யட்சிகளும்
வனப்பேச்சிகளும் உலவிக் கொண்டிருந்தார்கள் காளியின் கோயிலில். வண்ணத்துப்
பூச்சிகளைப் போல வெய்யில் நிறம் தடவி அவர்கள் பறக்கப் பின் தொடர்ந்தாள்
காளி. தனக்காகக் கட்டமைக்கப்பட்ட பிம்பமும் கருநிறமும் உதிர்ந்து
விடுமோவென்ற கவலையில் அவளால் பறக்க முடியவில்லை. தன் கடினச் சொற்களும்
ப்ரயோகமும் கோரைப்பற்களும் மண்டையோட்டு மாலையும் சூலமும் இறுக்கிச்
சுமந்தபடி எவ்வ யத்தனித்தாள். எதிர்ப்படும் முயலகன்களை மிதிக்காமல் போய்விட்டால் கடமை தவறிவிடுவோமோ என்ற பதற்றம் வேறு.
