எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 15 அக்டோபர், 2018

காரைக்குடி புத்தகத் திருவிழாவில் எனது நூல்களும் நான் வாங்கிய நூல்களும்.

சென்றவாரம் முழுவதும் காரைக்குடி பெரியார் சிலைக்கு அருகில் உள்ள சுபலெக்ஷ்மி பேலஸ் ஹோட்டலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.அதில் மரப்பாச்சி புத்தகாலயம் அரங்கில் எனது நூல்களும் தோழி ராமலெக்ஷ்மி நூல்களும் இடம் பெற்றன. சில விற்பனை ஆனதாகவும் கேள்வி. :)

புதினம் - கதிரேசன்,  சாகித்ய அகாடமி விருது புகழ் எழுத்தாளர் காரைக்குடியைச் சார்ந்த மருத்துவர் சுனில் ஏற்பாடு செய்திருந்த மரப்பாச்சி அரங்கின் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்தார்.சிறார்களுக்கான அறிவியல் நிகழ்ச்சிகள் மற்றைய நிகழ்ச்சிகள் மேல் தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.


எனது நூல்களும் ராமலெக்ஷ்மி நூல்களும் :)

நான் வாங்கிய நூல்கள்.1. இமையம் - செல்லாத பணம்.
2. சோ. தர்மன் - சூல்
3. பெருமாள்முருகன் - மாதொருபாகன்
4. கார்த்திக் பாலசுப்ரமணியன் - டொரினோ
5. ஷான் கருப்பசாமி - வெட்டாட்டம்.
6. ஜீவ கரிகாலன் - ட்ரங்க் பெட்டிக் கதைகள்.

படித்தவற்றுக்கே இன்னும் விமர்சனம் எழுதவில்லை. இவற்றை எல்லாம் எப்ப படிக்கப் போறேன்னு தெரியவில்லை. 

3 கருத்துகள்:

 1. பகிர்வுக்கு அன்பும் நன்றியும்:).

  பதிலளிநீக்கு
 2. காரைக்குடி புத்தகத் திருவிழா பற்றிய சுவையான தகவல்

  பதிலளிநீக்கு
 3. வெல்கம் ராமலெக்ஷ்மி :)

  நன்றி முத்துசாமி சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...