கடந்த மே மாதம் நரியங்குடியில் புரவி எடுப்பு நிகழ்ந்தது. அந்தப்புகைப்படங்களை இப்போது பகிர்கிறேன்.
இரண்டு பூதங்களும் இரண்டு புரவிகளும்.
கடந்த மே மாதம் நரியங்குடியில் புரவி எடுப்பு நிகழ்ந்தது. அந்தப்புகைப்படங்களை இப்போது பகிர்கிறேன்.
இரண்டு பூதங்களும் இரண்டு புரவிகளும்.
திருமணத் தடை நீக்கும் புரவி எடுப்பு
ஸ்ரீ நரியங்குடி கருங்குளம் பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக் கருப்பர் கோயில்
குலதெய்வ வழிபாடும் சேங்கை வெட்டுதலும் புரவி எடுப்பும்.
வேட்டைச் சமூகமாக
இருந்த நாம் வேளாண் சமூகமாக மாறும்போது நமது தெய்வ வழிபாடுகளும் இன்னொரு பரிமாணம் அடைந்தன.
நா. வானமாமலையின் மார்க்ஸிய தத்துவமும் இந்திய நாத்திகமும் என்ற நூலில் இறைமையைக் கற்பித்ததே
முடியாட்சிதான் என்றும் வணிகம், மதம் பேரரசு போன்றவை மக்களின் வழிபாடுகளையும் விருப்பங்களையும்
நிர்ணயிக்கின்றன என்பதும் ஓரளவு ஒப்புக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும் நாட்டார் தெய்வங்கள்,
குலதெய்வங்கள் போன்ற சிறுதெய்வ வழிபாட்டை மக்கள் தாங்களாகவே கைக்கொள்ளுகிறார்கள்.
யுத்தங்கள், காலனி ஆதிக்கம், ஏகாதிபத்தியம், மதமாற்றங்கள் போன்றவை நிகழ்ந்தாலும் ஓரிறை வழிபாட்டை அவை வலியுறுத்தினாலும் நம் அடிப்படையான பல தெய்வ வழிபாட்டையே கைக்கொண்டிருக்கிறோம். இனக்குழுக்களாக நாம் இடம் விட்டு இடம் பெயர்ந்தபோது நம் இறை நம்பிக்கையையும் எடுத்தே சென்றிருக்கிறோம்.