எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 மார்ச், 2013

ஃபேஸ்புக் பரணின் சாளரம் & குங்குமம் தோழியின் நான் எனப்படுவது யாதெனில்

பரணின் புதிய பகுதியான சாளரம்
நம் ஃபேஸ்புக் பதிவர்களின் ரசனைகள். விருப்பு , வெறுப்புகள் குறித்து பேசுகிறது..

இந்தவார சாளரத்துக்காக நம் அன்பின் சகோதரி தேனம்மை அவர்கள்எனக்குப் பிடிச்ச கலரு...
**********************

எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னா மல்லிகைப் பூவுன்னு சொல்லலாம். அப்புறம் மருதாணி வச்சுக்கிறது . வெத்திலை பாக்கு போடுறதுன்னு சின்னப் புள்ளயில பிடிச்ச ஐட்டம் எல்லாம் இப்ப அவ்வளவா இண்ட்ரஸ்ட் இல்லாம போச்சு.

ஏன்னு தெரியலை.. எல்லாத்துலயும் ஒரு அசட்டை. பொதுவாவே நான் மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. பளிச்சுன்னு ஒரு சேலை. லேசா கண்மை. பொட்டு. அவ்வளவேதான்.


தமிழ்நாட்டுல மட்டுமில்ல உலகம் பூரா வெள்ளைக் கலர் தோலும், கருநீளத் தலைமுடியும், நல்ல கிளி மாதிரி மூக்கும் உள்ள பொண்ணுங்களத்தான் விரும்புறாங்க.. அப்புறம் நம்மள மாதிரி ஆளுக்கெல்லாம் இடம் எங்க.. நாம மேல வர்றது , அங்கீகரிக்கப்படுறது நம்ம குணத்துலயும் கருத்துக்கள்லயும் கொள்கையிலயும், பர்சனாலிட்டிலயும் நம்ம திறமையிலயும் உழைப்புலயும்தான் இருக்கு.

அட போவட்டும் விடுங்க.. எப்ப நம்ம நமக்காக ஏத்துக்கிறாங்களோ அப்ப ஏத்துக்கட்டும். பிறப்பை, இறப்பை நாம தீர்மானிக்காததுபோலத்தான் நம்ம நிறத்தையும் அழகையும்கூட நாம தீர்மானிக்கிறதில்லை. ஆனா பாருங்க போன வாரம் ஒரு திருமணத்துக்கு போயிருந்தேன். அங்கே எல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா பொண்ணுங்க கூட்டம். ஒரே வாசனை வேற.

எல்லாம் சிங்கப்பூரில இருக்க நம்மாளுங்கதான். என்னோட நெருங்கிய சொந்தக்காரங்க ரெண்டு பேரு .” சிங்கப்பூரில இருக்கவங்க எல்லாம் சிகப்பா அழகா இருப்பாங்க” சொன்னாங்க பாருங்க.. எனக்கு எதிர்ல இருந்த தூண்ல முட்டிக்கலாம் போல இருந்துச்சு.

பொதுவா பிறப்புலயே இயற்கையா நிறமா இருந்தாலும், மேலும் இருக்கும் ஊரின் கிளைமேட் சார்பாவும், இன்னமும் பொருளாதார நிறைவான வாழ்க்கையினாலயும், தியானம், யோகா போன்றவை செய்து மன நிம்மதியினாலயுமே நல்ல பொலிவான முகம் கிடைக்க முடியும். அத எல்லாம் அவங்ககிட்ட சொல்லிப் புரிய வைக்க முடியாதுங்கறதால இங்கே சொல்லிக்கிறேன்..புதுநிறந்தான் எனக்குப் பிடிச்ச கலரு.. அட அது நம்ம நிறம்தாங்க..

இது பத்தி வருத்தப்பட்டு மேக்கப் போட்டு முகத்தை வெள்ளையடிச்சுக்காதீங்க.. அது நிலையில்ல.. நீங்க என்ன நினைக்கனும்னா போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் அழகாய் இருந்தவர் யாரடா..?


எனை மயக்கும் பாட்டு
********************

இந்தப் பாட்டு படுத்தி வைக்கிற பாடு என்ன வேற எதுவும் படுத்தினதில்லை.. அது என்னவோ தெரியலை..என்ன மாயமோ தெரியலை.. சந்தோஷம்னாலும் பாட்டு, துக்கம்னாலும் பாட்டு. எதோ ஒரு பாட்டுக் கேட்டா மனசு லேசாயிடுது.

