எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 25 ஜூலை, 2012

அரிசிச் சோறா.. அப்பிடின்னா..?

அரிசிச் சோறா.. அப்பிடின்னா..?

இப்படி உங்க வாரிசுகள் கேட்கும் காலம் அதிகமில்லை ஜெண்டில் மேன் & உமன்.. மாதா மாதம் ஏறிக்கிட்டு இருந்த அரிசி விலை ( பால், பஸ், பெட்ரோல் இதெல்லாம் தனிக்கதை).. இன்னிக்கு நாளுக்கு நாள் ஏறுது. தங்கம் விலை மாதிரி நேத்து என்ன விலை. இன்று என்ன விலைன்னு டிவியில் கூட சொல்லலாம். பங்குச் சந்தை சதியா இருக்குமோன்னு கூட ( கமாடிட்டீஸ் மார்க்கெட் மாதிரி அரிசி மார்க்கெட்..) தோணுது.


ரங்கமணி தமிழ்நாட்டுல வாங்கின அரிசிதான் இந்த நெலமைன்னா, நான் கர்நாடகாவுல வாங்கின அரிசி அதோ ரகம். என்னன்னா நாம இங்கே கர்நாடகா பொன்னிதான் சாப்பிடுறது. அதே கர்நாடகாவுல நீங்க போயி சல்லடை போட்டு சலிச்சாலும் கிடைக்காது. ஹாஃப் பாயில், பாரா பாயில், பச்சரிசி அப்பிடின்னு பல ரூபத்துல இருக்கும். ஆனா தமிழ்நாட்டுல இருக்க தரம் இருக்காது. சரி ஏதோ ஒண்ணுன்னு வாங்கிட்டு வந்து சமைச்சா சாதம் வெள்ளை வெளேர்னு மல்லிகைப் பூ மாதிரி இருந்துச்சு. ஆனா பாருங்க ரெண்டு நாள் சாப்பிட முடியல.

நம்ம இடுப்பை சுத்தி ஒரே வலி. கடைசி விலா எலும்பு ஜாயிண்டாயிட்டா ( பஸ் டயரை சுத்தி மாட்டினா )எப்பிடி டைட்டா இருக்கும். அதுபோல உதரவிதானம் எல்லாம் எங்க இருக்குன்னு வலி மருந்து தடவியே கண்டுபிடிச்சுகலாம். என்ன ஆச்சுன்னா மூச்சுக் குத்து பிடிச்சாப்புல வாயுப் பிடிப்பு. ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல சாப்பிட்ட நாலு நாளும். இப்பவெல்லாம் கர்நாடகாப் பொன்னியைப் பார்த்தாலே கிடுகிடுங்குது.

போன தரம் 34 ரூபாய்னா இந்தத் தரம் 38 ரூபாய். சரின்னு ரெண்டு நாள் கழிச்சு தமிழ்நாட்டுக்கு வந்தா அடங்கொப்புரானே.. 42 ரூபாயாம்.

சின்ன வயசுல பள்ளிக் கோடம் படிக்கும் போது மதிய உணவு திட்டம் செயல்பாட்டுல இருந்த சமயம். ( இப்போ உள்ள சத்துணவுத் திட்டம் இல்ல) . அப்ப பள்ளிக்கூட வாத்தியார் என்ன சொல்வாருன்னா தினமும் உங்க அம்மா சாதம் செய்ய அரிசி எடுக்கும் போது ஒரு கைப்பிடி எடுத்து ஒரு பையில போட்டுக்கிட்டே வாங்க. அதோட தினமும் ஒரு பைசாவும் போட்டுகிட்டு வாங்க. ஒரு மாதம் கழிச்சு அந்த அரிசியை அன்னதானத்துக்கு கொடுங்க. அந்த பைசாவை காய் செலவுக்கு கொடுங்க. என்பார். என்ன காரணம்னா நாம் சாப்பிடும் சாப்பாட்டை எளியவங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கணும்கிற எண்ணம் மாணவப் பருவத்திலேயே வரணும்னுதான்.

