எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 மார்ச், 2013

அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர்.( OBSESSIVE COMPULSIVE DISORDER )

அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர்.

”என்ன விஷயமாம்.? “ ரொம்ப நேரமாக ஃபோனில் பேசிக்கொண்டிருந்த  ஷாமைப் பார்த்துக் கேட்டார் செல்வம்..

“அதொண்ணுமில்ல பாஸ் .. அவங்களுக்கு கம்யூட்டர்ல ஏதோ ப்ராப்ளம். அதத்தான் கேட்டாங்க. “

“ கம்யூட்டர்ல எல்லாம் க்ளாஸ் எடுக்குறே .. சொல்லவே இல்ல..”

“ சே. என்ன பாஸ் நீங்க அது பத்தி இல்ல. அவங்க ப்லாக் எழுதுறாங்க இல்ல.. “

“ஆமாம் அதான் ஒண்ணுக்கு நாலா நாலு ப்லாக் எழுதிக் குமிக்குறாங்களே.. அதான் பிரச்சனையா.. அத நாம இல்ல சொல்லணும்.. :) “

“ இல்ல பாஸ் முழுசா கேளுங்க.. தினமும் ப்லாக் போஸ்ட் போடாட்டா ஒரே மண்டைக் குடைச்சலா இருக்காம். நடுவுல விட்ஜெட்ஸ், காட்ஜெட்ஸ்ல் எல்லாம் விசிட்டர்ஸ் கவுண்ட், பேஜஸ்  வியூ எல்லாம் தாறு மாறா ஏறணும். அதுக்காக தினம் ஒரு போஸ்ட்.. ”


“இம்சை அரசி இருபத்தொண்ணாம் புலிகேசின்னு சொல்லுங்க.”

“ சத்தமா பேசாதீங்க பாஸ். கேட்டுக்கிட்டே வந்துரப் போறாங்க. “

“ இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா.. உங்களைப் பெண்புலின்னு இப்பத்தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்னு சமாளிச்சிடலாம். “

“ ரொம்ப துள்ளாதீங்க பாஸ்.. அடுத்து அவங்க உங்களுக்குத்தான் ஃபோன் பண்ணுவாங்க. அலர்ட் பண்ணிட்டேன்.”

” சரி என்ன ப்ராப்ளமாம். “

” தினம் நாலு ப்லாகும் இருக்கான்னு செக் பண்ணிக்கணும். போஸ்டை எண்ணிப் பார்க்குறது, காட்ஜெட்ஸை எண்ணிப் பார்க்குறது, நியோகவுண்டரை முறைச்சுப் பார்க்குறது .. இதெல்லாம் வழக்கமா நடக்குறதுதான்..”

“ அதாவது சோப்புப் போட்டுக் கை கழுவின பின்னாடியும் திரும்ப திரும்ப கழுவுறது., பூட்டின வீட்டை இழுத்து இழுத்துப் பார்க்குறது, பூட்டின லாக்கரை பாங்குக்காரனே வந்து அலார்ம் அடிக்கிற வரைக்கும் திருகித் திருகிப் பார்க்குறது இது மாதிரி ப்லாகை ஓபன் பண்ணிப் பண்ணிப் பார்க்குறாங்களாமா.. சொல்லுங்க இப்போ யாரும் ப்லாகெல்லாம் எழுதுறதுல்ல.. எல்லாம் ஓல்டு ஃபேஷன்..  மிஞ்சி மிஞ்சிப் போனா  10 சினிமா ரிவியூ, 30 புத்தக ரிவியூ,  500 கவிதை, 300 கட்டுரை வைச்சிருப்பாங்க.. இத ஒருத்தன் திருடி என்ன பண்ணிடுவான்.. ஃபேஸ்புக்குல போட்டாலாவது 4 பேர் படிப்பாங்க.. அதுல முக்காவாசி என்ன 99 சதவிதம் மொக்கை போஸ்ட்.. எதுக்கும் காரசாரமா கருத்து சொல்றதே இல்ல. யாராவது ஒறண்டை இழுத்தா மட்டும் பட்டும் படாமயும் ஒரு பதில்.. இதுக்கு என்ன இண்டர்போல் பாதுகாப்பு கேக்குறாங்களா.”


“ இல்ல பாஸ். ஃபேஸ்புக்குல வேற 2000 ஃபோட்டோ, ப்லாகுலயும் போட்டு இருக்காங்கள்ல.. அத எல்லாம் யாரும் டவுன்லோட் பண்ண சான்ஸ் இருக்குன்னு கேள்விப்பட்டங்களாம் . ”

“ ஃபோட்டோவை திருடி போடலாம்னா ஒரே ஒரு ஃபோட்டோ போதும். ப்ரொஃபைல் பிக்சர் இருந்தா கூட போதும் . டவுன்லோட் பண்ணி மாடிஃபை பண்ணலாம். இது எல்லாம் ஒரு மேட்டர்னு கேட்டாங்களா..”


