வியாழன், 3 ஏப்ரல், 2014

ராகவன் சாம்யேலின் “ சுனை நீர்.”

ராகவன் சாம்யேலின் கதைகள் சிலவற்றை வலைத்தளத்திலும் சிற்றிலக்கியப் பத்ரிக்கைகளிலும் வாசித்திருக்கிறேன். “ வெய்யிற் பந்தல்” என்பது அதிலொன்று. அந்தக் கதை ஏற்படுத்திய உணர்வு விவரிக்க இயலாததாக இருந்தது.

இந்தத் தொகுப்பில் 21 சிறுகதைகள் இருக்கின்றன.

திருப்பதி சாமி குடையில் மனைவிக்கான பரிவும் ஒளிந்திருப்பது அழகு.

எங்கள் அம்மா வீட்டில் குடியிருந்த சோலை அக்காவின் மனநலமற்ற மகன் சோலையைப் பழனியில் கொண்டு விட்டுவிட்டு வந்தது வழி மயக்கம் படிக்கும்போது என் நினைவுக்கு வந்தது.

மஞ்சள் வெய்யில்தான் எனக்கு மிகவும் பிடித்த கதை. குழந்தை கட்டாயம் வேணுமாடா ஜெயந்தி என விசாரிக்கும் ஜெயந்தியின் மாமா ஒரு குழந்தை என்றால் தேன்கூட்டு மெழுகின் பிச்சம்  நாயுடுவும் நமக்குக் குழந்தையாகத் தெரிவது ஆச்சர்யம்.அம்மா அறிந்த பாத்திரம்  எல்லாரும் அறிந்ததுதான். சோப்புக் குமிழ் ஒரு சந்திப்பின் நீட்டிப்பை வித்யாசமாக்கிய கதை. அரிசி தின்னும் மயிலிறகு வித்யாசமான கருவைச் சொல்லிய கதை.

சுனை நீர் மனதை ஆட்டி வைத்த கதை. எனினும் இன்னும் பல கதைகளும் அப்படியே.நுழை புலமும் அதில் ஒன்று.

கண்ணாடித் தேரும் வாசனைத் தைலமும் இந்திர தனுசும் ஊஞ்சல் விழுதுகளும்அற்றது பற்றெனினும் ரொம்ப யதார்த்தம் என்றாலும் கொஞ்சம் மனசாட்சியை உரசிப்போனவை.

இப்படி ஒவ்வொரு கதையிலும் நமக்குத் தெரிந்த ஒருவரைச் சந்திக்க நேருகிறதே ராகவன் சாம்யேலின் கதைகளின் அற்புதம்.

எல்லா பிரபல எழுத்தாளர்கள் மாதிரியும் சில பல கெட்ட வார்த்தைகள் உரையாடல் வேகத்தில் கலந்து வருகிறது. இது கதைக்களனுக்கான நியதி என்பது போலாகிவிட்டது இப்போதெல்லாம். அதிலும் ஆண்கள் எழுதினால் அதை அனைவரும் யதார்த்தமாக எடுத்துக் கொண்டு ரசிக்கவே செய்கிறார்கள். இவை இல்லாமலும் கூட இந்த சிறுகதைகள் இயல்பாகவே இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

மிக சுவாரசியமான இக்கதைகளை நான் சென்னை டு பெங்களூர் ரயில் பிரயாணத்தில் அக்கம் பக்கம் நிமிர்ந்துகூடப் பாராமல் படித்து முடித்தேன். 

அகநாழிகையில் இரண்டாம் பதிப்பாக மலர்ந்துள்ளது.

விலை ரூ. 120.


1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...