இந்த அரிசிங்க எல்லாம் தமிழ் நாட்டுல விளையறதே இல்லையா.. அல்லது தண்ணீர்ப் பற்றாக்குறையா, இல்லைனா விவசாயிங்க எல்லாம் நிலத்தை ரியல் எஸ்டேட்காரங்களுக்கு வித்துட்டு வேற வேலைக்குப் போயிட்டாங்களான்னு தெரியலை.

ஏன்னா எங்க அம்மா பாட்டி காலத்துல எல்லாம் ஐ. ஆர். 20, பொன்னி புழுங்கல்னு கிராமத்துலேருந்து நெல்லுங்க வரும். அந்த நெல்லை அவிச்சு காயப்போட்டு ( பத்தாயம் இருக்கும் அதுல அடைச்சு வைச்சிருப்பாங்க) . அதை மெஷின்ல கொடுத்து அரைச்சுட்டு வந்து தவிடு நீக்கி, பொடைச்சு, உமி, கல் பொறக்கி, குருணையை எல்லாம் இட்லிக்கும் பலகாரத்துக்கும் வைச்சுகிட்டு, முழு அரிசியை சோறு வடிப்பாங்க. அந்த அரிசியில் இருந்த ருசி இப்ப எதிலேயும் இல்ல. ( அது போல கீரை, கத்திரிக்காய், தக்காளின்னு சோகக் கதையில சிக்கின காய்கறிங்க லிஸ்ட் பெரிசு ) .

பெரியவங்களுக்கு எல்லாம் வயசாயிடுச்சு. அரிசி அறையைத் திறந்து பத்தாயத்திலிருந்து எடுத்து அவிச்சு அரைச்சுப் பொடைச்ச பாக்கியத்தக்கா எல்லாம் இப்ப இல்லை. அது போல ஊரூரா டெண்டோட சுத்துற நமக்கும் அரிசியை வாங்கித் தின்னுதான் பழக்கம்.

வெயிட்டைக் கொறைங்கன்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. நலம் விரும்பிங்க சொல்லிட்டாங்க. பத்ரிக்கைகளும் சொல்லிட்டாங்க. ஆனா நம்ம பாழாப் போன தமிழ்நாட்டு வயிறு சப்பாத்தி, பூரி, பொங்கல் எல்லாம் பார்த்தா கெஞ்சி கெஞ்சி ரெண்டு இட்லியோ, தோசையோ போடச் சொல்லி படுத்துதே.

முன்னயெல்லாம் பிள்ளைகுட்டிக்காரங்க வீடுன்னு 3 ஆழாக்கு 4 ஆழாக்கு போட்டு வடிப்பாங்க. அந்த அரிசிக் கஞ்சியில் உப்பு போட்டுக் கூட குடிச்சிருக்கோம். அப்புறம் தனிக்குடித்தனம் வந்த பிறகு ஒழக்கரிசிச் சோறா அது கொறைஞ்சுச்சு. இப்ப சமீபகாலமா ரெண்டு பேருக்கு அரை ஆழாக்குக்கு கம்மியாதான் சோறாக்குறது. ஒரு கப் சோறுன்னா ஒரு கப் பொரியல், ஒரு கப் கூட்டுன்னு சாப்பாடு.

3 கோர்ஸ் விருந்து சாப்பிட்ட தமிழனுக்கு ( சிப்பல் தட்டுலயும், கரண்டி கரண்டியாவும் , குமிச்சு வைச்சு சாம்பார்ல பாத்தி கட்டி, ரசத்துல வரப்பு வச்சு, தயிர்ல கப்பல் ஓட்டினவங்களுக்கு )இப்ப என்ன நிலைமைன்னா, ஒரு 10 கிராம் அரிசியை வைச்சு ஸ்பூனால சோத்தை வைச்சுகிட்டு அதுக்கு பக்கத்துல ( ஒரு கிலோ அரிசி 42 ரூபாய்னா, ஒரு கிலோ காயும் அதே விலைதான் - 42 - 60/-) பொரியல் ஒரு கப், கூட்டு ஒரு கப் வைச்சு சாப்பிட்டுக்கலாம். காய்கறியைப் போட்டாவது வயித்த ரொப்ப வேண்டி இருக்கே.. வெயிட்லாசுன்னு சந்தோசப் பட்டுக்கலாம்.

