எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

வானவில் ---- சிறுகதை. குங்குமத்தில்..

பாலத்தின் நடுவில் நின்றிருந்தார் அவர். தொலைக்காட்சியில் காண்பித்தபடி உருட்டி புரட்டி சென்று கொண்டிருந்தது வெள்ளம்.

ஹ்ம், அன்பான மனைவி இல்லை, மகள்கள் திருமணமாகி வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்கள். தனக்கு யாருமே இல்லை என நினைக்கும்போது சுய இரக்கத்தில் அவர் கண்களில் கண்ணீர் கசிந்தது. யாருக்காக வாழ வேண்டும். இதில் குதித்துவிட்டால் எல்லாம் மறந்துவிடலாம்.


ர் என்று பக்கத்தில் ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இருவர் பாலத்தைப் பிடித்தபடி எட்டிப் பார்த்தார்கள். அவர் திரும்பியடியே நின்றிருந்தார் கலங்கிய கண்களை மறைத்தபடி.

ஒருவன் மற்றொருவனிடம் சொன்னான், “ டேய் மச்சி என்னா வெள்ளம் பாரு. இப்பிடி வெள்ளம் வந்தா ஸ்கூலுக்கு கட்தான். அந்தக் காலத்துல இந்தப் பாலம் இல்லாதப்ப சின்னப்புள்ளயான நானெல்லாம் தலை மேலே பள்ளிகோட பையை வைச்சிகிட்டு கழுத்தளவு தண்ணீல நனைஞ்சிகிட்டே ஸ்கூல்க்கு போவேண்டா.. அப்புறம் எங்க பாட்டி சொல்லுச்சு ஒரு மவராசன் இந்த பாலத்தைக் கட்டினான்னு. இதுல நடந்து போயிதாண்டா நானு ஸ்கூலு முடிச்சேன். இன்னும் 4 பாலமும் அதோ அந்தால இருக்குதுபாரு ..அந்த மணிக்கூண்டும் கூட அவர் கட்னதுதானாம். அந்தக் காலத்துல எங்க வாட்ச் இதுதான் “ என சொல்லி சிரித்தான்.

நிமிர்ந்து பார்த்தார் அவர். அந்த மணிக்கூண்டின்மேல் தெறித்த சாரலொடு சிறிது வெய்யிலும் அடிக்க ஒரு அழகான வானவில் மணிக்கூண்டிலிருந்து இன்னொரு தொடுவானுக்கு போனது.

ஆமாம். இன்னும் இந்த ஊருக்கு செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கு. தான் வாழ்வதிலும் அர்த்தம் இருக்கு என்று மனநிறைவோடு தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டபடி பாலத்தை விட்டு இறங்கி நடந்தார் பாலமும் மணிக்கூண்டும் கட்டின அந்த மகராசன்.

டிஸ்கி :- இந்தக் கதை 26.11. 2011 குங்குமத்தில் வெளிவந்தது

7 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்...

    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  2. அழகான வானவில் மனதில் முகிழ்த்தது.. சிறப்பான சிறுகதைக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. மனதை நெகிழ்த்திய சிறுகதை.குங்குமத்தில் வெளிவந்தமைக்கு தேனுவுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. சிறுகதை குங்குமத்தில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி தனபால்

    நன்றி ராஜி

    நன்றி ஸாதிகா

    நன்றி சரவணன்

    நன்றி சாரல்.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...