எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 ஜூன், 2012

அடுத்த ஜனாதிபதி..

அடுத்த ஜனாதிபதி..

அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க ஜூலை 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப் போவதாக தலைமைத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆளும் கட்சிகளாலும் எதிர்க்கட்சிகளாலும் 6 பேர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள்.


இதில் ஒருவர் துணை ஜனாதிபதி. இன்னொருவர் முன்னாள் ஜனாதிபதி. இருவர் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர்கள். , ஒருவர் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங்.இன்னொருவர் தற்போதைய நிதி அமைச்சர்.

இதில் குறிப்பாக அனைவருமே 1930 களில் பிறந்தவர்கள். சங்மா மட்டும் 1947 இல் பிறந்திருக்கிறார். சோம்நாத் சட்டர்ஜி 1929இல் பிறந்தவர்.

 சோம்நாத் சட்டர்ஜியும், மன்மோகன் சிங்கும், ப்ரணாப் முகர்ஜியும் அவுட்ஸ்டாண்டிங் பார்லிமென்டேரியன் அவார்டுகளைப் பெற்றவர்கள். ப்ரணாப் முகர்ஜியும், மன்மோகன் சிங்கும், அப்துல் கலாமும் பாரத் விபூஷண் விருது பெற்றவர்கள். அப்துல் கலாம் பாரத் பூஷண் மற்றும் பாரத் ரத்னா விருதுகளும் பெற்றிருக்கிறார்.

எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். இருவர் பிராமணர்கள். இருவர் முஸ்லீம்கள், ஒருவர் சீக்கியர், ஒருவர் ரோமன் கத்தோலிக்கர்.

இதில் தற்போதைய துணைப் பிரதமராக இருக்கும் ( கல்கத்தாவைத் சேர்ந்த) ஹமீத் அன்சாரி. நேஷனல் கமிஷன் ஆஃப் மைனாரிட்டீஸின் சேர்மனாகப் பதவி வகித்தவர். "காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்பி வசிக்கும் உரிமை வேண்டும்" என இவர் வலியுறுத்திய கருத்து ஏற்று சட்டமாக்கப்பட்டது. இவர் அலிகார் முஸ்லீம் யூனிவர்சிட்டியின் துணைவேந்தராகவும் இந்திய வெளியுறவுத் தூதராகவும் பணியாற்றியவர். "ஒவ்வொரு குடிமகனும் பொதுநல நோக்கோடு செயல்படவேண்டும். அதற்கு அரசியல்வாதியாய் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை" என்பது இவரது கருத்து.

நிதியமைச்சராய் இரு முறையும் வெளியுறவுத் துறை அமைச்சராய் இரு முறையும் பாதுகாப்புத்துறை அமைச்சராயும், மற்றும் ப்ளானிங் கமிஷனின் டெபுடி சேர்பர்சனாகவும் இருந்தவர், தற்போதைய நிதியமைச்சராய் இருக்கும் ( மீரட்டைசேர்ந்த ) ப்ரணாப் முகர்ஜி.ராஷ்ட்ரீய சமஜ்வாதி காங்கிரஸைத் தோற்றுவித்தவர். பின் அது காங்கிரசோடு இணைந்தது. சார்க் மாநாட்டில் கலந்து கொண்டவர். எமர்ஜென்சி காலத்திலும், தஸ்லீமா நஸ் ரீன் விஷயத்திலும் மிகுந்த சர்ச்சைகளை சந்தித்தவர். கிராமப்புற வேலைவாய்ப்பு, பெண் கல்வி மற்றும் ஹெல்த் கேருக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.

தற்போதைய பிரதம மந்திரியாக இருக்கும் ( கௌகாத்தியைச் சேர்ந்த) மன்மோகன் சிங் ரிசர்வ் பாங்கின் கவர்னராகவும் ப்ளானிங் கமிஷனின் டெபுடி சேர்மனாகவும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும். ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தவர். நிதியமைச்சராய் இருந்தபோது தன்னுடைய புதிய பொருளாதாரக் கொள்கைகளால் கவனத்தை ஈர்த்தவர். உலகமயமாக்கல் கொள்கையை ஆதரித்தவர். குஷ்வந்த் சிங்கால் " உயர் பதவியில் இருந்தாலும் மிக எளிமையானவராக"க் குறிப்பிடப்பட்டவர். நியூஸ் வீக்கால், "மற்ற தலைவர்களும் நேசிக்கும் தலைவர் "எனக் குறிப்பிடப்பட்டவர். .

