வியாழன், 10 நவம்பர், 2011

புதிய புத்தகம் பேசுது.. ஒரு பார்வை..

”ஒரே ஆண்டில் 25 தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது தரப்பட வேண்டும்”. என்ற நாஞ்சிலாரின் கருத்தும் புகைப்படமும் தாங்கிய அட்டைப்படத்தைப் பார்த்ததும்.,” புதிய புத்தகம் பேசுது ” அக்டோபர் இதழை வாங்கிவந்தேன்.. டிஸ்கவரியில்.. வழக்கமான என்னுடைய தாமதமான பார்வை இங்கே..:)
பாரதி பதிப்பகத்தின் இந்தப்புத்தகம் பற்றி., ”இது ஒரு இயக்கம் சார்ந்த இதழாக இருந்தாலும் நேர்காணல்கள் சிறப்பாகவும் நடுநிலையுடனும் வெளியாகின்றன” என நாஞ்சிலார் கூறியதை வழிமொழியலாம். ஒரு நேர்காணல் எப்படி எடுக்கப்படவேண்டும் என கீரனூர் ஜாகீர்ராஜாவிடம் கற்றுக் கொள்ளலாம். நாஞ்சிலாரின் எல்லா எழுத்துக்களையும் படித்து மிக நளினமாகவும்., விரிவாகவும்., கேட்க வேண்டியவற்றைக் கேட்டும் ( சாகித்ய அகாடமி விருது பற்றி., தி மு கவின் பின்னடைவு பற்றி., இவரின் நாவல்களில் இவரின் சுயத்தின் பிரதிபலிப்பு பற்றி., கும்பமுனி பற்றி., கட்டுரைத் தன்மையிலான கதைகள் பற்றி.,செய்யுள் மாதிரியான கவிதைகள் பற்றி., கடுமையான சொற்கள் பயன்படுத்துவது பற்றி., இவர் நூல்களின் சுவாரசியமான தலைப்புகள் பற்றி., பெண்கவிஞர்கள் எழுதும் உடலரசியல் பற்றி., இசை., சிறுபத்ரிக்கைகள்., சமச்சீர் கல்வி., பயண அனுபவம்., சமகாலத்தமிழ் இலக்கியம்., தமிழ் சினிமா., பெரியார்., ஈழப்பிரச்சனை பற்றி எல்லாம் என) ஒரு எழுத்தாளனின் பரந்துபட்ட அனுபவங்களை விரிவான பார்வையில் அலசிச் செல்லும் நேர்காணல் இது.


இதற்கு நாஞ்சிலாரின் பதில் ஒவ்வொன்றும் அனுபவ முத்திரை. ”பெண் உணர்வதை பெண் மட்டுமே எழுத முடியும்” என்றும்., சுகிர்தராணியின் ”பறைத்தொகை”., சக்தி செல்வி., தமிழ்நதி ஆகியோரின் எழுத்துக்கள் பற்றி எல்லாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் கசப்பு பற்றி ரொம்ப யோசிக்க வேண்டி இருந்தது.


தலையங்கத்தில் தமிழில் தொழில்நுட்பக்கல்வி பற்றி லெனினின் கருத்துக்கள் சாட்டையடி. சா. கந்தசாமி 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ள கிட்டத்தட்ட 41 நூல்களால் தமிழ் செம்மொழித் தகுதி அடைந்ததைக் குறிப்பிடுகிறார். இவருடைய கட்டுரைகளை சூரியக்கதிரிலும் படித்துள்ளேன்.


நா. மம்மதுவின் நூலான ”இசைப்பேரகராதி சொற்களஞ்சியம்” பற்றி ஸ்ரீரசா., தமிழிசை இயக்கம் பற்றியும்., இது தமிழ் சார்ந்த கருத்தியல்களுக்கு உறுதியாயிருக்கும் மற்றுமொரு படை எனவும் கூறுகிறார்.


ந. செல்வனின், ”சலனங்கள் உறைவதிலிருந்து எழும் ஒளி உலக அனுபவங்கள்” என்ற நூலைப் பற்றி மு. செல்வகுமார்., மொழி., இனம்., ஊடகம் இவற்றின் சீரழிவை ஆசிரியர் ஆதங்கத்துடன் பதிவு செய்திருக்கும் அதே நேரம் நூலில் ஒற்றுப் பிழைபற்றியும்., ஒருமை பன்மை மயக்கம் பற்றியும் திருத்தக் கோரியிருக்கிறார்.


கீரனூர் ஜாகீர் ராஜாவின் ”தேய்பிறை இரவுகளின் கதைகள்” பற்றி ம. மணிமாறனின் விமர்சனம் விமரிசை. இருந்தும் இவர் 39 கதைகள் பற்றியும் ஒற்றைவரி விமர்சனம் வைப்பது வாசக நேர்மையாகாது என சொல்கிறார்.


