எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தபால்காரனும் ரிஷிகுமாரனும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தபால்காரனும் ரிஷிகுமாரனும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 நவம்பர், 2017

தபால்காரனும் ரிஷிகுமாரனும்.

உன் கடிதம் பார்த்து
வாசலிலேயே
தவம் கிடக்கும்
கதவாய்
மனசும்

என் எதிர்ப்பார்ப்பைப்
போலத்
தேய்ந்து போகும்
வாசற்படிகள்

உன் கடித வரவிற்காய்
உறுத்து விழித்து
மெல்ல்ல்ல சுவாசித்து
மௌனமாய் அடங்கும்
சமையற்கட்டுச்
சன்னல் கதவு.