எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

சனி, 12 நவம்பர், 2011

ஐந்தொகை.. (5).

1. மெல்ல திறந்த கதவிடுக்கில்
பாம்பாய் நெளிந்து வந்து
காலைக் கடிக்கிறது குளிர்..

2. கற்கள் நரகல் எல்லாம்
எச்சரிக்கையாய் தாண்டி.,
உனை தேடி வந்து
சொற்களால் மிதிபட்டு..


3. மதர்போர்டு
------------------------
ஆயுள்வரை உழைத்து பழுதாகி
கழற்றிக் கோர்க்கப்பட்டு, தொடர்ந்தும்
புனர்ஜென்மப் பணியில் அம்மாவாய்..

4. குளப்படிகளிலும் பூத்து
ஈரத்தாமரை...
உன் பாதச் சுவடு..

5. வாய் முளைத்த வண்ணத்துப் பூச்சியாய்
வார்த்தை நிறங்களை அப்பிச் செல்கிறது
பேசக் கற்ற குழந்தை..

டிஸ்கி ..1. :- ஃபிப். , 27, 2011 திண்ணையில் வெளியானது.

டிஸ்கி 2. :- ஐந்தாவது கவிதை மழலை என்ற தலைப்பில் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் நடத்தும் சுவடு நான்காவது ( மார்ச் 2011) இதழில் வெளிவந்துள்ளது.

8 கருத்துகள்:

 1. ஐந்து முத்துக்களை வழங்கியிருக்கிறீர்கள். அதிலும் மன்றாவது. மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது. பிரமாதம்க்கா...

  பதிலளிநீக்கு
 2. 1. மெல்ல திறந்த கதவிடுக்கில்
  பாம்பாய் நெளிந்து வந்து
  காலைக் கடிக்கிறது குளிர்..//

  கலக்கலா இருக்கு சூப்பர்ப்...!!!

  பதிலளிநீக்கு
 3. "...மெல்ல திறந்த கதவிடுக்கில்
  பாம்பாய் நெளிந்து வந்து
  காலைக் கடிக்கிறது குளிர்.."

  குளிர் மட்டுமா?
  கடன் காரர்களும் தான்:)

  பதிலளிநீக்கு
 4. நன்றி கணேஷ்

  நன்றி கோபால்

  நன்றி மாதவி

  நன்றி மனோ

  நன்றி விச்சு

  நன்றி ஆர் ஆர் ஆர்..!!!..:)

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...