எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 ஜூன், 2012

வைரமே வைரம்...

வைரமே வைரம்..

செட்டிநாட்டில் திருமணம் என்றால் வைரம் இல்லாமல் இருக்காது.. ஆமாம் காதுக்காவது வைரத் தோடு போடுவார்கள். மேலும் வைர மூக்குத்தி, மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் உண்டு. எங்கள் ஐயாக்கள் வைரம் நன்கு பார்ப்பார்கள். வைரம் பார்க்க ஒரு கண்ணாடி அணிந்து கொள்வார்கள். அதன் தரம், நீரோட்டம், விரிசல் இல்லாமல் இருக்கிறதா எனவும் வைரத்தின் தரமும் பார்ப்பதை வைரம் பார்த்தல் என்பார்கள். தற்போது ஆண்கள் மட்டுமே கோலோச்சும் இத்தொழிலில் ஒரு பெண்ணும் இருக்கிறார். அவர் பெயர் வைர மீனு.


ப்ளூஜாகர் வைரமும், பெல்ஜியம் கட்டிங்குமே கண்டிருப்பீர்கள். இப்போதெல்லாம் பாம்பே கட்டிங்தான் ஃபேஷன். சூரத் , பாம்பே போன்ற நகரங்களில் வைரங்கள் வாங்கித் தரம் பிரிக்கப்படுகின்றன.

நெக்லஸ் வகையில் கூட பூச்சரம், கண்டசரம், மங்கலச் சரம், வைர அட்டியல் , மினி நெக்லஸ் என வைரத்தின் அளவுக்கும் தரத்துக்கும் ஏற்ப வகைகள் உண்டு. என் திருமணத்தின் போது எல்லாம் 75 ஆயிரம் ரூபாய்களில் செய்யப்பட்ட வைரப் பூச்சரங்கள் இன்று கிட்டத்தட்ட 2 அல்லது 2 1/2 லட்ச ரூபாயில் செய்யப்படுகின்றன. பொதுவாக வைரமும் செண்ட் , காரட் என்ற அளவுகளால் அளக்கப்படுகிறது. 3 செண்ட் கல், 5 செண்ட் கல், 7 செண்ட் கல் போன்றவை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. சிலர் ஒரே போல 10 செண்ட் கல், 20 செண்ட் கல்லில் நகைகள் செய்வார்கள். ஒரு உறவினர் போட்டிருந்த ஒற்றைக்கல் மூக்குத்தியின் விலை 70,000. யம்மாடியோவ் என்றிருக்கிறதல்லவா..100 செண்ட் சேர்ந்தது ஒரு காரட். 3  1/2 காரட்டில் ஒரு பூச்சரம் செய்யலாம். இது எல்லாம் எகனாமிக் அளவு.

வளையல்களிலும் இரட்டை வரிசைக் காப்பு, இலைக்காப்பு, ஏணிப்படிக் காப்பு, கம்ப்யூட்டர் டிசைன் காப்பு என வகைகள் இருக்கின்றன. ஒவ்வொருவரின் பட்ஜெட்டுக்கும் ஏற்ப நகைகள் செய்யலாம் இது 6 காரட்டிலிருந்து செய்யப்படுகிறது. திருமணப் பெண்களுக்கு வைரத்தில் தாலியும் அணிவிப்பார்கள். அது கிட்டத்தட்ட 12 காரட்டுகளில் மினிமம் செய்வார்கள். தங்கத்தின் விலைதான் தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது. இப்போது மிக அதிகமாக வைர ப்ரேஸ்லெட்டுகள் அணிகிறார்கள் திருமணமான இளம் யுவதிகள். எங்கள் பாட்டி காலத்தில் எல்லாம் சேலையை பின் செய்து கொள்ள வைர ப்ரூச்சுகள் , தங்க ப்ரூச்சுகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். தலைக் கொண்டைக்கு வைரச் சிட்டி எனப்படும் க்ளிப்புகளையும் அணிந்திருக்கிறார்கள். இப்போது இவை எல்லாம் அருகி விட்டன.

பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்து பின் லாபம் பார்ப்பது போல அல்ல வைரத்தில் முதலீடு செய்வது. இன்னும் ரீசேல் வேல்யூ என்ன என்று தெரியவில்லை. ஏனெனில் அநேகர் தங்கள் சொந்த உபயோகத்துக்கு புதிதே செய்வதால் மறு விலை மிகக் குறைவாகத்தான் இருக்கும். இருந்தும் வைரத்தின் விலையும் ஏறிக்கொண்டேதான் போகிறது. முன்பு எல்லாம் ஒரு காரட் 36,000 என இருந்தது இப்போது 45,000 வரை அதிகரித்துள்ளது. அதுவும் சமீபகாலமாகத்தான். எல்லாரும் தங்களுடைய ராசிக்கு ஒத்து வந்தால்தான் வைர நகை அணிவார்கள். ஆனால் செட்டிநாட்டுப் பகுதிகளில் மட்டும் அனைவரும் அணிகிறார்கள். இந்த வைர வியாபார நிமித்தம் வந்து தங்கி செட்டி நாட்டார் போலே தங்கள் பேச்சை மாற்றிக் கொண்ட சேட்டு மக்களையும் அதிகம் காணலாம். கலாச்சார கிராமம் என்ற வகையில் செட்டிநாட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் இந்த வைர வியாபாரிகளையும் சந்திக்காமல் போவதில்லை.

