எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 செப்டம்பர், 2013

பாரதி மகாகவியா..

பாரதி மகாகவியா.. இந்தப் பட்டத்துக்கு அவர் உகந்தவர்தானா.. அவரது படைப்புக்கள் சாமான்யனின் படைப்புக்கள்  என்று கருதப்பட்டு வருகிறதாம்.

பாரதியாரின் கவிதைகள் பெரும்பகுதியைப் படிக்கும்போது அவை உணர்ச்சி வேகத்தில் எழுத்தப்பட்டவையாகத் தோன்றும். அந்தந்த நேரத்தின் உணர்வுக்கு ஏற்ப வெளிப்படும் அவரது கவிதா வெளிப்பாடுகள் சாமான்யனையும் ஊக்கமும் உணர்ச்சி வேகமும் கொள்ளச் செய்தவை. சுதந்திர தாகம், காதல் ஆகியவற்றை உரைநடைக் கவிதைகளாகவும் சொல்லமுடியும் என்பதன் முதல் முயற்சி அவர். 


சுதந்திர தாகத்தில் எழுதப்பட்ட அநேக கவிதைகள் மரபு சாராதவை என்றும், நிறைய விஷயங்களின் நவீன புள்ளி அவரென்றும், ஆனால் அவர் ஆசு கவியாயிருக்கலாமே தவிர மகா கவி அல்ல என்றும் சிலர் கூறி வருகிறார்கள். 

ஜெயமோகனின் விவாதப் பக்கத்தையு ம், நந்தலாலா இதழில் வெளியானவையும் பற்றிக் ஷைலஜா ஷைலு பொன்னம்பலம் முகநூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறார். அந்த போஸ்டில் என்னையும் இணைத்திருக்கிறார்.

ஒரு விதத்தில் ஜெயமோகனின் கூற்று உண்மை என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். அவரது கவிதைகள் உணர்ச்சிவயத்தில் தோன்றியவையே. மிகப் பல செய்யுள் வடிவிலும் கூட. ஆனால் அவரது படைப்புக்கள் திரைத் துறையிலும் பல பாடல்கள் இடம்பெற்று சாதாரணனையும் சேர்ந்துள்ளது. இலக்கியம் என்பதன் நோக்கமே அதுதான் என நினைக்கிறேன். அதனால் அவரை மகாகவி என்று கூறுவதில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை.

பழமை வாய்ந்த சிந்தனைகளாகவே இருக்கக்கூடும். புதியவர்கள் வந்து அதைக் குற்றம் கூறக்கூடும். நம் பிள்ளைகள் நம்மைக் குறை கூறுவது போல. இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று சொல்லக் கூடும். அது வளர்ச்சியின் வெளிப்பாடாய் இருக்கலாம். ஆனால் அந்தக்காலகட்டத்தின் தேவை என்ன. அன்று வாழ்ந்தவர்களுக்கு என்ன தேவையாய் இருந்தது. அதை அந்தக் கால கட்டத்தில் இருந்த கவிஞர்கள் எப்படிக் கொடுத்தார்கள் என்பதே முக்கியம்.

விஞ்ஞானம் வளர்ந்தபின்னும் நம் கவிதைகளைக் கம்ப்யூட்டர் உருவாக்குவதில்லை. நாம்தான் உருவாக்குகிறோம். அவை சில காலம் கொண்டாடப்படுவதும் , சில காலத்துக்குப் பின் விமர்சனத்துக்கு உள்ளாவதும் இயல்பு. கவிதைகள் யாருக்காகவும் எழுதப்படுவதல்ல. ஒவ்வொருவர் கண்ணோட்டமும் வேறுபடலாம். அவரை மகா கவி என அடையாளப்படுத்தியதும் நம்மில் பலர்தான். இன்று அதைக் கேள்விக்குள்ளாகுவதும் நம்மில் சிலர்தான்.