ஏ. பி சங்மா பாராளுமன்ற சபாநாயகராகவும்,தகவல் தொடர்புத்துறை அமைச்சராகவும் இருந்தவர். தற்போது மேகாலயா சீஃப் மினிஸ்டராகவும் இருப்பவர். சட்டம் படித்தவர்.அணு ஆயுதங்களுக்கு எதிராகத் தன் குரலை லோக்சபாவில் ஒலித்தவர். இவர் மகள் அகதா சங்மாவும் ( அதேகட்சியில் மாநில அமைச்சராகவும் ), மகன் கன்ராட் சங்மாவும் ( எதிர்கட்சித்தலைவராகவும் )அதே மேகாலயாவின் அரசில் இருக்கிறார்கள்.

அப்துல் கலாம் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இவர் விண்வெளி விஞ்ஞானம் படித்தவர். பொக்ரான் குண்டு வெடிப்பிலும்,கூடங்குளம் அணுமின் உலையை ஆதரித்ததிலும்  பெரும் சர்ச்சைகளைச் சந்தித்தவர். அக்னி, பிரித்வி, ஆகாஷ் போன்ற ஏவுகணைகளை அனுப்பியதில் பெரும்பங்காற்றியவர். அக்னிச் சிறகுகள், இக்னீட்டட் மைண்ட்ஸ், இந்தியா 2020 என்ற புத்தகங்கள் எழுதியவர்.வீணை வாசிப்பதிலும் தமிழ்க்கவிதைகளிலும் ஆர்வம் உள்ளவர். 2020 இல் இந்தியா வல்லரசாகும்( அணு ஆயுதத் தயாரிப்பினால்) எனச் சொல்லியவர். ஊழலை ஒழிக்கவேண்டும் என இளைஞர்களுக்காக , what can I give movement என்ற மிஷனை உருவாக்கியவர். தமிழர்.

பெங்காலைச் சேர்ந்த சோம்நாத் சட்டர்ஜி மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். முன்னாள் பாரளுமன்ற சபாநாயகர். சட்டம் படித்தவர். சி பி ஐ ( எம்) க்காக போட்டியிட்டு லோக் சபா மெம்பராக 9 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவர்களில் பிரணாப் முகர்ஜியையும், ஹமீத் அன்சாரியையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்மொழிந்திருக்கிறார். இதை ஏற்காத திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், சமஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும்., மன்மோகன் சிங்கையும், அப்துல் கலாமையும், சோம்நாத் சட்டர்ஜியையும் முன் மொழிந்திருக்கிறார்கள்.

இரு வாரங்களுக்கு முன்பு ஒரிஸ்ஸா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கும், தமிழக முதல்வரும் சங்மாவை ஜனாதிபதியாக முன்மொழிந்திருக்கிறார்கள் . அறுவரில் யார் வரப்போகிறார்கள்.?

தற்போதைய சூழலில் எந்தக் கட்சிக்கும் தனித்து வெற்றி பெறும் அளவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்படுபவர் எல்லாக் கூட்டணிக் கட்சிகளின் பெரும்பாலான பலம் பெற்றிருக்க வேண்டும்.
அனைவரையும் அரவணைத்துப் போக வேண்டும்.

"வேற்றுமையில் ஒற்றுமை" என்பது இந்தியாவைப் பற்றி நாம் படிக்கும்காலத்தில் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட வார்த்தை.. ஆனால் ஒற்றுமையாய் வேற்றுமைகளையும் தற்போது பார்க்கிறோம்.

கலாம் போட்டியிலிருந்து விலகி விட்டார். சோம்நாத் சட்டர்ஜி, தற்போதைய பிரதமர் வரும் வாய்ப்புக்கள் குறைவு. ஆளும் கட்சியின் முதல் பேராதரவைப் பெற்ற  ஹமீத் அன்சாரி, ப்ரணாப் முகர்ஜி, அல்லது சங்மா ( வரவும் குறைவான வாய்ப்பு இருக்கிறது ). மூவரில் யார் அடுத்த ஜனாதிபதி.. ?

முகநூலில் ஒரு பெண்ணாக இந்தக் கேள்விகளை வைத்ததும் அதற்கான எதிர்வினைகள் கொஞ்சம் எதிர்பாராதவை.. ஒரு இல்லத்தரசியாக இருப்பவருக்கு அரசியல் பற்றி பெரிதாகத் தெரிந்துவிடாவிட்டாலும் நாங்களும் அரசியல் நோக்கர்கள்தாம் என்பதைப் புரிய வைக்க வேண்டி வந்தது..!!!

