37.எண் விளையாட்டு./காகுரே.
இது தினமலர்ல வந்துகிட்டு இருக்கு சுடோகு போலத்தான். இதுக்குப்
பேரு காகுரே.இது குறுக்கெழுத்துப் புதிர்போலக் கட்டங்களில் சில எண்களை அங்கங்கே கொடுத்திருப்பாங்க.
மேல் கீழா, இடம் வலமாக் கூட்டினா நமக்கு அந்தக் கூட்டுத் தொகையில் வரணும். வந்த எண்ணே
வரக்கூடாது. மூணு கட்டம் கொடுத்து 18 ந்னு கொடுத்திருந்தா 9 +1 +8 இல்லைன்னா 9+2+7
, 9+3+6, 9+5+4 ,5+6+7, 4+6+8 , 7+3+8 இன்னு வரும். நாலு கட்டம்னா 9+1+2+6 இல்லைன்னா
9+1+3+5, 9+2+3+4, 8+1+2+7, 8+2+3+5, 8+1+4+5, 8+1+3+6, 8+1+5+4, அண்ட் சோ ஆன் இருக்கும்..
J
38.வார்த்தை விளையாட்டு./குறுக்கெழுத்துப் புதிர்.
பன்னெடுங்காலமா
விளையாடின விளையாட்டு இது. தினமலர் வாரமலர்ல வருது.
ஒரு க்ளூ கொடுத்திருப்பாங்க. மேலும் கீழும் வலமும் இடமும் இதை ஃபில்லப் செய்யணும்.
இத ஃபில் பண்ணி அனுப்பினா ப்ரைஸ் எல்லாம் உண்டுன்னு அறிவிச்சிருப்பாங்க ராணிமுத்துவுல.
J