வர்ற விருந்தாளிங்களுக்கும் இன்னும் ஒரு ஸ்பூன் சாதம் வைச்சுக்குங்கன்னு விருந்தோம்பல் பண்ணலாம். நிச்சயம் இன்னும் ஒரு தலைமுறைக்குப் பிறகு சோறுங்கிறதே காணாமப் போயிடும்.  நம்ம வலைத்தளத்துல ( மியூசியம்னு சொல்லி அலுத்துப் போச்சுங்க.. அது வேற ஏன் எடத்த அடைச்சுகிட்டு) இருக்குற நம்ம போஸ்டைக் காண்பிச்சு இதுதான்பா அரிசி சோறு. சோழ நாடு சோறுடைத்துன்னு நாங்க எங்க காலத்துல படிச்சிருக்கோம். பார்த்திருக்கோம்னு சொல்லி பெருமைப் பட்டுக்கலாம்.


12 கருத்துகள்:

  1. இன்று பீசா வும் பிரட்டும்தான் நாகரீகம் என்று ஆகிவிட்டது. தங்கள் கருத்தோவியம் மிக அருமை. எழுத்துநடை அதைவிட சிறப்பு நன்றி மேடம்- ராமகிருஷ்ணன் வானவில்

    பதிலளிநீக்கு
  2. இன்று பீசா வும் பிரட்டும்தான் நாகரீகம் என்று ஆகிவிட்டது. தங்கள் கருத்தோவியம் மிக அருமை. எழுத்துநடை அதைவிட சிறப்பு நன்றி மேடம்- ராமகிருஷ்ணன் வானவில்

    பதிலளிநீக்கு
  3. அருமையாச் சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
    தொடருங்கள்....

    நன்றி...
    திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  4. இப்போதைய அரிசியினால் உடல் உபாதைகள் வரக்காரணமே ,அளவுக்கதிகமான இரசாயன உரம், பூச்சி மருந்து பயன்ப்பாடு ஆகும்.

    மேலும் அரிசியை அரைக்கும் போது சுண்ணாம்பு சேர்த்து வெண்மையாக்குவார்கள், எனவே நன்கு அலசிவிட்டு சமைப்பது நல்லது.

    குக்கரில் சமைக்காமல் வடித்து தண்ணீர் எடுத்து விட வேண்டும்.முன்ன்ர் எல்லாம் சாதம் வடிநீர் என்பது நல்ல ஆரோக்கிய பானம் போல குடிப்பார்கள், இப்போது குடித்தால் பூச்சி மருந்து வாசம் தான் வருது.

    அரிசி வியாபாரத்தில பெரும் கொள்ளையே நடக்குது, அரசாங்கம் விலையைக்கட்டுப்படுத்த நெல் விலையை மிகக்குறைவாக வச்சாப்போதும்னு குறைவாக நிர்ணயிக்குது , அந்த விலைக்கு விற்று விவசாயியால் லாபம் பார்க்க முடியாது, தொடர்ந்து விவசாயம் செய்தால் நட்டம்னு , பலரும் இப்போ கூலி வேலைக்கு போயிடுறாங்க.

    விவசாயத்தில இருக்க கொஞ்சம் பேரும் எப்போ விவசாயத்தை விட்டு போகலாம்னு நேரம் பார்த்துக்கொண்டு இருக்காங்க.

    வியாபாரிகள் 100 சதவீத லாபம் வச்சு தான் அரிசி விக்குறாங்க, நாட்டில் நெல்லே விளையலைனாலும் கவலைப்பட மாட்டாங்க, இறக்குமதி செய்து இன்னும் அதிக லாபம் வச்சு விற்பாங்க.