பார்க்கலாம்.. அது சரி.. 35 வயது நிரம்பி இருந்தாலே போதும் ஒரு நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட. நாம் 30 களில் பிறந்தவர்களையே ஏன் இன்னும் சார்ந்திருக்கிறோம்.. ஒரு வேளை அந்த வயது வந்தவர்கள்தான் அனைவருடனும் அனுசரித்துப் போகிறார்களோ.?

எல்லாச் சட்டங்களும் அமலுக்கு வர ஜனாதிபதியின் ஒப்புதல் கையெழுத்து தேவை. அது வெறும் முத்திரை குத்தும் பதவியல்ல. முத்திரை பதிக்கும் பதவி. கருணை மனுக்களை ஜனாதிபதிகள் மட்டுமே கையெழுத்திடவும், நிராகரிக்கவும் முடியும்.( இது பற்றியும் நிறைய சர்ச்சைக் கருத்துக்கள் சந்தித்தேன்..)

புது நிதியமைச்சரைத் தேர்ந்தெடுக்கப் போகிறது காங்கிரஸ்.. அடுத்த ஜனாதிபதி யார் என்பதில் தெளிவான முடிவு ஏற்பட்டு விட்டது.. 99 % அது நிர்ணயிக்கும் ஒருவர்தான். வேறு மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. இருந்தும் ஜூலை 19 வரை பொறுத்திருக்கலாம்.

அது இனி வரும் காலங்களில் எல்லாம் பொம்மைப் பதவியாய் இருக்கப் போவதில்லை எனத் தோன்றுகிறது. ஆளும் கட்சியையே முன் மொழிய வைக்கும் திறமை மிக்க தலைமை சுயமாய் முடிவெடுக்கும் என நம்பலாம். !

நிச்சயம் இதுவரை அமைந்தது போலவே இறையாண்மை மிக்க இந்தியா தனக்கான ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும்.

 டிஸ்கி 1. :-பெண் முதல்வர், பெண் பிரதமர், பெண் கவர்னர் என நாட்டின் உயர்ந்த பதவிகளில் எல்லாம் பெண்கள் வந்துவிட்டோம். புதுக்கோட்டைத் தேர்தலில் பெண்களின் பெரும்பாலான வாக்குப் பதிவாகி உள்ளதாம். பெண்கள் அரசியல் பற்றி எழுதுவதில்லை. சமூக அக்கறை இல்லை என்ற குறையைப் போக்கவே இந்தக் கட்டுரையை எழுதி உள்ளேன். விரும்பும் பெண் வலைப்பதிவர்கள் தொடருங்கள். ராமலெக்ஷ்மி ராஜன், ஹுசைனம்மா, அம்பிகா, கண்ணகி, பத்மஜா, விதூஷ், ஸாதிகா, ரூஃபினா, . சித்ரா சாலமன், மனோ சுவாமிநாதன், புவனா, ராஜி, ஹேமா, சாந்தி மாரியப்பன், பவள சங்கரி, கோமதி, புதுகைத் தென்றல், ஜலீலா, விஜி, ஈழவாணி, கீதா, கயல், தமிழரசி, தமிழ்ச்செல்வி, மலீக்கா, செல்வி, ஜெயந்தி, வானதி, ஆசியா, கோமதி மேடம். ஆகியோரை அழைக்கிறேன். யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் மன்னிச்சுடுங்க மக்காஸ்.:) ( குறிப்பா இவங்க பேர் எல்லாம் ஏன் குறிப்பிட்டேன்னா.. இவங்கள பத்ரிக்கை மற்றும் வானொலி அறிமுகங்களுக்காக அணுகி இருக்கேன். ஒவ்வொருவரின் தனித் திறமையும் தனித் தகுதியும் தெரியும்.. அது பற்றி அடுத்த வாரங்களில் பகிர்வேன்..:)

டிஸ்கி 2 :- இன்றைய நன்றிகள்.. என் படைப்புகளை வெளியிட்ட இணைய இதழ்களுக்கு. "திண்ணை, உயிரோசை, கீற்று, வார்ப்பு, வல்லினம், வல்லமை, அதீதம், முத்துக்கமலம், சுவடு, பூவரசி, இன் அண்ட் அவுட் சென்னை". 