வைர நகை ஒரு கௌரவ அடையாளமாகக் கருதப்படுகிறது. ஒரு விழாவிலேயே காலை, மாலை வேறு வேறு வைர செட் நகை அணிபவர்களைப் பார்க்கலாம். சொலவடையாகக் கூடச் சொல்வார்கள், “ அவர்கள் வீட்டிலே வைரத்தை உழக்கிலே அளக்கலாம் “ என்று.

இதைப் பராமரிப்பதும் எளிதுதான். ஆனால் கவனம் தேவை. பொதுவாக ஓபன் டைப்பில் நகைகள் செய்யப்படுவதில்லை. க்ளோஸ்டு டைப்தான். எனவே நம்முடைய வியர்வை, செண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவை பட்டால் வைரம் கருக்கும். காதில் போடும் தோடுகள் எண்ணெய்க் குளியலின் போதோ அல்லது தலைக்கு எண்ணெய் தடவும் போதோ கழற்றிப் பின் குளித்தபின் போட்டுக் கொள்ளவும். நம் உடலில் உள்ள சல்பர் பட்டாலும் கூட கறுக்கும் என உறவினர் ஒருவர் சொன்னார்.

இப்படிக் கறுத்த வைர நகைகளை சுத்தம் செய்ய ரோஸ் டி என்ற சாக் பவுடர் பயன்படுகிறது. அதையும் பொற்கொல்லர் தான் தடவி கொஞ்சம் காட்டன் வைத்து நன்கு பிரஷ் போல் அழுத்தித் துடைத்துக் கொடுக்கிறார்.. "போயே போச்சே .. போயிந்தே.. இட்ஸ் கான்" மாதிரி அந்தக் கரை போய்விடுகிறது. பின் இன்னும் பளபளப்பு தேவைபட்டால் கழுவி சுத்தம் செய்து தருவார்கள். எலக்ட்ரோ ப்ளேட்டிங்கும் செய்துகொள்ளலாம்.

அப்புறம் பராமரிப்பு பற்றி இன்னும் டிப்ஸ். பொதுவா எல்லா அலங்காரங்களும் முடிந்த பின் வைரம் அணிந்து கொள்ள வேண்டும். செண்ட் , வியர்வை, பாடி ஸ்ப்ரே போன்றவை வைரத்துக்கு விரோதி, சல்ஃபர் எக்ஸ்ட்ராக்‌ஷன் அதிகம் உள்ள உடம்புக்காரர்களுக்கு கறுக்கும். அப்புறம் நம்மைப் போல ஷாம்பூ வெந்நீர்க் குளியல் கொடுக்க வேண்டாம். நான் சிந்தூரப்பொடி மற்றும் நாய்த்தோல் போட்டுத் துடைப்பேன். அதெல்லாம் செய்ய தேவையில்லை. அது எல்லாம் தங்கத்துக்கு மட்டுமே.


நகையை கழற்றி வைக்கும் போது நல்ல தண்ணீரை ஒரு பவுலில் ஊற்றி அதில் அமிழ வைத்து ஒரு முறை கழுவி எடுத்து இன்னொரு முறையும் கைகளால் நீவிக் கழுவி எடுத்து பின் ஒரு எட்டுமுழ வேஷ்டித் துணியில் துடைத்துக் காயவைத்து. இன்னொரு 8 முழ வேஷ்டித் துண்டால் கவர் செய்து மர நகைப் பெட்டியில் வைக்கவேண்டும். அலமாரி லாக்கர், வங்கி லாக்கரில் வைப்பதாலும் நகை கறுக்கிறது. எனவே நீங்க ஆசையோடு வாங்கின வைரத்தை வைரம் போல பாதுகாத்து அணிந்து கொள்ளுங்கள்

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


6 கருத்துகள்:

  1. வைரம் மதிப்பு மிக்கதுதான் ஆனால் ஸ்டாண்டர்ட் மதிப்பு அதற்க்கு கிடையாது. உதாரணத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு வைரம் வாங்குகிறோம் என்று வைத்துகொள்வோம், அதை மீண்டும் திருப்பி விற்க்கப்போனால் அதே ஒரு கோடி ரூபாய்க்கு நிச்சயமாக விற்கமுடியாது, சில சமயம் ஒன்றரை கோடிக்கும் விற்கலாம் சில சமயம் ஐம்பது லட்ச ரூபாய்க்கும் விற்கலாம்.