நான் ரொம்ப ரொமாண்டிக் சாங்க்ஸ் வேற கேப்பேன். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..? ரிலாக்ஸ் பண்ணனும்னு நினைக்கும்போதெல்லாம் பாட்டுத்தான்.

முன்ன எல்லாம்  நான் பயங்கர புத்தகப் பைத்தியமா இருந்தேன். நிஜமாவே பூந்தி வாங்கின பேப்பரைக் கூட விட மாட்டேன்.  ஒரு புத்தகம் வாங்கினா முன்பக்கத்துல இருந்து கடைசி ஃபுல்ஸ்டாப் வரை படிச்சாதான் நிம்மதி. ( கொடுத்த காசு வீணாகலை அப்பாடா ). ட்ரெயின்ல , பஸ்ஸுல வீட்டுல காட்டுலன்னு எங்க விட்டாலும் நானும் புத்தகமும், புத்தகமும் நானும்தான்.
நாலாங்கிளாஸ் படிக்கும்போதே தினமணிக் கதிர்ல என் பெயர் கமலாதாஸும், சாவி, மணியன் தொடர்கதைகளும் படிச்சிருக்கேன்.

ஆனா ஒரு பத்தாப்பு வந்ததும் என்ன ரசாயன மாத்தம்னு தெரியலை. இந்த சினிமாவுல நம்ம கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், பட்டுக்கோட்டையாரு, இப்படி யாரோட பாட்டு பாடினாலும் நமக்காகத்தான் பாடுறாங்களோன்னு ஒரே மயக்கம்.

அட நம்ம சந்தோஷமா இருந்தா அப்ப சாயங்கால சிலோன் ரேடியோவுல ஒரு பாட்டு வரும். துக்கமா இருந்தா மத்தியானம் ரெண்டு மணிக்கு ஒரு ஹிந்தி பாட்டு வரும். நாமளும் சேர்ந்து பாடலாம், ஆடலாம், பாடிக்கிட்டே அழலாம்.

சினிமாவே கூட பெரியவங்க பார்த்துட்டு நல்லா இருந்தாதான் கூட்டிகிட்டே போவாங்க. இப்ப மாதிரி ஐ பாட் எல்லாம் கிடையாது. ரேடியோ, டேப்ரெக்கார்டர தொட்டாலே ஒதை விழும். அம்மா அப்பா போடும்போது கேட்டே இந்தப் பித்து.

மார்கழி மாசம் அரைப்பரிச்சைக்கு படிக்க எந்திரிக்கிறமோ இல்லையோ கோயில்ல லௌட் ஸ்பீக்கர்ல திருவிளையாடலும், சாமி அம்மன் பாட்டுக்களும் கேட்க எந்திரிச்சிருவோம். எல் ஆர் ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன் இவங்க பாடின பாட்டை எல்லாம் பாடியே வளந்தோம்.

தமிழ்ப்பாட்டு இப்பிடி வளந்துச்சுன்னா யாதோங்கி பாரத்தும், பாபியும், ஆராதனாவும் அம்மாவோட டேப்ரெக்காடர் புண்ணியத்துல மனப்பாடம் ஆச்சு .

ரங்கமணிய கட்டிக்கிட்டதும் அவுங்க கேட்ட மைக்கேல் ஜாக்சன், எல்விஸ் ப்ரஸ்லின்னு கேட்டு வளந்தேன்.

புள்ளங்க காலத்துல ரிக்கி மார்ட்டின், ஈகில்ஸ், 50 செண்ட், எமினம், டாங்கோ, ராப், பாப்புன்னு பெரிய லெவல்ல வளந்தாச்சு. (எனக்கு கேக்கத்தான் தெரியும். பாடத் தெரியாது ஆமாம். ஏன்னா என் பாத்ரூம் பாட்டால நொந்து நூடுல்ஸாகி இருக்கும் ரெங்கமணிகிட்ட வாக்கு கொடுத்து இருக்கேன்.. ஹிஹி பாட்டை எல்லாம் சிதைச்சு சிதைச்சு பாடமாட்டேன்னு.. )

நாம சத்தியசந்தில்ல.. அதுனால பாட மாட்டோம். ஆனா அந்தப் பாட்டப் பூரா ஃபேஸ்புக்குல போட்டு இம்சைப் படுத்துவோம்.


