வெள்ளி, 11 நவம்பர், 2011

பங்கேற்பு..

பங்கேற்பு.:-
*******************
பின்புறமிருத்தல்
சௌகர்யமாய் இருக்கிறது
மஞ்சள் வெளிச்சங்கள்
ஆக்கிரமிக்காத
மெல்லிய இருட்டு.
இருக்கிறோம்
ஆனால் இல்லை..

எல்லா ஆட்டங்களிலும்
பங்கேற்பாளராக
பரிசுக் கோப்பையை
நூலிழையில்
தவறவிட்டு.


மேடையில் ஒலிக்கும்
சங்கீதங்கள் சில
சோக ராகத்தோடு..
கரைந்து போகிறது
குளிர்பான பனிக்கட்டியாய்
இயலாமையோடு

துப்பு இருக்கிறது
உரித்தெரிந்து விட்டு
மேடையேறி
எல்லாவற்றையும்
கைப்பிடிக்குள் சுழற்ற..
காலடியில் அடக்க..

பின் தொடரப் போகிறதா
ஊத்தி மூடப் போகிறோமா
பித்தம் தெளியாமல்
என முற்றும் தெரியாமல்
எல்லையற்ற ஆட்டத்தில்

டிஸ்கி:- ஃபிப். 27. 2011 திண்ணையில் வெளியானது.

16 கருத்துகள் :

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Super kavithai

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

எல்லையற்ற ஆட்டம்
எல்லையுள்ள பாடலாக....

அருமை.

கும்மாச்சி சொன்னது…

கவிதை நன்றாக உள்ளது.

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல கவிதை தேனம்மை.

middleclassmadhavi சொன்னது…

//முற்றும் தெரியாமல்
எல்லையற்ற ஆட்டத்தில்// அருமை!

தமிழ் உதயம் சொன்னது…

இந்த வேதனை எனக்கும் உண்டு. நல்ல கவிதை.

கணேஷ் சொன்னது…

இதை எனக்காகவே எழுதியது போல இருக்குக்கா. நம்மால நாலு விஷயம் செய்ய முடியும்கற நம்பிக்கையும், எவ்வளவோ பெரிய மனுஷங்க இருக்கறப்ப நாம யாருங்கற அவநம்பிக்கையும் எனக்குள்ள எப்பவும் போட்டி போட்டுக்கிட்டிருக்கு. இந்தக் கவிதை எவ்வளவு தூரம் என் மனசைத் தொட்டுச்சுன்னு என்னால வார்த்தைகளால விவரிக்க முடியல. நன்றிக்கா...

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

நல்ல கவிதை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஒரு நல்ல கவிதை படித்த திருப்தி என்னுள்!

விச்சு சொன்னது…

கடைசி வரிகள் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

raji சொன்னது…

வாவ் சூப்பர்.

என்னை மாதிரி ஆட்களை நினைச்சுக்கிட்டு எழுதிட்டீங்களோ? :-))

r.v.saravanan சொன்னது…

நல்ல கவிதை

rufina rajkumar சொன்னது…

தேனம்மை !!!!

அ. வேல்முருகன் சொன்னது…

பங்கேற்பே ஒரு அடையாளம்
அருமை

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ராஜா

நன்றி கோபால் சார்

நன்றி கும்மாச்சி

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி மாதவி

நன்றி ரமேஷ்

நன்றி கணேஷ்

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி ஆர் ஆர் ஆர்

நன்றி விச்சு

நன்றி ராஜி

நன்றி சரவணன்

நன்றி ரூஃபினா

நன்றி வேல்முருகன்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...