எஸ்.பி. ராஜேந்திரனின் கட்டுரை .,”இளைஞர்களிடம் இந்த இயக்கத்தை ஒப்படைக்கிறோம்” . இதில் என். வரதராஜன் ., ”என். சங்கரலிங்கையா வாழ்க்கையும் இயக்கமும்” என்ற நூலை ( எழுதியவர் சங்கரலிங்கையாவின் சகோதரர் என். ராமகிருஷ்ணன்) வெளியிட., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர். வேல்முருகன்., இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் ஜோ. ராஜ்மோகன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்களாம்.


மு. சுயம்புலிங்கம் பற்றி ச. தமிழ்ச்செல்வன்., வாசிப்பின் மோகம் பற்றி எஸ்.வி. வேணுகோபாலன்., கனவுப்பங்கங்களில் குழந்தை எழுத்தாளர்கள்., ஆசிரியர்களின் பகிர்வுகள்., யூமா வாசுகியின் ஸ்வீடன் மொழிக் கதை., சட்டை பற்றி இரா. நடராசன் எல்லாம் அருமை.


நடுவில் டிஸ்கவரி புக் பேலசின் விளம்பரம்..:)


ஆனால் ஒன்று., நாஞ்சில் உணவு பற்றி நாஞ்சிலாரும்., பாரதி பாலனின் சொல்லில் அடங்காத ருசிபற்றி ( இது அனுபவத்தின்., முதல் எழுத்து அச்சானதின் ருசி) வந்திருக்கும் இதே நூலில் இரா. நடராசனின் முப்பது வகை பட்டினியும் வந்திருக்கிறது. நிறைய சிந்திக்க., வருந்த ( GODS BITS OF WOOD) வைத்தது என்றாலும்., மங்கையர் குலபத்ரிக்கைகள் சாடல் தேவையில்லை. சமையல் இல்லாத., சமையல் கற்றறியாத மங்கைகளுக்கு எங்கேனும் வரவேற்பு உண்டா நடராசன் சார்.


சத்துக்குறைபாடு., நோயினால் பசித்திருத்தல்., பஞ்சங்களால் நிகழும் பட்டினி., குறைபாடு., உள்நாட்டு யுத்தங்களால் திணிக்கப்படும் பட்டினி., விலையேற்றத்தால் பசி., தீண்டாமை உள்ளிட்ட சமூக காரணங்களால் பசித்திருத்தல் ஆகியவற்றைப் பற்றி ROBERT FOGEL சொன்னதாக குறிப்பிட்டு இருக்கும் பசிகள்., பட்டினிகள் தீர்க்கப்படவேண்டியது அவசியம்.

”சென்செக்ஸ் குறியீடு” போல ”ஹங்கர் இண்டெக்ஸ் குறியீடும்” கவனிக்கப்படவேண்டும் என சொல்கிறார். தாவர வகையின் மரபார்ந்த ஆய்வுகள் விதைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தைச் சொல்வது போல ”மரபணு மாற்றப் பயிர்களை வளர்ந்து வரும் நாடுகளில் தடை செய்ய வேண்டும். அனுமதிக்கக்கூடாது ”என்பதையும் என் கருத்தாக மொழிகிறேன்.


10 கருத்துகள் :

கணேஷ் சொன்னது…

புதியதொரு புத்தகத்தை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். நான் இதுவரை படிக்கவில்லை. நிச்சயம் ஒரு பிரதி வாங்கிப் படித்து விடுகிறேன். படித்து ரசித்ததை அழகான வார்த்தைகளில் பகிர்ந்தமை நன்று அக்கா...

தமிழ் உதயம் சொன்னது…

"புதிய புத்தகம் பேசுது" பற்றி உங்கள் விமர்சனம் அருமையாக பேசியது. வாங்க வேண்டும்.

மாங்கனி நகர செல்லக் குழந்தை சொன்னது…

புதிய புத்தக பேசுதுற்கான வருட சந்தா ரூ. 180. தொடர்ப்புக்கு 044-24332424

துரைடேனியல் சொன்னது…

உபயோகமான பதிவு. தொடருங்கள் சகோ.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

kகுட்.. உங்க நாலைய பதிவு நேற்று குமுதத்தில் வந்த கவிதையா? வாழ்த்துகள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>Your comment has been saved and will be visible after blog owner approval.


பிளாக் ஓனர் காரு !!! ஹி ஹி ஹி

சே.குமார் சொன்னது…

உங்கள் விமர்சனம் அருமை.

சத்ரியன் சொன்னது…

//நடுவில் டிஸ்கவரி புக் பேலசின் விளம்பரம்..:)//

தேனக்கா,

இதைப் படிக்கும் போது சிரித்து விட்டேன். ஆனாலும், ஒவ்வொரு பக்கத்தையும் நாங்களே புரட்டி படிப்பதைப் போல ஒரு லாவகம்.

மற்றும்,

“மதில்கள்”-க்கு நன்றி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கணேஷ்

நன்றி ரமேஷ்

நன்றி மாங்கனி நகர செல்லக் குழந்தை

நன்றி துரைடேனியல்

நன்றி சிபி

நன்றி குமார்

நன்றி சத்ரியன்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...