” அவங்க ஜி மெயிலை ஓபன் பண்ணும்போதெல்லாம் ஒரு திருடன் போட்டோ போட்டு அலர்ட் பண்ணுதாம். செல்ஃபோன் நம்பரை செக் பண்ண சொல்லுதாம். ஃபேஸ்புக்கை லாகவுட் செய்யும்போதெலாம் லாகின் அப்பிடின்னு சொல்லுதாம். ஏதோ டிவைஸ் லாகின் ஆயிருக்குன்னு பயமுறுத்துதாம் ஜி மெயில்.. திகில்ல ஒறைஞ்சு போயி அவங்க ஃபேஸ்புக்கை அவங்களே திறக்க பயப்படுறாங்களாம். நாம ஏதோ ஹேக் பண்ணிட்டம்னு சொல்லிடுமோன்னு பயமாம்... பாஸ்வேர்டு மறந்து போய் டிவிட்டர், லிங்கிடென்ல ஆரம்பிச்ச அக்கவுண்ட் எல்லாம் பாதியில நிற்கிற மாதிரி இதுக்கும் தினம் பாஸ்வேர்டு மாத்துறதால எது பாஸ்வேர்டு , எது வீட்டுல இருக்கவங்க பேருன்னே தெரியலையாம். வீட்டுல இருக்க எல்லாரையும் பார்க்கும் போதே அவங்க பேரோட  ஏ பி சி டி, ஒன், டூ, த்ரீ ஃபோர், கமா, புள்ளி, செமிகோலன், ஹைபன் அப்பிடின்னு பேர் தெரியுதாம். ”


“ பிள்ளையார்பட்டிப் பிள்ளையார், குன்றக்குடி முருகன்,  காரைக்குடிக் கொப்பாத்தா இதெல்லாம் ஏன் விட்டுட்டீங்க..”


“ பாஸ் இன்னும் நீங்க மேட்டருக்கே வர்ல.. அவங்க எங்கயோ ஒரு காலேஜ்ல பேச போறாங்களாம். “


“ ஓஓஓ. புரிஞ்சுடுச்சு..எதுனா லிங்க் எடுத்துக் கொடுத்துட்டு சீக்கிரம் எஸ்ஸாவுங்க. ”


“போகுமுன்னாடி ஏகப்பட்ட சந்தேகம் வருமே அவங்களுக்கு.. நல்லா இருக்கனா. நல்லா பேசுறனா.. டைப்படிக்காம நிதானமா சொன்னேனா, எல்லாருக்கும் என் கருத்து போய் சேர்ந்திருக்குமா, நல்ல வொர்த்புல்லா இருந்துச்சா என்னோட ஸ்பீச்.. யூ ட்யூபுல கேட்டீங்களா, என்னோட ஆல்பம் போட்டு இருக்கேனே .. ஃபேஸ்புக்குல பார்த்தீங்களா..  ஐயையோ நேரமாச்சு.. வந்துரப் போறாங்க.. சீக்கிரம் சீக்கிரம் லாகவுட்.”


”எப்பிடி இருக்கீங்க செல்வம் & ஷாம்.. என்னோட பெஸ்ட்  ஃப்ரெண்ட்ஸ் நீங்க..  நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்டா கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும்.”


செல்வமும் ஷாமும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபடி .. “ அப்பவே சொன்னேன்.. ஹ்ம்ம் விதி யாரை விட்டது. ஆஃப்லைனுக்குப் போயிருக்கலாம். .”

“ ????!!!!! தாங்க்ஸ் தேனம்மை.. “-- ஷாம்.

“ வெல்கம் .. நல்லா பேசினீங்களா.. குட்.. இன்னும் அடுத்து ஒரு  நாவல் எழுத ஆரம்பிங்க.. ”

“ ரொம்ப நாளா சொல்றீங்க.. பட்.. நாந்தான் முயற்சி எடுக்காம இருக்கேன். “

ஷாம் ஆஃப்லைனுக்குப் போய்விட செல்வம், “ ஓகே முயற்சி பண்ணுங்க.. பெஸ்ட் விஷஸ்.”

” தாங்க்ஸ் ஷாம்.. “ எங்கே காணாம போயிட்டாரு.

“ தாங்க்ஸ் செல்வம்.” எனக்கு ஒரு காலேஜ்ல மகளிர் தினத்துல பேச கூப்பிட்டிருக்காங்க.. இப்போ  வெளியுலகத்துல பெண்கள் நிலைமை எப்பிடி இருக்குன்னு உங்க கருத்தைச்  சொல்லுங்க. . ”

“ இதோ ரெண்டு லின்க் உங்களுக்கு அனுப்பி இருக்கேன்.. பார்த்துக்குங்க..”

