எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 ஏப்ரல், 2014

அன்ன பட்சி - அணிந்துரையில் கனிந்துரைத்த சுசீலாம்மா.

நன்றி அதீதம் சிறப்பான முன்மொழிதலுக்கு. :-





 மிக்க நன்றி சுசீலாம்மா..


////எம்.ஏ.சுசீலா
[எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்,தமிழ்ப்பேராசிரியர்-பணி ஓய்வு(பாத்திமாக்கல்லூரி)]
:

அன்னப்பட்சியை நீவியபடி…..

*கொப்பளித்துப் பெருகும் உற்சாகமும் மலர்ச்சியும் கொண்ட பதின்பருவத்துப் பெண்ணாக, வேதியல் மாணவியானாலும் சமகாலப்படைப்புக்களின்பால் தணியாத தாகம் கொண்ட வாசகியாக, தினம் ஒரு கவிதையை எழுதிப் பார்த்தபடி மலர்ந்து கொண்டிருக்கும் துடிப்பான படைப்பாளியாக….இப்படிப் பல பரிமாணங்களில் ‘80களில் எனக்கு அறிமுகமாகியிருந்த என் அன்பு மகளும் மாணவியுமான தேனம்மை லட்சுமணனின் இன்றைய வளர்ச்சிக்கு உரைகல்லாகக் கைகளில் தவழும் ’அன்னப்பட்சி’யைப் பரிவோடு நீவித் தந்தபடி இந்த அணிந்துரை……


*கால வெள்ளத்தில் எதிர்நீச்சல் போட்டுக் கரையேறியாக வேண்டிய கட்டாய நிர்ப்பந்தங்களில் இளமைப்பருவத்தில் நம்மில் துளும்பிக் கொண்டிருந்த ஆர்வங்களைப் பலரும் தவற விட்டு விடுகிறோம். கரைந்தும், நீர்த்தும், தொலைந்தும் போய்விடாதபடி அவற்றைத் தன் உள்ளத்தில் அக்கினிக்குஞ்சாய் அடைகாத்து, உரிய தருணம் கனிந்தபோது அவற்றுக்கு வெளிப்பாடும் தர முயன்றிருக்கும் தேனம்மையை எண்ணும்போது உண்மையிலேயே பெருமையாய் பெருமிதமாய் உணர்கிறேன்.

ஒரு பத்திரிகையாளர்,விமரிசகர்,கட்டுரை,சிறுகதை ஆக்கங்களை உருவாக்குபவர்,வெற்றிகரமான வலைப்பதிவர் என்று பல முகங்கள் இருந்தாலும் தேனம்மையின் தேடல் உள்ளம் நிறைவு காண்பது கவிதைக்குள்ளேதான் என்பதன் நிரூபணம் அவரது கவிதைத் தொகுப்பான ‘அன்னப்பட்சி’. ’


*‘அன்னப்பட்சி’ தொகுப்பிலுள்ள கவிதைகள் ஒற்றை இலக்கை மட்டுமே குறிவைப்பவை அல்ல; ஒற்றைப்பரிமாணம் கொண்டவையும் அல்ல. சமூகப்பார்வை, தனிமனித அவசங்கள் ஆகிய இரண்டுக்கும் ஒத்த இடம் தந்திருப்பவையாக வெவ்வேறு உள்ளடக்கங்களுடன் மலர்ந்திருப்பதனாலேயே வேறுபட்ட ரசனை கொண்ட வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய தன்மை இயல்பாகவே இவற்றுக்கு அமைந்து விடுகிறது.


* நீரை ஒதுக்கிப் பாலை மட்டும் பருகும் அன்னங்களும் நம் நெஞ்சில் நிலைத்திருப்பது போலத் தேனம்மையின் அன்னப்பட்சியிலிருக்கும் அருமையான சொல்லாட்சிகளும் பொருள் நுட்பங்களும் நம் உள்ளங்களில் என்றென்றும் கல்வெட்டாய் உறைந்திருக்கும். எதிர்காலத்தில் இன்னும் பல சிறப்பான ஆக்கங்கள் தேனம்மையிடமிருந்து வெளிப்பட இந்த அன்னப்பட்சி இலக்கிய ஆர்வலர்களிடம் தூது செல்லட்டும்.


**—————
அன்னப் பட்சி
பக்கங்கள்:96; விலை: ரூ 80
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்
கிடைக்கும் இடம்:
சென்னை புத்தகக் கண்காட்சியில்.. அரங்கு எண் 667 & 668
அகநாழிகை புத்தக உலகம்,
எண்: 390, அண்ணா சாலை, KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15.
தபாலில் வாங்கிட: aganazhigai@gmail.com

டிஸ்கி 1. :- இந்த அணிந்துரையை ஜனவரி 2014 அதீதம் இணைப்பிலும் காணலாம். 

 டிஸ்கி .2.:-
”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்

இணையத்தில் வாங்க.

.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.

By post aganazhigai@gmail.com

என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை.  

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...