எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 ஏப்ரல், 2017

சம்மர் ஸ்பாட்ஸ். SUMMER SPOTS. (OOTY,COONOOR,KODAI,YERCAUD,MUNNAR).

ஊட்டி:-

ஹாலிடே ஹோம்ஸ் & ரிசார்ட்ஸ்  உள்ள இடங்களில் தங்குவது கொஞ்சம் எளிது. முன்பே ப்ளான் செய்து ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம். ஸ்டெர்லிங் ரெசார்ட்ஸ் போன்றவை பாதுகாப்பானவை. மேலும் மொத்தமாக ஒரு தரம் பணம் கட்டிவிட்டால் வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் சென்று தங்கிக் கொள்ளலாம்.

ஹோட்டல்களிலேயே அங்கே அக்கம் பக்கமுள்ள இடங்கள் பற்றிய பாம்ப்லெட் கிடைக்கும். ஹனிமூன் கப்பிள் செல்வதானால் ஒரு நாள் இரவு  பாக்கேஜ் ஃபீஸ்ட் , பிக் அப் & ட்ராப் வெஹிக்கிள் வசதி எல்லாம்கூட கிடைக்கும்.

இந்த பூக்காடான இந்தியா எத்தனை முறை சென்றாலும் ஊட்டியில் பார்க்கலாம். வேற்றுமையில் ஒற்றுமை :) !.  அதே போல் க்ளாஸ் ஹவுஸில் பாதுகாக்கப்படும் பசுமைச் செடிகள் பக்கம் பழங்காலப் பீரங்கிகள் அழகுக்கு அணிவகுக்கும்.

மரங்களை அழித்துக் கட்டிடங்கள் கட்டி வருவதால் இங்கேயும் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கு.

வழக்கம்போல போட்டிங். நம் கையில் சுக்கானும், பெடலிங் போட்டுகளும் சில இடங்களில் உண்டு. ரேஸ் கோர்ஸ் பார்க்கலாம்.  மட்டக்குதிரை சவாரி இங்கே ஸ்பெஷல். பிள்ளைகள் ஓடி ஆடி விளையாட பிரம்மாண்டமான புல்வெளி இருக்கு. தொட்டபெட்டா சிகரம் தமிழகத்திலேயே உயரமான சிகரம். அதன் முகட்டில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது த்ரில். அப்புறம் பணம் கட்டிச் சென்றால் மேலே இருக்கும் மெகா பைனாகுலரில் ஊரை ரசிக்கலாம்.

அரசு & வங்கி ஊழியர்களுக்கு ஹாலிடே ஹோம்ஸ் இருப்பதால் அங்கே தங்கினால் செலவும் குறைவு. உணவும் அங்கேயே சமைக்கச் சொல்லி வாங்கிக் கொள்ளலாம். நாலு பேர் தங்க தாராளமான ரூம் வசதி. அப்புறம் ஊட்டி போனா அங்கே ஸ்பெஷல் ஐட்டங்களான வால் பேரிக்காய், ஹோம்மேட் சாக்லெட் & வர்க்கி வாங்க மறக்காதீங்க. இன்னிக்கும் டேஸ்டான வர்க்கின்னா அது ஊட்டி வர்க்கிதான்.


ஊட்டிலேருந்து மலை ரயில் குறிப்பிட்ட நேரங்களில் மேட்டுப்பாளையம் வரையோ , கோவைவரையோ கூட  இருக்கு. எனக்கு ஒரு தரம் கூட அதில் செல்ல வாய்க்கவில்லை.இந்த மலை ரயிலை எல்லாம் நான் படத்துல மட்டும்தான் பார்த்திருக்கேன். ஓரிருமுறை குன்னூர் ஸ்டெஷனிலும் நின்றிருக்கும். ஹ்ம்ம். ஏக்கப் பெருமூச்சு. அடுத்த தபா போனா பார்த்துக்கலாம்.

குன்னூர் சிம்ஸ் பார்க் :-

எங்கு நோக்கினும் பூக்கள் பூக்கள் பூக்கள். இதுதான் சிம்ஸ் பார்க். பார்க்கின் பசுமையிலேயே பேரை வெட்டி இருக்கிறார்கள். மிகுந்த சிரத்தையான வேலை. ஸ்வெட்டர்களும் ஸ்கார்ஃபும் கண்டிப்பாக தேவை. பகலில் வெய்யில் இருந்தாலும் மாலை நேரங்களில் குளிரத் தொடங்கிடுது.