எனை பாதித்த மரணங்கள்
*************************

இத எழுத பல நாளா நினைச்சிக்கிட்டு இருந்தேன். பாவத்தின் சம்பளம் மரணம்னு தேவாலயச் சுவர்கள்ல படிச்சிருக்கேன். ஆனா அது இருக்கவங்களோட சிந்தனையிலும் படிஞ்சு துயரத்தைக் கொடுத்துக்கிட்டே இருக்கு.

எங்க அம்மா வீட்டுல பின்பக்கம் குடி இருந்தவங்க வள்ளி அக்கா. அவங்க அக்கா மகன் முருகன். நல்ல பையன். பளிச்சின்னு இருப்பான். பொங்கல் என்றால் அவர்களே ஆள் கூட்டாமல் ஏணி எல்லாம் வைத்து வெள்ளை அடிப்பாங்க. அப்பவெல்லாம் பசங்களப் பார்த்தா பேச மாட்டோம். கிட்டத்தட்ட 10 வயசுக்கப்புறமே பசங்க இருக்க திசைப்பக்கமே தலை வச்சுக்கூடப் படுக்கிறதில்லை. எனவே பேசுனதே இல்லை.

ஒரு தரம் ஐயப்ப பூஜையில அவன் பாடி கேட்டிருக்கேன். டி எம் இ படிச்சிட்டு வேலை பார்த்துக்கிட்டு இருந்தான். திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் ஆகிடுச்சு. திடீர்னு பார்த்தா முருகனுக்கு அடிக்கடி வயித்துல வலி வருமாம். அப்புறம்தான் கிட்னி ஃபெய்லியர்னு தெரிஞ்சுச்சாம். அதுக்குள்ள வியாதி முத்திட்டதால காப்பாத்த முடியலயாம் இறந்துட்டானாம்னு அம்மா சொன்னாங்க.. தக்குன்னு ஆயிப்போச்சு. வெள்ளைஅடிச்ச சுவர்களைப் பார்க்கும் போதெல்லாம் சில சமயம் முருகனோட பால் சிரிப்பு ஞாபகம் வரும்.

அடுத்து நெருங்கின சொந்தக்காரர் ஒருத்தரு. என்ன ஆச்சுன்னு தெரியலை. ஒரு பள்ளிக்கூடத்துல வேலை செய்துகிட்டு இருந்தாரு. கல்யாணமாகி 14 வருஷம் ஆச்சு. புள்ளகுட்டி இல்லை. ரெண்டு பேருதான். ஏதோ நல்லாதான் இருந்தாங்க. திடீர்னு ஒரு தீவாளி அன்னிக்கு சாயங்காலம் பூரா மனசு என்னவோ போல இருந்துச்சு. என்னவோ மூச்சுக்குக் கூட கஷ்டப்படுறாப்புல. என்ன காரணம்னு தெரியாம துக்கம் தொண்டையை அடைக்கிறாப்புல.. பார்த்தா மறுநாள் காலையில ஃபோன் வருது. அந்த சொந்தக்கார் தூக்குப் போட்டு இறந்துட்டாருன்னு. அப்ப பார்த்து அவரு பொண்டாட்டி கோயிலுக்கு தீபம் போடப் போயிருக்காங்க.

எதுக்கு தூக்குப் போட்டுக்கிட்டாரு, என்ன பிரச்சனைன்னு தெரியலை. அவரா செய்துகிட்டாரா, யாரும் எதுவும் செய்துட்டாங்களான்னும் புரியல. அன்னிக்கே அங்க இருந்த சொந்தக்காரங்க எல்லாம் போயி திடீர்னு ஈமக்கிரியை எல்லாம் முடிச்சிட்டு வீட்டையே காலி பண்ணிட்டு வந்துட்டாங்க. பின்னதான் தெரிஞ்சுது அவருக்கு கொஞ்சம் மனநோய் இருந்ததாம்னு.சாப்பாடுப் பிரியர் அவர். பாராட்டி பாராட்டி சொல்லி சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடுவாரு. எதுக்குப் பிறந்தாருன்னு தெரியமுன்னாடியே இறந்துட்டாரு. ஆனா அவர் பொண்டாட்டிக்கு அடுத்து திருமணம் ஆகி ( ஏற்கனவே மனைவி இழந்து இரண்டு பிள்ளகளோட இருந்த ஒருத்தருக்கு) அவங்க புள்ள குட்டிகளோட இன்னொரு வெளிநாட்டுல இருக்காங்க..