13 கருத்துகள்:

  1. வயதானவர்களே பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் வருவது குறித்த கேள்விகள் எனக்கும் உண்டு!

    தமிழ்மண நட்சத்திரப் பதிவரானதற்கு வாழ்த்துகள்.

    கடைசியில் வந்த விகடனில் உங்கள் மூன்று வரிக் கவிதை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. அரசியல் சார்ந்த பதிவுகள் எழுதுவதற்கு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு அன்பு நன்றி தேனம்மை! நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. /35 வயது நிரம்பி இருந்தாலே போதும் ஒரு நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட. நாம் 30 களில் பிறந்தவர்களையே ஏன் இன்னும் சார்ந்திருக்கிறோம்.. /

    /ஒற்றுமையாய் வேற்றுமைகளையும் தற்போது பார்க்கிறோம். /

    உண்மைதான். நல்ல கட்டுரை தேனம்மை. சுயமாக முடிவெடுக்கும் ஜனாதிபதி இன்றைய இந்தியாவின் அத்தியாவசியத் தேவை. தொடர முயன்றிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. தமிழ் மனம் நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுக்க பட்டதற்கு மிக்க மகிழ்ச்சி ..........வாழ்த்துக்கள் ! எல்லோரயும் பற்றி நிறைய விபரங்களை சேகரித்து எழுதி இருக்கிறீர்கள் ............. மோசம் ?............படுமோசம் ?.இதில் ஏதாவது ஒன்றை சொல்லுங்க என்று கேட்பது போல இருக்கிறது .சமீபத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை உயரு உக்கு யார் காரணம் என்றும் ,அதை உயர்த்துவதால் யார் லாபம் அடைவார்கள் ? பெட்ரோல் விலை உயர்த்த எந்த கொள்கை அமலாகிறது ? அமரிக்காவோடு அணு சக்தி ஒப்பந்தம் போடா யார் காரணம் என்பதயும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் .இதையெல்லாம் விட்டு விட்டு பிரணாப் முகர்ஜியை (கை) கையை காட்ட முடியாது ! ஒருவர் வெற்றி பெறுவார் என்பதற்காகவே கொள்கை என்ற தலையை கழற்றி வைத்துவிட்டு கையை பிடித்து முண்டத்தொடு போகலாமா ? நல்ல முயற்சி ................தொடருட்டும் ................

    பதிலளிநீக்கு
  5. nama parulumadaram muthaivar illam
    so president aged person

    பதிலளிநீக்கு
  6. nama paralumandaram muthair illam
    so president aged person
    paravillai

    பதிலளிநீக்கு
  7. nama paralumandaram muthair illam
    so president aged person
    paravillai

    பதிலளிநீக்கு
  8. nama paralumandaram muthair illam
    so president aged person
    paravillai

    பதிலளிநீக்கு
  9. அடுத்த ஜனாதிபதி என்று ஆரம்பித்து வரிசையாகப் படித்துக் கொண்டே வந்தால், என் பெயரும் பதிவில்... ஆ!!சையைப் பாரு என்று திட்டாதீங்க.

    ஜனாதிபதி பதவியில் வயதானவர்கள் மட்டுமே வருவதற்கு, விவேகத்துடன், பொறுமையும், பக்குவமும் வேண்டும் என்பதற்காக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. அக்கா...
    நல்லதொரு அரசியல் பதிவு.
    இப்ப ஜனாதிபதி பதவிக்கு வந்தா மக்கள் வரிப்பணத்தில் உலகம் சுத்தலாமுன்னு எல்லாருக்கும் காட்டிட்டாங்க ஒரு அம்மையார்... சும்மா கோடி கோடியா முழுங்கிட்டு ஒண்ணுந்தெரியாத மாதிரி முகத்தோட இருக்குது. அதைப் பார்த்து அம்புட்டுப் பேரும் போட்டி போட ஆரம்பிச்சிட்டாங்க... யார் வந்தாலும் தலையாட்டிப் பொம்மைதான்.

    பதிலளிநீக்கு
  11. கட்டுரை மிகவும் நன்றாகவே எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. நன்றி ஸ்ரீராம்

    நன்றி மனோ

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி பெயரில்லா

    நன்றி ஹுசைனம்மா.. ஆ! சை நிறைவேறட்டும். ப்லாகர்களின் ப்ரசிடெண்ட் நீங்கதான்.:)

    நன்றி குமார்

    நன்றி கோபால் சார்

    பதிலளிநீக்கு
  13. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...