது
ஏற்படுத்தும் சப்தமும் பிரம்மாண்டம்தான்.
மைக்கேல் ஜாக்ஸனின் த்ரில்லர்தான் கேட்கலைன்னு வருத்தம். மிஷின் இம்பாஸிபிள், ஸ்கை ஃபால் இவற்றிலிருந்தும் இசைக்கப்படுதாம்.
ஒவ்வொரு நாளும்
ஒன்றரை
மணி
நேரம்
மாலையில் இந்த
ஷோ
நடக்குது. இந்த
ஏரியின் எல்லாப் பக்கத்திலிருந்தும் இதை
ரசிக்கலாம் என்பது
ப்ளஸ்
பாயிண்ட்.
100 எம் பிக்கு
மேலே
இருந்தா அப்லோடாதாமே ப்லாகர். ஹ்ம்ம்.
அதுனால
குட்டியா ஒரு
வீடியோ
மட்டும் பதிஞ்சிருக்கேன்.
வார
நாட்களில் மாலை
6 லிருந்து 10 மணி
வரையும் , வார
இறுதி
நாட்களில் 6 லிருந்து 11 மணி
வரையும் அரைமணிக்கொருதரம் இந்த
இசை
நடன
நிகழ்ச்சி நடைபெறுது.
துபாய்
மால்
மேலிருந்து பாயும்
அருவியும் வீரர்களும் கொண்ட
சிலைகள் உடையது.
அது
போக
தங்கச்சிலைப்பெண் ஒருத்தர் பொம்மை
மாதிரி
அசைஞ்சிக்கிட்டே பாடுவாங்க. அது
எல்லாம் வீடியோ
அப்லோடாகலை. சரி
இருக்கத போட்டிருக்கேன். பார்த்து ரசிங்க
மக்காஸ். :)
ஆகா...!
பதிலளிநீக்குYes, I too saw that beauty during my visit at Dubai.
பதிலளிநீக்குஅட்டகாசம் மாதவி :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!