எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 27 ஏப்ரல், 2019

வெண்புரவியில் ஒரு மாப்பிள்ளை அழைப்பு.

காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட இன்பம் வாழ்வில் கசக்குமா இல்லை ருசிக்குமா. :) என்ற பாடலை ஹம் செய்துகொண்டிருந்தேன். உண்மையாகவே உறவினர் ஒருவரிடமிருந்து ஃபோன். இருமணம் கூடிய திருமணத்துக்கு வரச் சொல்லி அழைப்பு.

இன்றைய காலகட்டத்தில் ஜாதி மதம் இனம் தாண்டிய திருமணங்கள் பெருகிவிட்டன. கட்டாயத்துக்காக ஒரே ஜாதியில் திருமணம் செய்து  பிரிவதை விட பிடித்த ஒருவரை எந்த ஜாதி மதம் இனமானாலும் திருமணம் செய்து வாழ்நாள் முழுக்க மனநிறைவோடு வாழ வேண்டும் என்பது என் கருத்து.

நிற்க. இப்போது எங்கள் உறவினர் இல்லங்களில் நகரத்தார் திருமணங்களோடு பையன் மற்றும் பெண்ணின் விருப்பத்திற்கேற்ப ரெட்டியார் இல்லத்து மணமகள், மராட்டிய வம்ச மணமகன் ஆகியோர் மணமக்களாக பையன் பெண்ணின் பெற்றோரால் முழுமனதோடு ஸ்வீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். காலத்துக்கேற்ற மாற்றம். ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றமும் கூட.

இவர்/இவள் எனக்கு சகலவிதத்திலும் பொருத்தமானவன்/ள் என்று பையன்/பெண் பெற்றோரிடம் தெரிவிக்கும் துணிவு பெற்றிருப்பது இத்திருமணங்களின் சிறப்பு. வாழ்க மணமக்கள். அத்திருமண வைபவத்தின் ஒரு சில துளிகளைப் பார்ப்போம். ( மறுநாள் இன்னோரு திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டி இருந்ததால் முதல் நாள் நிகழ்வுகளை மட்டும் எடுத்தேன் )

தஞ்சாவூரில் ஒரு உறவினர் திருமணம். நகரத்தார் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. மணமகள் எனக்கு மகள் முறை. மாப்பிள்ளை மராட்டியர். தஞ்சையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே புலம் பெயர்ந்து வந்தவர்கள். அவர்கள் திருமணத்தில் மணமகள் தலையில் முந்தானையை முக்காடாக ( சரிகை மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகள் ) அணிவித்து அமர வைப்பது வெகு அழகு.


மணமகளுக்குத் துணைக்கு ஒரு குட்டிப் பெண் அமரவைக்கப்பட்டுள்ளார்.


மாப்பிள்ளை வீட்டின் பெண்கள் நலுங்கு போல் வைத்தார்கள்.

மாலையும் முக்காடும் அணிவிக்கப்பட்ட பெண் மாப்பிள்ளை வரவேற்புக்காகத்  தயாராகச் செல்கிறார்.

அதற்குள் பெண்ணைப் பெற்றவரும் மாப்பிள்ளையைப் பெற்றவரும் தலைப்பாகை கட்டித் தயாராகிறார்கள்.

இவர்களுக்கும் தலைப்பாகையை உறவினர் ஒருவர் வந்து தலைப்பாகைத் துணியைச் சுற்றிச் சுற்றி விசிறி மடிப்பு வைத்து அணிவிக்கிறார்.

அடுத்து ஷாதி பாரத்.

மணப்பெண்ணின் தந்தை என் அத்தை மகனார். அவர் விருந்தினர்களையும் நண்பர்களையும் உபசரிக்கிறார்.

உறவினர்கள் வருகை.

மாப்பிள்ளையை வரவேற்க வாணவேடிக்கை.

இதோ வந்துவிட்டார்கள் பேண்ட் வாத்தியக் குழுவினர்


இவர்கள் மாப்பிள்ளை வரவைக் கட்டியங்கூற இன்னிசைக்க, வெண்புரவியில் மாப்பிள்ளை வந்துகொண்டிருக்கிறார்.

அதிரடி இசையோடு ஆரம்பமானது ஆனந்தமயமான ஆட்டம். இசை துள்ளத் துள்ள உள்ளமும் துள்ளியது.


நெருங்கிய உறவினர்கள் அனைவரும் நடனம் ஆடுகிறார்கள்.

இதோ எங்கள் மாப்பிள்ளை வருண் அவர்கள் வெண்புரவியில்.


அன்புக் கூட்டம். அழகான ஆட்டம்.

மாப்பிள்ளையின் அழகுத் தங்கையும் நடனமாடினார்.


புரவியை விட்டிறங்கி மாப்பிள்ளை வருகிறார்.

இப்போது மாப்பிள்ளையும் நடனமாடினார்.


இசை கேட்டு வெண்புரவியும் நடனமாடியது.


நாட்டியக் குதிரை.


மாப்பிள்ளைக்கு ஆலாத்தி எடுத்து வரவேற்றோம்.


மாப்பிள்ளையை வரவேற்கும் பெண்வீட்டார். ( பெரிய மாமனார், மாமனார், சகலை )

விச்சு வருண் ஆகியோரோடு நாங்கள். மாப்பிள்ளை ஷெர்வாணியில் இருந்து கோட் சூட்டுக்கு மாறிவிட்டார். மிக அழகான உயரமான பொருத்தமான மாப்பிள்ளை எங்கள் விச்சு எனும் விசாலாக்ஷிக்கு. மனப்பொருத்தம் போல மணப் பொருத்தமும் கொண்ட ஜோடி. வாழ்க வளமுடன், நலமுடன், இதே அன்புடனும் பாசத்துடனும் பல்லாண்டு !!! எங்கள் அனைவரின் அன்பும் வாழ்த்தும் ஆசிகளும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...