எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 14 டிசம்பர், 2011

இருக்கை..

இருக்கை..:-
**************

எனக்கென சில தானியங்கள்
சிதறிக் கிடக்கின்றன
அங்கங்கே..

குளிரிலும் இருளிலும் கூட
கதகதப்பாய் ஒரு கூடும்..

அமரும் மரங்கள் தோறும்
பழங்களோ பூக்களோ
ரசிக்க., ருசிக்க..,


இலைகளோ ஏன்
கிளைகளோ மட்டுமே கூட
என்னை ஏந்தி..

கூலி கொடுக்காது
காற்றிலேறி அவ்வப்போது
விண்ணைச் சாடி..

குடல்கள் குதறும்
சில காகங்கள் கண்டு்
வெறுப்பு ...
அவை ஆகாயத் தோட்டி
என அறியும்வரை..

பேர் எழுதிக் கிடக்கும்
தானியங்கள் இருக்கும்
காலம் வரை..பறக்கவும்..
பறத்தலைக் கற்பிக்கவும்

டிஸ்கி:- இந்தக் கவிதை மார்ச் 20, 2011 திண்ணையில் வெளிவந்தது.


8 கருத்துகள்:

  1. மீனாட்சி கோயிலில் கிளியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கும் சிலசமயம் சித்தர்கள் மாதிரி கூடுவிட்டு கூடு பாய்ந்து கிளியாய் வாழ்ந்து பார்க்கும் ஆசை வரும். பல வருட்ங்களுக்குப் பின் உங்கள் அழகிய கவிதை அதை நினைவுபடுத்தி விட்டது. நன்றிக்கா...

    பதிலளிநீக்கு
  2. பேர் எழுதிக் கிடக்கும்
    தானியங்கள் இருக்கும்
    காலம் வரை..பறக்கவும்..
    பறத்தலைக் கற்பிக்கவும்

    ஆஹா.. அருமை.

    பதிலளிநீக்கு
  3. அழகான கவிதை..
    இயல்பான சொல்லாடல்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி கணேஷ்..:0

    நன்றி ரிஷபன்

    நன்றி சிபி

    நன்றி டி வி ஆர்

    நன்றி மகேந்திரன்

    நன்றி சாந்தி

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...