அவர் வாங்கி சேர்த்த இடம், வீடு, பணம் எல்லாத்துக்கும் அர்த்தம் இல்லாமலே போச்சு .. பழைய புகைப்படத்த பார்க்கும் போதெல்லாம். எதுக்குப் பொறந்தாரு..என்ன ஆச்சு ஏன் போயிட்டாருன்னு ஒரே மண்டைக் குடைச்சலா இருக்கும். யாருக்கும் பதில்தான் தெரியல..

அடுத்து என் பெரிய பையன்கூட டெல்லியில டி டி இ ல படிச்ச சரவணன். அவன் இந்திரபுரியில இருந்தான். ஒரு முறை என் பையனைப் பார்க்கப் பள்ளிக்கூடம் போனபோது பக்கத்து சீட்ல உக்கார்ந்து இருந்தான். சிரிப்புன்னா அப்பிடி ஒரு சிரிப்பு முகம்கொள்ளாத சிரிப்பு. பூங்கொத்தை அடுக்கினா எப்பிடி இருக்கும். அப்பிடி ஒரு பூக்குழந்தை முகம். வருஷாவருடம் இப்ப இங்க வர்ற டெங்கு அப்ப அங்க வந்துச்சு. பச்சப் புள்ள டெங்கு ராஷஸ்னால திடீர்னு 3 நாள்ல இறந்துட்டான். நம்பவே முடியல. அவன் சாவான்னு. அடக் கடவுளே ஏன் பச்சப் புள்ளக்குக் கொடுத்தேன்னு ரெண்டு நாளா ஒண்ணும் புரியாம ஒரே வருத்தம். அதுலேருந்து எனக்கு வீட்டுல யாருக்கு எந்தக் காய்ச்சல் வந்தாலும் ஒரே பயம்தான்.

முகநூல் நட்புல முதல் பிரிவு மாலா ஜெயராம். நேரடியா பார்த்ததில்லைன்னாலும் இன்பாக்ஸ்ல வீட்டுக்கு வர்றதா தெரிவிச்சிருந்தாங்க. ரஷ்யாவுக்கு டூர் போன இடத்துல நுரையீரல் கோளாறு ஏற்பட்டு திடீர்னு இறந்துட்டாங்க. அந்தச் சிரிச்ச முகத்தை இன்னிக்கும் புகைப்படத்துல பார்த்துகிட்டுத்தான் இருக்கேன்.. அவங்க இறந்துட்டாங்கங்கிறத நம்ப முடியாம. ஹாய் தேன் என்று என்றாவது வந்து அழைக்கலாம் என்ற எண்ணத்தோடும்.

இப்பிடி எத்தனை சாவைப் பார்த்தும்.., நமக்கு ஒண்ணுமில்ல நாம இதை சேர்ப்போம். அதைச் சேர்ப்போம்னு சேர்த்து வச்ச எத்தனையோ ராஜ பரம்பரை எல்லாம் மாட மாளிகை, கூட கோபுரமெல்லாம் மண்மேடா சரிஞ்சு கிடக்கு.

அப்புறம் முக்கியமா.., நீ இந்த குலத்துல பொறந்த.. நான் இந்த குலத்துல பிறந்தேன்னு பிரிவினைகள் கண்டதையும் பாத்துக்கிட்டு..,எந்தப் பாவமும் அறியாத எந்தப் பாதகமும் செய்யாதவங்களை., உங்ககூட பக்கத்துணையா இருக்கவங்களை வெறுக்காதீங்க.. உங்க நட்பு வட்டத்துல மட்டுமில்ல .. உலகம் பூரா உள்ள எல்லா மக்களையும் நேசிக்கக் கத்துக்குங்க.

முடிஞ்சவரை எதிர்மறை கருத்துக்களையோ, தூண்டிவிடும் கருத்துகளையோ பொது வெளியில் விதைக்காதீங்கன்னு ஒரு அக்காவா, அம்மாவா சொல்ல விரும்புறேன். சாவு மட்டுமில்ல.. இதுபோன்ற பிரிவுகளும்தான் துக்கத்தை உண்டாக்குகின்றன.. இருக்கும் வரை சேர்ந்திருப்போமே.சந்தோஷமா..