” தாங்ஸ் செல்வம்..” எங்கே காணாம போயிட்டாரு.. ரைட்டு ரெண்டு லிங்க் கிடைச்சுச்சே.. அதப் பார்ப்போம்.. :)


( இவங்க ரெண்டு பேரும் கணேஷ் வஸந்த் இல்ல.. நானும் சுஜாதாவும் இல்ல.. ) 
----- ஹாஹாஹா அந்த அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர் இந்த இடுகையிட்டது 4. 25. pm. 13. 03. 2013.8 கருத்துகள்:

 1. இதுக்கு மருந்தே இல்லையா தேனக்கா :-))

  பதிலளிநீக்கு
 2. ஹஹஹஹ்ஹா....ஜூப்பர்...இந்த லச்சுதான் பாவம் :p

  பதிலளிநீக்கு
 3. அருமையா இருக்குங்க... ஆமாமா இப்பெல்லாம் அப்ஸஸிவ் கம்பள்ஸிவ் டிஸார்டர் கேசஸ் அதிகமாயிடுச்சாம் ...

  பதிலளிநீக்கு
 4. அட இந்த எழுத்து ஸ்டைல் நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
 5. சுவாரஸ்யமான பதிவு. இது மூன்றாவது கருத்து. எண்ணிப் பார்த்துக்குங்க!

  பதிலளிநீக்கு

 6. மேடம்,
  இந்த பின்னூட்டம் எழுதித்தான் தீரவேண்டுமா என்று யோசித்தபின்பு தான் எழுதுகிறேன்.
  முதற்கண், இந்த ஓ.ஸி.டி.யின் ஒரு பகுதி அல்லது துவக்க நிலை தான் நீங்கள் விவரிக்கும் நிலை. அதாவது கைகளை அலம்பிவிட்டேனா,
  வீட்டை பூட்டி விட்டேனா, என்று ஒரு தரம், இரண்டு , மூன்று தரம் என்று துவங்கி , அது நாளடைவில் எண்ணிக்கை சரியாக எண்ணினோமா
  என்று சந்தேகப்பட்டு, அதே காரியத்தில் திரும்பவும் திரும்பவும் ஈடுபட்டு, வெளியே வர இயலாது போவது.

  இந்த டிஸார்டர் எண்ணிக்கை துவங்கும் வரை அவ்வளவு பாதிப்பதில்லை எனினும் அடுத்த ஸ்டேஜ் இவர்கள் ஏன் ஒரு வேலை செய்வதற்கு
  இத்தனை நேரம் ஆக்குகிறார்கள் என்று குடும்பத்தில் மற்றவர்களுக்குத் தெரியாமல், இது ஏதோ பைத்தியக்காரச் செயல் என்று அவர்களைப்
  பற்றித் தப்புக் கணக்கு போட்டு, அவர்கள் இல்லாதபோது அவர்களை ஏளனம் செய்து இளக்காரமாக பேசுவது என்றெல்லாம் இருக்கிறது.
  நமது குடும்பத்திலோ அல்லது சமூக வாழ்க்கையிலே ஒரு நண்பருக்கோ இந்த டிஸார்டர் இருக்கிறது என நமக்கு தெரிந்து விட்டால் அவரை
  ஒரு பயிற்சி பெற்ற மருத்துவ மன இயல் நிபுணர் ( மெடிகல் சைசயாட்ரிஸ்ட்) இடம் அழைத்துச் செல்லவேண்டும்.

  துவக்கத்தில் இதை ஸி.பி.டி. என்று சொல்லப்படும் காக்னிடிவ் பிஹேவியர் தெரபி இதற்கு ஓரளவுக்கு பயன்படும் என்று சொன்னாலும்
  பிறகு செரோடொனின் ( மூளையில் உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன்) மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிடவேண்டும் அதுவும்
  வாழ் நாள் முழுவதும் தொடர்ந்து சாப்பிடவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

  மூளையில் உற்பத்தி ஆகும் ஐந்து ஹார்மோன்கள், டோபமின், அசிட் கொயலின், அட்ரினலின், போல இந்த செரோடனின் தகுந்த விகிதத்தில்
  சுரக்காததாலும் அல்லது மற்ற ஹார்மோன்களுடன் சரியான விகிதத்தில் கலக்க இயலாததாலும் இந்த நோய் ஏற்படுகிறது.

