எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 ஏப்ரல், 2017

பட்டாக்கத்தி பைரவனும் சண்டியரும்.

எனக்குப் பிடித்த பாடல்களை அவ்வப்போது பதிவேற்றுவதுண்டு. இங்கே சில பாடல்கள் என் ரசனைத் தேர்வாய் உங்களுக்காக யூ ட்யூபிலிருந்து. :)

மெல்லினமே மெல்லினமே

என் இருபத்தைந்து வயதை ஒரு நொடிக்குள் எப்படி மறைத்தாய்.. என்ற வரிகள் பிடிக்கும் அதோடு விஜயின் டான்ஸ் பிடிக்கும். :)ஒருவர் வாழும் ஆலயம். 

இதன் லிரிக்ஸுக்காகப் பிடிக்கும்.
Something Something Unakkum Enakkum -Something-divx 

பிரபுதேவா டைப் ஃபாஸ்ட் டான்ஸ். அதிலும் ஜெயம் ரவியும் த்ரிஷாவும் இதில்தான் இயல்பாய் நடித்திருப்பார்கள். செம ஆட்டம்.
Engengo Sellum (Pattakathi Bairavan) -SPB/S Janaki 

பாட்டு என்னவோ மெலடிதான். ஆனால் படம் பேரு பட்டாக்கத்தி பைரவன். இந்தப் பாடலோடு பல நாள் ஹம் செய்ததுண்டு. நிலாவேஏஏஏஏ நிலாவேஏஏஏஏ நான்ன்ன்ன்ன்ன்ன் நீஈஈஈஈஈஈஈ நாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :) 
Roja Ondru 

எவர் ஃபேவரைட் , எவர் டிலைட், எவர்க்ரீன் சாங்க்.தியாகராஜனை அவ்வளவா பிடிக்காதுன்னாலும் சரிதாவை நெம்பப் பிடிக்கும் :)
straw berry kanney. 

கஜோலின் கண்ணுக்காகப் பிடிக்கும். இன்னொரு ஹிந்திப் பாடலில் இவரது முடியை நான் காதலித்திருக்கிறேன். :) அவ்வளவு அழகு முடி. எடுக்கப்பட்டிருந்த விதமும் அழகு. கண்ணாடி டீப்பாய்க்கு மேல் கருப்பு அலையாய்க் குவியும் கூந்தல். பாடல் மனசுக்குள்ள நிக்குது . ஞாபகம் வந்ததும் பகிர்கிறேன். :) 
poo nee poo

தனிமையின் பாடல். தனியே தன்னந்தனியே என்ற பாடலைப் போல இதுவும் ரொம்பப் பிடிக்கும். 
ennavoo eethoo

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இந்தப் பாடல். ஜெயம் ரவிக்கு சம்திங் படம் மாதிரி ஜீவாவை கொஞ்சம் பிடிக்க வைத்த பாடல் இது. 
poogathey

பாவனாவும் ஜெயம் ரவியும். பாடல் காட்சிக்காகவும் வரிகளுக்காகவும் பிடிக்கும். ilangathu veesuthu

ரசிகாவை ரொம்ப ரசித்த பாடல். குண்டுக் கன்னங்களும் குறும்புக் கண்களும் வெற்றிலை போட்ட வாயுமாக அசால்டாக நடித்திருப்பார். காட்டானாக விக்ரமும் கல கல சூர்யாவும் துறு துறு லைலாவுமாக ரொம்ப டிலைட்ஃபுல் சாங்க். இதில் விக்ரம் சைக்கிள் ஓட்டுவதாக வரும் காட்சி சூப்பர் :) 
sandiyaree

புகைப்படத்தில் முகத்தோடு முகம் வைத்து அபிராமி பாடும் காட்சி ரொம்பப் பிடிச்சது.

இயல்பாவா ஒரு கிராமத்துத் தெனாவட்டு லுக்கும் எளிமையும் கொள்ளை அழகுமாக அசத்தி இருப்பார். அதற்கு ஈடாகத் தலைவரின் நடிப்பும் மிடுக்கும் ஆஹா ஓஹோ :) எங்க ரெண்டு பேருக்குமே பிடிச்ச பாடல் காட்சி & படமும்கூட.


3 கருத்துகள்:

 1. இம்மாதிரிப் பாடல்கள் எழுத முயற்சி செய்கிறீர்களா

  பதிலளிநீக்கு
 2. பாலா சார் வாய்ப்புக் கிடைச்சா ஓரளவு கேட்டபடி எழுதலாம். எழுதி எல்லாம் வைச்சுக்கல :)

  நன்றி டிடி சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...