மகாகவி என்ற பட்டம் வழங்கப்படுவதும் சர்ச்சைக்குள்ளாவதும் பற்றி அந்த முண்டாசுக் கவிஞன் இருந்திருந்தாலும்  பொருட்படுத்தப் போவதில்லை. 


8 கருத்துகள்:

  1. //பழமை வாய்ந்த சிந்தனைகளாகவே இருக்கக்கூடும். புதியவர்கள் வந்து அதைக் குற்றம் கூறக்கூடும். நம் பிள்ளைகள் நம்மைக் குறை கூறுவது போல.//

    ஆம். பழமொழி ஒன்றும் உள்ளதுவே.. "முன்ன வந்த காதை பின்ன வந்த கொம்பு மறைத்தாற் போல் " .. ம்ம்.. எமக்கு முந்திய தலைமுறையினர் ஏற்றுக்கொன்ட விடயங்கள் காலப்போக்கில் வாதிக்கப்பட்டு குறை அறியப்படுவது . இதனை நவீன வளர்ச்சியின் தார்மீகம் என்பதா? அல்லது தவறுதல் என்பதா?..
    எவ்வாறாயினும்.. ஆக்கபூர்வ கருத்தினை மீண்டும் மீண்டும் அலசி விமர்சிப்பதால் அது மேலும் மெருகேரும்..

    (ஐயா பாரதியே... நீ கனவு கன்ட புதுமை பெண்கள் இன்று உம்மையே வாதப்பொருளாக மாற்றியதில் உனக்கு வருத்தம் இருக்க வாய்பில்லை.. இதன் மூலம் உன் புகழ் ஓங்கும் என்பதில் ஏதையா ஐயம்?.. விமர்சிக்கப்படுவதால் உன் விஸ்வரூபம் மெருகேரும்.. ஆக்க கருத்துக்கள் வெளியேரும்..)

    பதிலளிநீக்கு
  2. அன்பின் தேனம்மை - பாரதியை மகாகவி என ஒத்துக் கொண்டாலும் சரி இல்லையென மறுத்தாலும் சரி - அவர் மகா கவிதான். ஐயமே இல்லை - கலாம் செல்லச் செல்க அவரை பற்றி அறியாதவர்கள் குறை கூறக் கூடும் - யார் எது சொன்னாலும் அவர் புகழ் மங்காது. பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. குரு நாதன் மஹாகவி பாரதி மஹாகவி இல்லையெனில் இங்கு யார் மஹாகவி.

    பதிலளிநீக்கு

  4. /எனகொன்று தோன்றுகிறது. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை பாரதி வாழ்ந்திருந்தால் அத்தனை அல்லல்களுக்கு ஆளாகி இருக்க மாட்டார். அப்படி ஆளாகாமல் இருந்திருந்தால் இத்தகு உயிரோட்டமுள்ள எழுத்துக்களை எழுதி இருக்க மாட்டார். பல வேடிக்கை மனிதர்போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று கேட்டவர் உடலம் கிடத்தியபோது அவர் பெருமை அறிந்தவர்கள் யாரும் இருக்கவில்லையோ எனும் படித் தானே காடேகினார்.?/ இது நான் என் பதிவில் எழுதியது. ON HIND SIGHT இம்மாதிரி யெல்லாம் விமரிசிப்போம் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார் உலக அங்கீகாரம் கிடைக்க எல்லாத் தகுதிகளும் கொண்டவர் பாரதி.

    பதிலளிநீக்கு
  5. மகாகவி பாரதி பற்றி யார் என்ன பேசினாலும் அவர் மகாகவிதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...

    பதிலளிநீக்கு
  6. நன்றி VIYAABAHEE

    நன்றி சீனா சார் அருமையா சொன்னீங்க

    நன்றி விஜயன். உண்மைதான்

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி பாலசுப்ரமண்யன் சார் ஆம் சார்.

    நன்றி குமார். ஆம் சகோ

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...