பொறுமையா நேரமெடுத்து வாசிச்ச அனைவர்க்கும் என் நன்றி..!!


பரண் சாளரத்துக்காக தேனம்மை லக்‌ஷ்மணன்.
நன்றி ஃபேஸ்புக் பரண். 9 கருத்துகள்:

 1. அருமையான பகிர்வுங்க... அக்கா... கடைசி பத்திகள்ல மரணங்கள் பத்தி பேசும்போது உண்மையாகவே மனசு கலங்குதுங்க... எல்லோரும் அதைத்தான் சந்திக்கப்போறோங்கற உண்மை உணராமல் எவ்வளவு போட்டிகள்,பொறாமைகள் அவற்றால் இழக்கும் மன நிம்மதி.... தேவையான அறிவுரை அக்கா... நன்றி

  பதிலளிநீக்கு
 2. இந்த பகிர்வு மூலமா உங்க ரசனையும், மனசையும் ஓரளவு புரிஞ்சுக்க முடிந்தது...:)

  //முடிஞ்சவரை எதிர்மறை கருத்துக்களையோ, தூண்டிவிடும் கருத்துகளையோ பொது வெளியில் விதைக்காதீங்கன்னு ஒரு அக்காவா, அம்மாவா சொல்ல விரும்புறேன். சாவு மட்டுமில்ல.. இதுபோன்ற பிரிவுகளும்தான் துக்கத்தை உண்டாக்குகின்றன.. இருக்கும் வரை சேர்ந்திருப்போமே.சந்தோஷமா..//

  சரியா சொல்லியிருக்கீங்க...

  பதிலளிநீக்கு
 3. உங்ககூட பக்கத்துணையா இருக்கவங்களை வெறுக்காதீங்க.. உங்க நட்பு வட்டத்துல மட்டுமில்ல .. உலகம் பூரா உள்ள எல்லா மக்களையும் நேசிக்கக் கத்துக்குங்க.//

  /முடிஞ்சவரை எதிர்மறை கருத்துக்களையோ, தூண்டிவிடும் கருத்துகளையோ பொது வெளியில் விதைக்காதீங்கன்னு ஒரு அக்காவா, அம்மாவா சொல்ல விரும்புறேன். சாவு மட்டுமில்ல.. இதுபோன்ற பிரிவுகளும்தான் துக்கத்தை உண்டாக்குகின்றன.. இருக்கும் வரை சேர்ந்திருப்போமே.சந்தோஷமா..//

  அருமையான கருத்தை சொன்ன உங்களுக்கு நன்றி.
  உங்கள் எல்லா கருத்துக்களும் மிக நன்றாக இருக்கிறது தேனம்மை. படங்கள் அழகு.(மன அழகு தெரிகிறது)

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் தேனம்மை.இணையத்தைக்கலக்கும் இலக்கிய பெண்கள் வரிசையில் நீங்களும் இடம் பெற்றமைக்கு.இது போல் பல அங்கிகாரங்கள் கிடைக்க இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. தினகரன் வசந்தம் இதழில்(மகளிர் தின சிறப்பு மலர்) இணையத்தைக் கலக்கும் இலக்கியபெண்கள் வரிசையில் நீங்கள் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள். ராமலக்ஷ்மி பதிவு மூலம் அறிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 6. வெகு சுவாரஸ்யம். படங்கள் அருமையாக இருக்கின்றன. நீங்க வடிவமைத்ததா? அல்லது பத்திரிகையினரா?

  பதிலளிநீக்கு
 7. சாளரக்கதவைத் திறந்தமைக்கு வாழ்த்துகள் தேனக்கா..

  பதிலளிநீக்கு
 8. நன்றி எழில்

  நன்றி கோவை2தில்லி

  நன்றி கோமதி அரசு

  நன்றி ஸாதிகா

  மிக்க நன்றி கோமதி அரசு.:)

  நன்றி ஹுசைனம்மா. படங்கள் எல்லாம் அவர்களே வடிவமைத்துக் கொண்டார்கள்.

  நன்றி சாரல். :)

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...