எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 மே, 2012

காபந்து..

ஒரு பொருளைப்
போர்த்தி வைப்பது
தூசியாவதில் இருந்து
காப்பாற்றுகிறது.
தூசி அடைவதில்
அதற்கு மெத்த மகிழ்ச்சி
என எண்ணி
காபந்து பண்ணுகிறோம் அதை.
அதால் சுவாசிக்க
முடியாத அளவு
முடிச்சை இறுக்கிக் கட்டுகிறோம்.

அது பேசாமல்
இருப்பதைப் பார்த்து
வீட்டிலிருக்கும் அனைத்தையும்
போர்த்தத் துவங்குகிறோம்.
அவற்றுக்குக் குளிர்வது போலும்
போர்வை கேட்டது போலும்.
கட்டுப்பாட்டில் இருக்கும்
எல்லாவற்றையும் போர்த்தியதும்
நிம்மதியாகிறோம்.
உறைகளின் மேலும்
தூசி படிகிறது. ,
காற்றின் போக்குவரத்தினால்.
ஜன்னல்களையும், கதவுகளையும்
திரைச்சீலைகளால் சாத்துகிறோம்.,
மழை., மின்னல்., குளிர்ச்சி
என்னவென தெரியாது.
புகை வெளியேறா
கணப்பே உயர்வென்று
புகைபோக்கிக்கும்
மின்சாரமூடி அணிவிக்கிறோம்.
அந்துருண்டையாய்
கற்பூரமாய்
கட்டிவைக்கப்பட்டது
காற்றான பின்னும்
போர்த்தப்பட்டவைகளுக்குக்
காவலிருக்கிறோம்.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 செப். மூன்றாம் வார உயிரோசையில் வெளிவந்தது.


4 கருத்துகள்:

  1. செத்தபின்கூட காதத்துக் கருப்பு என அலைவோம் என்கிறீர்களா !

    பதிலளிநீக்கு
  2. கவிதை ரொம்ப நல்லாயிருக்குக்கா...
    உயிரோசையில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஹாஹா ஆம் லெக்ஷி

    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...