    விவசாயிகளின் விளைச்சளுக்கு விலை நிர்ணயம் செய்யும் அரசு ஏன் வியாபாரிகளின் அரிசிக்கு விலை நிர்ணயம் செய்யக்கூடாது?
    இப்போது விலை ஏற்றத்துக்கு காரணமே இந்தாண்டு பருவமழை இன்னும் ஆரம்பிக்கவில்லை, மேட்டூரில் தண்ணீரில்லை, எனவே வரும் சாகுபடியில் விளைச்சல் குறையும் என்ற யூகத்தினால்.இப்போது விற்கும் அரிசி போன போகத்தில் விலை குறைவாக வாங்கிய நெல்லே.


    அரிசி விலை ஏறினால் விவசாயிக்கு லாபம், இல்லை, மக்களுக்கும் லாபம் இல்லை.

    எனது இப்பதிவுகளை பாருங்கள் ,விவசாயத்தின் இன்றைய நிலைப்புரியும்:

    வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பசி!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோ,
    நல்ல பதிவு, வரும் காலத்தில் அரிசியை விட உருளைக் கிழங்கே அதிகம் உண்ணப் படும் என படித்தேன்.

    இயற்கைச் சூழலை பாதுகாக்க விட்டால் நம் உணவு உள்ளிட்ட பல விடயங்களை இழந்து விடுவோம்.நன்றி

    பதிலளிநீக்கு
  6. அருமையான இடுகை தேனக்கா.. அரிசி விளையற வயலெல்லாம் வீட்டு மனைகளாகிட்டா அப்றம் அரிசின்னு பேப்பர்ல எழுதித்தான் சமைக்கணும் போலிருக்கு

    பதிலளிநீக்கு
  7. ரெண்டு ஸ்பூன் சோறு எனக்கு(ம்) எடுத்து வச்சுருங்க.

    பதிலளிநீக்கு
  8. போன வாரம்தான், விகடன்ல அரிசிப் பஞ்சம் வர வாய்ப்பிருக்குன்னு எழுதிருந்தாங்க. அத நெனச்சே கலங்கிப் போயிருந்தேன். இப்ப நீங்களும்...

    //விருந்தாளிங்களுக்கும் இன்னும் ஒரு ஸ்பூன் சாதம் வைச்சுக்குங்கன்னு விருந்தோம்பல் //

    டீஸ்பூனா, டேபிள்ஸ்பூனா அக்கா? :-)))))

    பதிலளிநீக்கு
  9. மிகவும் அருமையான பதிவு சகோதரி!
    நல்லா யோசிச்சு பாருங்க முன்பெல்லாம் திணை மற்றும் வரகு போன்ற தாணியங்கள் இருந்தது அது தற்ப்போது யாரும் பயிரிடுவதில்லை அதுபோலத்தான் நெல்லும் ஒரு காலத்தில் இருக்காது அபோது நீங்கள் சொல்கிறமாதிரி படத்தைக்காட்டி ஆறுதல் படவேண்டியதுதான்.


    உண்மைவிரும்பி.
    மும்பை.

    பதிலளிநீக்கு
  10. நன்றி ராம்

    நன்றி தனபால்

    நன்றீ வவ்வால்

    நன்றி சார்வாகன்

    நன்றி சாரல். உண்மைதான்:(

    நன்றி ஆர் ஆர் ஆர்

    நன்றி துளசி. இன்னும் ரெண்டு ஸ்பூன் போட்டுக்குங்க துளசி..:)))

    ஹாஹா சரியான கேள்வி கேட்டீங்க ஹுசைனம்மா டேபிள் ஸ்பூன்ல போட்டா கோடீஸ்வரங்க.. டீஸ்பூன்ல போட்டா மதியதர மக்கள்னு சொல்லலாம்.:)

    நன்றி எனது கவிதைகள்

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...