  இவர்களை, தயவு செய்து நகைக்கு உட்படுத்தும் படி எதுவும் எழுதாதீர்கள். இவர்கள் மன நோய் வாய்பட்டவர்கள் இல்லை. இவர்களை அன்புடன் ஆதரியுங்கள். முடிந்தால் மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள். இதில் ஒரு கஷ்டம் என்னவென்றால், இவர்கள் துவக்க காலத்தில்
  அதாவது ஒரு ஐந்து அல்லது ஏழு வருடங்கள் இந்த நிலை தனக்கு இருக்கிறது என்றோ அதனால் தான் தான் அப்படி செய்கின்றேன் என்று
  ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தான் செய்வது சரி என்றும் அடம் பிடிப்பார்கள்.

  தினப்படி வலையில் ஒரு பதிவு எழுதித்தான் ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள், தான் எழுதிய பாடங்கள், நடத்த இருக்கும் சொற்பொழிவுகள் சரிதானா என்று பார்ப்பவர்கள் இந்த காடிகரியில் வருவார்களா என்று உறுதியாக சொல்ல இயலாது. அவர்கள்
  அடுத்த பாடத்திற்குச் செல்லும்பொழுது அந்த பாடத்தை பார்ப்பார்கள். அது குறித்து தான் பேசுவார்கள். ஓ.சி.டி. அதே பாடத்தில்
  அதே நிகழ்வில் தான் இருக்கச்செய்யும். அடுத்த காரியத்தை , ஏன், அது போன்ற இன்னும் ஒரு காரியத்தையும் செய்ய விடாது. மேலும் இது ஒரு ஜெனடிக் நோய் என்றும் தீர்மானமாக சொல்ல இயலாது. ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிக்கிறது. எல்லா சமூகங்களிலும் இந்த டிஸார்டர் இருக்கிறது. மேலை நாடுகளில் இந்த நிலை துவங்கும்பொழுதே இவர்களை ஒரு சைகாலஜிஸ்டிடமோ அல்லது சைசயாட்ரிஸ்டிடமோ அழைத்துச் செலிகிறார்கள். நமது நாட்டில் இவர்களை கிண்டல் செய்கிறார்கள். மிகவும் வருந்தத்தக்க நிலை.

  இன்னமும் ஒரு முறை சொல்லுகிறேன். இவர்களை நகைக்கு உட்படுத்தாதீர்கள். இவர்களை மையமாக வைத்து நகைச்சுவை என்ற பெயரிலே இவர்களை வர்ணிக்க வேண்டாம். இந்த ஓ.ஸி.டி. யின் துவக்க நிலையின் காணப்படும் சிம்ப்டம்ஸ் கிட்டத்தட்ட 20க்கு மேலே. இதில் பத்துக்கு மேலே இருந்தால் தான் ஓ.ஸி.டி. இதைப்பற்றி இதுவரை நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெடிகல் கட்டுரைகளை கடந்த பத்து வருடங்களாக படிக்கிறேன். மேலும் விவரங்களை வேண்டுமானால், www. ocdfoundation.org என்னும் தளத்தில் பாருங்கள். இதனால்
  வேதனையுறும் மக்கள் துன்பத்தை பாருங்கள்.

  மன வேதனையுடன் இந்தப் பதிவு எழுதுகிறேன்.
  உங்களை வருத்தப்படும் அல்லது கோபப்பட வைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. தம்மைப்பற்றி சமூகம் என்ன நினைக்கிறது, தனது
  உற்றார், சுற்றத்தார் என்ன நினைக்கிறார்கள் என்பது இந்த நிலையின் தீவிரத்தை கட்டுப்படுத்துகிறது அல்லது அதிகரிக்கச்செய்கிறது.

  இந்த பின்னூட்டத்தை நீங்கள் இடுவது உங்கள் விருப்பம்.

  சுப்பு ரத்தினம்.  பதிலளிநீக்கு
 7. ஆமாம் இல்லைடா சாந்தி..:(

  இளங்கோ மச்சி எதுக்கு இதுல லச்சுவை இழுக்குறீங்க.. பாவம்.. :)

  நன்றி எழில்

  நன்றி செல்வம்

  நன்றி குமார்

  நன்றி கௌதமன் இது ஆறாவது கருத்து.. ஹ்க்கும்..:)

  நன்றி சுப்புரத்தினம் சார். இது சும்மா என்னுடைய வலைப்பதிவு பற்றிய காணாம போயிடுமோன்ற பயம், உணர்வுகளை எழுத அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டரை உபயோகப்படுத்திக்கிட்டேன். அவங்கள நிச்சயமா இளக்காரமா எண்ணி அல்ல. எந்த விதத்திலாவது என் பதிவு அவங்கள சொல்லி காயப்படுத்துற மாதிரி இருந்தா மன்னிச்சுக்குங்க.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...