எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 அக்டோபர், 2018

ஹலோ மதுரையில் கிட்டூர் ராணி சென்னம்மா.

மதுரையில் இருந்து வெளிவரும் இதழ் ஹலோ மதுரை. மதுரை சார்ந்த அனைத்துத் தகவல்களும் கொட்டிக்கிடக்கும் சிறப்பிதழ் . மாதம் ஒருமுறை வருகிறது. நல்ல வழுவழுவென்ற தாள்களில் வண்ணப்பக்கங்களில் மதுரையின் அழகு விகசிக்கிறது. விலை 20 ரூபாய்தான். பிழையே இல்லாமல் படிக்க வெகு சரளம். அழகான லே அவுட்கள். கண்ணைக் கவரும் புகைப்படங்கள்.

இதில் அட்டைப்படங்களாக திருப்பரங்குன்றம், பதினெட்டாம்படிக் கருப்பர், காந்தி ம்யூசியம் என வியக்க வைக்கின்றன. நமது வலைப்பதிவ நண்பர் எஸ் பி  செந்தில்குமார் அவர்களின் பல்வேறு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

இப்பத்திரிக்கையை வெளியிட்டு  வருபவர் ரமேஷ்குமார் என்பவர். அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்.

அவர் முகநூலில் தொடர்பு கொண்டு கிட்டூர் வீராங்கனை ராணி சென்னம்மாவின் கட்டுரையை என் வலைப்பதிவில் இருந்து எடுத்து நூலில் கையாள அனுமதி கேட்டிருந்தார். மிகுந்த சந்தோஷத்தோடு ஒப்புக் கொண்டேன்.  கட்டுரையுடன் பேர் போட்டு இதோ பத்ரிக்கையும் அனுப்பி விட்டார். நன்றி ரமேஷ். ஹலோ மதுரை இன்னும் பல சிறப்புகள் காண வாழ்த்துகள்.


நமது நாடு சென்ற நூற்றாண்டுகளில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அப்போது சுதந்திரம் வேண்டி சாமான்யர்களும் புரட்சியாளர்களும் போராடியது போல சாம்ராஜ்யம் ஆண்டவர்களும் அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு அடிபணியாமல் போராடினர்.  அவர்களுள் சிலரின் வீர சரித்திரத்தைக் காண்போம்.


5 கருத்துகள்:

 1. அன்பும்... மகிழ்வும்... என்றும்...

  பதிலளிநீக்கு
 2. தமிழ் நாட்டில் அத்தனை வேகத்தில் ஏற்றுக் கொள்ளாத / தெரியாத ராணி இவர்

  பதிலளிநீக்கு
 3. ஹலோ மதுரை எங்கு கிடைக்கும்? சென்னம்மா (சின்னம்மா அல்ல) வின் சுதந்திர போராட்ட சிந்தனை நல்ல கட்டுரையாக வெளிவந்துள்ளது.

  பதிலளிநீக்கு
 4. இதழ் அறிமுகம் அருமை. தங்களது கட்டுரையைப் படித்தேன். வழக்கம்போல செறிவான செய்திகளுடன் ரசிக்கும்படி இருந்தது.

  பதிலளிநீக்கு
 5. நன்றி ரமேஷ்

  ஆம் பாலா சார். சிலர் ஏன் வேலு நாச்சியார் பற்றிய கட்டுரை எழுதவில்லை என்று கேட்டார்களாம். நான் முன்பே 12 கட்டுரைகள் எழுதி அது கோகுலத்திலும் தொடராக வெளிவந்துள்ளது.

  நன்றி முத்துசாமி சகோ. மதுரையில் கிடைக்கும் அதன் ஆசிரியர் ரமேஷிடம் கேட்டு சொல்கிறேன்.

  நன்றி ஜம்பு சார்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...