    வைரத்தை பேங்குல அடமானம் வச்சு பத்து பைசா கூட வாங்க முடியாதுன்னு நினைக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  2. தங்கம் விலை ஏறுவதால், வைரம் போன்ற கல் பதித்த நகைகளுக்கு மதிப்பு கூடுகிறது. மேலும், தற்போது வைரம் என்பது வசதியானவர்களுக்கானதாக மட்டுமல்லாமல், யாரும் வாங்கலாம் என்ற அளவில் வந்துவிட்டன. இங்கேயெல்லாம், பெரிய கடைகளில் மிகச்சின்ன கற்களுக்குக் கூட சான்றிதழ் தருகிறார்கள். அதனால், நம்பி வாங்கலாம்.

    //பூச்சரம், கண்டசரம், மங்கலச் சரம், வைர அட்டியல் , மினி நெக்லஸ்//
    //இரட்டை வரிசைக் காப்பு, இலைக்காப்பு, ஏணிப்படிக் காப்பு, கம்ப்யூட்டர் டிசைன் காப்பு //

    இவற்றின் படம் போட்டிருக்கலாமே? எப்படியிருக்கும்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு!! :-)))

    //வைர ப்ரூச்சுகள் , தங்க ப்ரூச்சுகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். தலைக் கொண்டைக்கு வைரச் சிட்டி //

    ஹூ...ம்.... :-))))

    பதிலளிநீக்கு
  3. வைரம் - இப்போது பலரும் உபயோகிக்கிறார்கள். விலை மதிப்பிட முடியாதிருந்ததை இப்போது மதிப்பிடுகிறார்கள். இருப்பினும் எடை கூடினால் ஓவியம் போன்ற கலைப் பொருளாகவே இன்னும் பார்க்கப்படுவதால் பிரிமியம் அதிகம். அதை வாங்குபவர் பனையம் வைக்கப் போவதில்லை!

    பதிலளிநீக்கு
  4. || இதைப் பராமரிப்பதும் எளிதுதான். ஆனால் கவனம் தேவை. பொதுவாக ஓபன் டைப்பில் நகைகள் செய்யப்படுவதில்லை. ||
    காரைக்குடி பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு இவ்விதம் சொல்கிறீர்கள்.
    இப்போதெல்லாம் திருச்சி தாண்டி விட்டாலே ஓப்பன் செட்டிங்கில் செய்கிறார்கள்.
    ஒளி சிறிது மட்டாக இருந்தாலும் பராமரிப்புக்கு எளிது.

    || எனவே நம்முடைய வியர்வை, செண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவை பட்டால் வைரம் கருக்கும். ||

    இதுவும் தவறான தகவல்.
    வைரத்திற்கு இந்தக் குணங்கள் இல்லை.

    வைரத்திற்கு இருக்கும் மதிப்பு அதன் அடக்க மதிப்பு மட்டுமே..வாங்கும் போது விற்பவருக்கான லாபத்தைச் சேர்த்து உங்களிடம் வாங்குவார்கள்.நீங்கள் திரும்ப விற்கப் போகும் போது 10 சதம்(பொதுவாக) கழித்து எடுத்துக் கொள்வார்கள். இந்த 10 சதம் அவர்களுக்குக் கிடைக்கப் போகும் லாபம்.

    அதிகம் அடிபடாத வைரத்தால் வியாபாரிகளுக்கு பெரும் இழப்பு நேர்ந்து விடுவதில்லை;மேலும் கடை வைத்து பெரிதாக விளம்பரம் செய்து செலவு செய்ய வேண்டிய அவசியம் அல்லை.

    செட்டி நாட்டுப் பகுதிகளில் சத்தமில்லாமல் வீட்டில் வைத்து வருடத்திற்கு 3000 காரட்டுகளுக்கு மேல் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இருக்கிறார்கள்..(டர்ன்ஓவர் கணக்கிட்டுப் பார்த்தால் படித்து விட்டு என்ன கிழிக்கிறோம் என்று நினைவு வரும் !)

    பதிலளிநீக்கு
  5. நன்றி வரலாற்று சுவடுகள் .. உண்மைதான்

    நன்றி ஹுசைனம்மா. படங்கள் போடலாம். ஆனால் பாதுகாப்புக் காரணங்கள்..:)

    நன்றி லெக்ஷி

    நன்றி அறிவன். நகையை சுத்தம் செய்து கொடுத்த பொற்கொல்லர் சொன்னதைத்தான் குறிப்பிட்டேன். வைரம் டல்லாக இருந்தது

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...