எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 ஜூலை, 2014

கடவுளை நேசித்தல் கவிதை கன்னடத்தில்.

ದೇವರ ಪ್ರೀತಿ
ದೇವರನ್ನು ಒಮ್ಮೆಯೂ ಪ್ರೀತಿಸಲೇ ಇಲ್ಲ
ಭಯ ದುಃಖ ಕಾಯಿಲೇ ವಿಪತ್ತು
ಪ್ರಯಾಣ ಈ ಸಮಯಗಳಲ್ಲಿ
ಅವನ ಹೆಸರ ಜಪಿಸಿದ್ದೇನೆ
ಅವಮಾನ ನಿರಾಶೆಯ ಗಳಿಗೆಗಳಲ್ಲಿ
ಅವನನ್ನು ನಿಂದಿಸಿದ್ದೇನೆ
ಆಸೆಗಳು ಈಡೇರಲು ಹುಂಡಿಯಲಿ
ಕಾಣಿಕೆ ಹಾಕಿ ವ್ಯಪಹಾರ ಮಾಡಿದ್ದೇನೆ
ಹಬ್ಬ ಹರಿದಿನಗಳಲ್ಲಿ ಅವನ ಹೆಸರ ಹೇಳಿ
ಬಗೆ ಬಗೆಯಾಗಿ ಉಂಡಿದ್ದೇನೆ
ಒಂದು ಚಿತ್ರದಲ್ಲಿ ಬಂಧಿ ಮಾಡಿ
ಅವನು ಅಲ್ಲೇ ಇರುವುದಾಗಿ
ನಂಬಿದ್ದೇನೆ ನನ್ನ ಬೆಳವಣಿಗೆಗೆ
ಅಡಚನೆ ಅದಾಗೆಲ್ಲ ಅವನ ಬೈದುಕೊಂಡಿದ್ದೇನೆ
ನನ್ನ ಏಳಿಗೆಗಾಗಿ ಸದಾ
ಅವನನ್ನು ಅಂಗಲಾಚಿದ್ದೇನೆ
ಯಾರಾದರೂ ಗಾಯಗೊಳಿಸಿದಾಗ
ನೀನು ಕೇಳಲಾರೆಯೇ ಎಂದು ಗೋಳಾಡಿದ್ದೇನೆ

ದೇವರ ಒಮ್ಮೆಯೂ ಪ್ರೀತಿಸಿಯೇ ಇಲ್ಲ
ಎಂಬ ನಿಜ ಅರಿಯುವಾಗ
ಸಂಕಟವಾಗುತ್ತದೆ
ಅವನಾದರೂ ನನ್ನ ಪ್ರೀತಿಸಿರಬಹುದೇ ಎಂದು

-ತೇನಾಮ್ಮೈ ಲಕ್ಷ್ಮಣನ್


கடவுளை நேசித்தல்:-
********************************
கடவுளை ஒருபோதும்
நான் நேசித்ததேயில்லை.

பயம், துக்கம், நோய், விபத்து,
ப்ரயாணம் செய்யும்போது
அம்மாவின் முந்தானையாய்
அவரின் பேர் பிடித்துப்
பதுங்கி இருப்பேன்.


அவமானம், நிராசையின்போது
அவரை நிந்தித்திருக்கிறேன்.

ஆசைகள் பலிக்க
உண்டியலில் காசுபோட்டு
டீல்பேசி வியாபாரியாக்கி
இருக்கிறேன் அவரை.

நாள் கிழமையில்
அவர் பேர் சொல்லி
விதம் விதமாய்
உண்டிருக்கிறேன்.

ஒரு படத்துக்குள் அடைத்து
வீட்டில் வைத்தவுடன்
அவர் அதில் மட்டும் இருப்பதாக
நம்பி இருக்கிறேன்.

அவர் தந்ததை
அவருக்கே படைத்து
நான் செலுத்தியது என
பெருமையுற்றிருக்கிறேன்.

எனக்குத் தந்ததுபோதுமென நினைத்து
எப்போதாவது அவர் எனக்கு
வஞ்சகம் செய்திருப்பாரோ என
சந்தேகப்பட்டிருக்கிறேன்.

என்னை முன்னேறவிடாமல்
தடுத்ததுபோல் திட்டி இருக்கிறேன்.
என்னை எப்போது உயர்த்துவாய் என
எந்நேரமும் கேட்டபடி இருக்கிறேன்.

என்னை யாராவது
காயப்படுத்தும்போது
கேட்கமாட்டியா நீ என
கத்தித் தீர்த்திருக்கிறேன்.

கடவுளை ஒருக்காலும்
நான் நேசித்ததே இல்லை என்ற
உண்மையை உணரும்போது
சங்கடமாய் இருக்கிறது
அவராவது என்னை நேசித்திருப்பாரா என்று.///

முகநூல் நண்பர் திரு காளிமுத்து நல்ல தம்பி அவர்கள் என்னுடைய கவிதை ஒன்றை கன்னடத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். இது மூன்றாவது. இரண்டாவது கவிதை ஒரு வெறுத்தலின் முடிவில். முதல்கவிதை நீரின் பயணம்.

நன்றி சார் மிக அழகான மொழிபெயர்ப்புக்கு.இந்தக் கவிதை எனது அன்ன பட்சி கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...