எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 செப்டம்பர், 2009

செம்பருத்தீ

செம்பருத்தித் தைலத்தில்
தோய்ந்த என் கூந்தல்
மிகப்பிரியம் உனக்கு...

கார்மேகத்தையும்
கடலலைகளையும்
கைகளால் அளையும்
ஆசையில் நீ பின்தொடர...

நீ துரத்துவதுபோல்
நான் வேகமாய்
முன்னேறி...

காலப்பேழைக்குள்
ஒளிந்து கொண்டேன்...
கண்ணாமூச்சியில்
தேடிக்களைத்த நீ
தாடியுடன்...

எதிர்வரிசைக் குடியிருப்பில்
பற்றியெரிந்த தீ அணைக்க
பேழையை விட்டிறங்கி
மாடிக்கு வந்தேன்...

பற்றியெரியும் பெருந்தீ
ஒரு கண்ணிலும்
பரவசமான செம்பருத்தீ
இன்னொரு கண்ணிலும்
ஜொலிக்க நின்றாய் நீ....

12 கருத்துகள்:

  1. எந்த வரியைப் புகழ்வது என்று ஆடிப் போய் உட்கார்ந்து இருக்கின்றேன்.

    மனுஷ மனசை இப்படி படிக்கிறீங்க. ஓவ்வொரு கவிதையும் மனதை அள்ளுகின்றது.

    இப்படி ஓவ்வொரு கவிதையும் அழகா எழுதினீங்கன்னா, நானெல்லாம் எப்படி பின்னூட்டம் போடுவது.

    பதிலளிநீக்கு
  2. திரு ராகவன் நைஜீரியா அவர்களே
    தொடர்ந்த வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. தொடர்ந்த வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி
    முனியப்பன் ஸார்

    பதிலளிநீக்கு
  4. தேன் சும்மா பிச்சு ஒதர்றீங்க...(அம்மை போடக்கூடாதுல்ல?)

    பதிலளிநீக்கு
  5. காப்புச்சுவர் தாண்டி
    பூத்திருந்த
    செம்பருத்தி
    கடுத்ததடி என்
    மனதுள் உன்னை
    அங்கு காணாமல் ..

    செம்பருத்திய இப்படித்தாங்க என்னால எழுதமுடியுது....:((

    நீங்க பின்னிட்டீங்க ... ராகவன் அண்ணன் கருத்துதான் என்னுதும்.::))

    பதிலளிநீக்கு
  6. பற்றியெரியும் பெருந்தீ
    ஒரு கண்ணிலும்
    பரவசமான செம்பருத்தீ
    இன்னொரு கண்ணிலும்
    ஜொலிக்க நின்றாய் நீ.... //

    பெருந்திரையில் காணவேண்டிய
    காட்சிதீ இங்கு மின்திரையில்
    தெரிகிறது இல்லை
    எரிகிறது...

    அருமை தோழி..

    பதிலளிநீக்கு
  7. நன்றி அண்ணாமலையான் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. நன்றி பலா பட்டறை
    உங்க மெரீனா பற்றிய பதிவு அருமை பலா பட்டறை
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. நன்றி சந்தான சங்கர்

    உங்க சிந்தனைத்துளிகள் அருமை சந்தான சங்கர்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. புதுசு புதுசா கவிதைக்கான பொருள் கிடைக்குது இயல்பாவே உங்களுக்கு..

    பதிலளிநீக்கு
  11. நன்றி ரிஷபன் உங்க பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...