அங்கே பார்க்கில் வேலை செய்பவர் அனைவரும் மலைவாழ் மக்கள். பனியினால் முகம் லேசாகக் கறுத்து வரண்டு இருக்கிறது. தேவதாரு, யூக்கலிப்டஸ் இன்னும் பலவகையான தாவர ஜங்கமங்கள் அடங்கிய இவ்விடங்களில் ஒவ்வொரு மரத்திற்கும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பாட்டனி படிக்கும் மக்களின் சொர்க்கபுரி இந்த ஊர்கள்.


கொடைக்கானல் :-

கொடைக்கானல் ரொம்ப ஏற்றம் இல்லாத மெல்ல மெல்ல ஏறும் மலை. தட்டையான பாதையிலேயே போவது போல் தோன்றும். இங்கே உள்ள  குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் இருந்து பார்த்தால் பழனி மலை தெரியும். குறுக்கே மலைப்பாதையில் போனால் பக்கம்தான் என்று சொன்னார்கள். :)

அதன் பின் பலவகையான பார்க்குகள் போனோம். அதில் ஒன்று  செட்டியார் பார்க். ஏன் அந்தப் பெயர் என்று தெரியவில்லை. செட்டியார்கள் கோயில் கட்டித் திருப்பணி செய்வது போல பார்க்கும் கட்டியிருப்பார்கள் போல என நினைத்துக் கொண்டோம். குணா குகை பிரசித்தம்.பைன் ட்ரீ காடுகளும் , கோல்ஃப் விளையாட்டு மைதானமும் இங்கே ஸ்பெஷல். சில்வர் ஃபால்ஸை தூர இருந்து தரிசித்தோம்.

இங்கே லேக்கை சுற்றிச் சைக்கிளிங் ரொம்ப ஃபேமஸ். வாடகை சைக்கிள் கிடைக்கும். ஓட்டிப் பழகலாம். அதே போல் மலைக்குச் செல்லும் பாதை எங்கும் பழங்கள் அமோகமாய்க் கிடைக்கும்.கொடி முந்திரி, மலை ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, பியர், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளம்ஸ், செர்ரி என வண்ணமயமான ருசிகரமான பழங்கள் அணிவகுக்கும். 

இலையுடன் கூடிய காரட் வாங்கிக் கழுவி அப்பிடியே சாப்பிட்டோம். சாலட் செய்தேன். சப்பாத்திக்கும் சப்ஜி செய்தேன் :) நாம் தங்கும் ஹாலிடே ஹோம்கள் ஃபுல் பர்னிஷ்ட், புட் எக்விப்ட்கிச்சன் கொண்டவை. குக்கரிலிருந்து கட்டர் வரை கேஸ் அடுப்பு ஈறாய அனைத்தும் இருந்தன. 

வங்கிகளுடம் டை அப் வைத்துக் கொண்டு சில தனியார்களும் ( இல்லவாசிகளும் ) தங்கள் வீட்டில் சில ரூம்களை ஒதுக்கிக் கொண்டு மற்றவைகளைக் குத்தகைக்கு விடுகிறார்கள்.


ஏற்காடு:- 

ஃப்ளவர் ஷோ வருடா வருடம் நடக்கும். அங்கே சில ஆண்டுகள் இருந்தும் போக முடிந்ததில்லை. இந்த மலைக்குப் பல பள்ளிக் குழந்தைகள் ட்ரெக்கிங் வருவார்கள். அடுக்கடுக்கான மலைத்தொடரில் அமைந்தது ஏற்காடு. மேற்குத் தொடர்ச்சி மலைகள் பசுமையாய் வெகு அழகு. மேலே ஒரு குகைக் கோயில் இருக்கு. வெளியில் வணங்கினோம். சுரங்கத்தில் இறங்கவெல்லாம் பயம்.

