எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 செப்டம்பர், 2017

பிதார் கோட்டையில் கல்வீணை ?!

பஹாமனியர்கள், முகம்மது பின் துக்ளக், பிஜப்பூர் சுல்தான், நிஜாம்கள், முகலாயர்கள் என்று பலர்  கை மாறினாலும் இன்னும் அழகும் எழிலும் மிச்சமிருக்கும் இடம் மொஹமதாபாத் என்று முன்னர் அழைக்கப்பட்ட பிதார் கோட்டை.

பிதார் கோட்டை போட்டோகிராபர்களின் டிலைட் எனலாம். எங்கெங்கு பார்த்தாலும் சிதைந்த இடத்திலும் கொள்ளை அழகு கொட்டிக் கிடைக்குமிடம் பிதார்.

பெர்சியன், துருக்கிய, இஸ்லாமிக் , இந்தியக் கட்டிடக்கலைக்கு கூட்டான எடுத்துக்காட்டு இந்தக் கோட்டை.

இந்தத் தூண் சிற்பத்தில் இந்திய அரசனும் நடனமங்கையரும் . மேலே குதிரை சிங்கம் யாளி யானை ஆகியன அணிவகுக்கின்றன .ரோஜாப்பூக்கள், சிவலிங்கங்கள் நாகங்கள் கூட. பெர்சியன் கலைக்கு  நடுவில் குறுக்கு கோடுகளும், சதுரமும்  பூக்களும்.
கிரானைட் தாமரை இல்லை இது, மினி வாட்டர் ஃபவுண்டன்.



அடேயப்பா கல்லுக்குள் இத்தனை சிக்கல் சிற்பமா ! இரும்பை வெல்டிங் செய்தது போலிருக்கிறது.

நாககன்னிகைகளோ
நம்மூர் கோயிலில் கல் செயின் இருக்கும் அதேபோல் இங்கே கல் கைப்பிடி ஒரே சீராக . இதில் இருக்கும் சிலுவை போன்ற அமைப்பை பெர்சியன் கட்டிடக்கலையில் காணலாம்.
சிதைந்திருப்பது தெய்வ உருவம் போல் இருக்கிறது. பக்கத்தில் நடனப் பெண்கள் அல்லது பணிப்பெண்கள் அல்லது துவாரபாலகியர். இது விதானம் அல்லது நிலைப்பகுதியாக இருந்திருக்கலாம்.
மடல்மடலாக கல்தாமரை
இது கல்வீணையோ.. வீணை அமைப்பில் நடுவில் தந்திக் கம்பிகள் மாட்ட துளை வைத்தாற்போல் இருக்கிறது. 
சித்தன்ன வாசல் குடுமியான்மலை சிற்பங்களை ஒத்து இருக்கிறது. அந்த அரசனின் கட்டைவிரல் மோதிரசுண்டுவிரல்களுடன் மடித்து மற்ற  இரு விரல்கள் மேல்நோக்கி வைத்திருப்பதுபோல் அமைந்திருப்பது சித்தன்னவாசல் சிற்பங்களை நினைவூட்டுகிறது
இனம்தெரியாத ஒரு கொடி படர்ந்ததுபோல் இருக்கிறது. எத்தனை அலை & துளை மடிப்புகள் !
யாளி போல் இருக்கிறது. ஆனால் யாளியல்ல கண்கள் தெறித்து விடுவதுபோல் வடிக்கப்பட்டிருக்கு. உடல் அலை அலையா இருக்கு. ஒருவேளை ட்ராகனா இருக்குமோ
விருட்ஷங்கள் போன்ற வினோதமான வடிவமைப்புகள். பைசா நகரத்துக்கு கோபுரம்போன்ற மடிப்புகள் மேலே. அதில் சதுரப் பூக்கள்.
சதுரப் பூக்கள், வினோத வளைவுகள்.
 இதில் இருப்பது யாளியேதானா என்ன ஒரு கம்பீரம் !

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. பிதார் கோட்டையும் 16 தூண் மசூதியும். ( BIDAR FORT AND SOLAH KAMBAH MOSQUE

2. பிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவன் கோயில். 

3.  ஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்.

4.  குருநானக் ஜிரா சாஹிப்பில் அம்ரித் குண்ட்

5.  பிதார் கோட்டையில் கல்வீணை ?!

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...