எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

கருப்பை நம் உயிர்ப்பை நூல் வெளியீடு

என்னுடைய 27 ஆவது நூல், "கருப்பை நம் உயிர்ப்பை" நூல் மதுரை தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. 



 ///எழுத்தாளர் தேனம்மை எழுதிய நூலினை தானம் அறக்கட்டளை திட்டத்தலைவர் மோகன் வெளியிட டாக்டர் பங்கஜவல்லி பெற்றுக்கொண்டார். 

இந்த நூல் அனைவரும் வாசிக்கும் வகையில் மிக எளிமையாக எழுதப்பட்டுள்ளது. 


மேலும் பெண்களுக்கான உணவுகள் குறித்தும் கூறப்பட்டிருக்கிறது. இதனை அனைவரும் வாங்கி வாசிக்கவேண்டும் என்றார் சுகம் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சுபாஷி2னி.




 படத்தில் (இடமிருந்து)  நூலகர் மற்றும் வாசகர் வட்டத்தின் தலைவர் ராமமூர்த்தி, வழக்கறிஞர் சி.சே. இராசன், பேராசிரியர் மோதிலால் நேரு (மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் பேரன்)  தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் மா.ப. வாசிமலை, பட்டறிவுப்பதிப்பகத்தின் துணைத் தலைவர் பாதமுத்து, எழுத்தாளர் தீபா நாகராணி.///


நன்றி டாக்டர் மோகன் & டாக்டர் பங்கஜவல்லி.

 (நான் செல்ல இயலவில்லை. ). நன்றி திருமலை சார் & தீபா.


நேற்று மதுரை  தானம் அறக்கட்டளை அலுவலக அரங்கில் நமது மண்வாசத்தின் பத்தாவது ஆண்டுவிழாவில் பத்து நூல்கள் வெளியிடப்பட்டன. 


அதில் எனது 27 ஆவது நூலான "கருப்பை நம் உயிர்ப்பை" என்ற  நூலும் ஒன்று. நன்றி திருமலை சார்.

இந்நூலில் பூப்படைதலில் இருந்து மெனோபாஸ் வரைக்கும் 19 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 


இந்த உள்ளடக்கத்தில் எழுதுமுன்பு முகநூலில் இது குறித்துக் கருத்துக் கேட்ட பொழுது  என் முகநூல் நட்புகள் அனைவருமே இப்பொருண்மையில் எழுத ஆதரவு அளித்தார்கள். 


ஆகையால் இந்நூல் வெளிவரக் காரணமாயிருந்த முகநூலுக்கும் முகநூல் நண்பர்களுக்கும்,  முன்னுரை வழங்கிய டாக்டர் ஜெயப்ரியா அவர்களுக்கும், அழகாக வடிவமைத்துள்ள சுந்தரவள்ளி அவர்களுக்கும், நமது மண்வாசத்துக்கும், திருமலை சார் அவர்கட்கும் தானம் அறக்கட்டளைக்கும் நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...