ஜ்யோதிஷ்மதி கோயில் தாண்டிச் சென்றோம். இங்கே போட்டிங் செல்லுமிடமும் பூங்கா சூழ அமைந்துள்ளது. மதிய உணவு ( தயிர்சாதம், எலுமிச்சை, புளி, தக்காளி சாதம், உருளை பொரியல், சிப்ஸ், ஊறுகாய் எடுத்துச்சென்று சாப்பிட்டோம்.) போட்டை விட்டு இறங்கியது வேனில் ஏறுமுன் பஞ்சு மிட்டாய் வந்தது. அஹா ருசியோ ருசி. பிள்ளைகளுக்கு முன்னால் நான் ஒரு  பலூன் குச்சியில் சுற்றிய பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன். ;)


ஏற்காடு ஏரி. இங்கே லேடீஸ் சீட், ஜெண்ட்ஸ் சீட், பகோடா பாயிண்ட் என்று வியூ பாயிண்ட்டுகள் அதிகம். பில்லர் ராக் அற்புதமான ஒன்று. அங்கே சென்று திரும்பும்போது கட்டாயம் நீங்கள் அங்கே விற்கும் மிளகாய் பஜ்ஜியை ஒரு கை பார்க்காமல் திரும்ப மாட்டீர்கள். ஆனது ஆச்சு. காரசாரமா சாப்பிட்டு சூடா ஒரு டீயையும் ஊத்திக்கிட்டு வரலாம் :)


மூணாறு :-

மூணாறு ஸ்டெர்லிங் ரெசார்ட்டில் நல்ல வசதியாக இருந்தது. கோவையிலிருந்து செல்லும்போதுதான் உடுமலை வரை சென்று அனுமதி பாஸ் வாங்க வேண்டி இருக்கு. அதன் பின் ரங்க்ஸின் அலுவலக நண்பர் ஒருவர் வீட்டில் உணவருந்தி விட்டு சென்றோம்.

வழியில் வன விலங்குகள் அங்கொன்றும் இங்கொன்றும் தட்டுப்பட்டன. சில மான்கள் . ஆனைமலை வரை சென்று வரையாடுகளைத் தரிசித்தோம்.  இங்கே அநேகம் டீ எஸ்டேட்தான். அதனால் எங்கெங்கு நோக்கினும் டீ செடிகள். வரும்போது டீ, தேன் எல்லாம் வாங்கி வந்தோம்.

இங்கே வழியில் பாரடைஸ் பிரியாணி வாங்கி தமிழ்நாட்டு பிரியாணி மாதிரி இல்லையே என்று அலுத்து சலித்துத் தின்றோம். ( அப்புறம் ஹைதை சென்றபிந்தான் தெரிந்தது நிஜாம்களின் பிரியாணியே , அசல் பிரியாணியே இதுதான் என்று ) என்ன இருந்தாலும் நம்மூரு தலைப்பாகட்டி, சம்பூர்ணா, அம்சவல்லி பிரியாணி மாதிரி எல்லாம் வருமா. ?



3 மணிக்கே வழி நெடுக ஒரே புகை மூட்டம் போலப் பனி. சாலையே தெரியவில்லை .ட்ரைவர் பத்திரமாகக் கொண்டு சேர்த்தாரே என்று டபிள் தாங்க்ஸ் சொல்லி பசங்களின் ரூமில் இரவு தங்கச் சொன்னோம். இரு அறைகளிலும் டபுள் பெட் போக எக்ஸ்ட்ரா ஒரு சோஃபாவும் இருந்தது சௌகர்யம். ரூம் ஹீட்டர் இருந்ததும் எந்நேரமும் வெந்நீர் வந்ததும் ரொம்பவே சௌகர்யம்.

வியூ பாயிண்ட்ஸ் அதிகம். இரவில் அங்கே பில்லியர்ட்ஸ், கேரம் முதலான எல்லா ( இண்டோர் கேம்ஸ் ) விளையாட்டுக்களும் இருந்தன. தனித்தனியாக ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவில் சிக்கன் மஞ்சூரியன் ரொம்பவே சூப்பர்.

மேட்டுப்பட்டி அணை, குண்டனை ஆகிய இன்னும் சில இடங்களைக் கண்டு களித்தோம். குறிஞ்சிப் பூவும் அபூர்வமாகக் கண்ணில் பட்டது. நாம் சென்ற போது ஒரு ஹனிமூன் ஜோடியில் மனைவி முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது ஹாட் நியூஸ். பயமாகப் போய்விட்டது. 

பொதுவா இம்மாதிரி இடங்களுக்கு நாம் குடும்பமாகக் குழந்தைகளுடன்  சென்று டன்கணக்கில் அசடு வழிய அநேகர்  புதுமணத்தம்பதியினராகவே வந்து இருந்தார்கள் என்பது ஸ்பெஷல் தகவல். :)


3 கருத்துகள்:

  1. அனைத்து இடங்களும் அருமையான இடங்கள். தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி மை மொபைல் ஸ்டூடியோஸ்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...