எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

புதன், 23 நவம்பர், 2011

பட்டிமன்ற நடுவர் மணிமேகலை.


போரூரில் நடந்த பட்டிமன்றத்தில் நல்ல நடுவராக தீர்ப்பு வழங்கியவர் என்று பாராட்டப்பட்டவர்., பள்ளிக்காலங்களில் கல்லூரிக் காலங்களில் பட்டி மன்றத்தைக் கலக்கியவர்., தற்போதும் அம்பத்தூரில் நடைபெற்ற கந்தர் சஷ்டி விழாவில் , ”நம் சமுதாயம் முன்னேற பெரியோரின் அனுபவம் தேவையா அல்லது ஆற்றல் மிக்க இளைஞர்கள் தேவையா” என்ற பட்டிமன்றத்தில்
பெரியோரின் அனுபவமே என பேசி முத்திரை பதித்திருப்பவர் மணிமேகலை..


இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். கணவர்., ஒரே மைந்தனுடன் சென்னையில் இருக்கும் இவர் முதன்முதலில் என்னுடைய தொலைந்த ஒன்று கவிதையை படித்து தொலைபேசி எண் வாங்கி பேசியவர். ஒரு ரசிகையாக அறிமுகமான இவரிடம் பன்முகத் திறமைகள் இருப்பதை அறிந்தேன். இவர் நல்ல விமர்சகர். சொல்லும் கருத்துக்களை குரல் ஓங்கிச் சொல்லாமல் மிக நிதானமாக அதே சமயம் அழுத்தமாக சொல்லக் கூடியவர். சில கவிதைகளை எடிட் செய்து இருக்கலாம் என்பார். சிலதில் அக்கா ஒருமை பன்மை கலந்து வந்து விட்டது என்பார். கால மாற்றம் கலப்பிருக்கிறது என்பார். எனவே நம் நண்பர்களே நல்ல ஆக்கப்பூர்வமான விமர்கசராக இருப்பதும் நல்ல கொடுப்பினை. நம்மை செதுக்க இவர்கள்தான் உதவுகிறார்கள்.


மிக மென்மையாக பேசினாலும் கருத்துக்களைத் தெளிவாக உரைக்கும் இவரின் முகநூல் பக்கம் போனபோதுதான் இவரின் திறமை தெரிய வந்தது. பட்டிமன்ற நடுவராகவா என ஆச்சர்யப்பட்டு இன்னொரு சமீப விழாவில் போட்டியாளராக அவரின் பேச்சுக்களை தொகுத்திருக்கிறேன். இது இன்றைய இளைய சமுதாயத்துக்கு மிகத் தேவை.


நகரத்தார் பெண்கள் சொல்லாட்சி மிக்கவர்கள். எளிமையானவர்கள். வணிகவியல் வனிதையான இவர் 25 வருடங்களாக மிகப் பெரிய பணியிலிருந்தும் கல்லூரிக் கால பட்டிமன்ற ஆர்வத்தை விடாமல் கலக்குவது ரசிக்கக்கூடிய ஒன்று. 12 ஆம் வகுப்பு படிக்கும்போது பேராசிரியர் கான சிற்சபேசன்., சாலமன் பாப்பையா., காந்திமதி அம்மா., சரஸ்வதி ராமனாதன்., அரு. நாகப்பன்.இவர்களோடு ஒரே மேடையில் அமர்ந்து பட்டிமன்றத்தில் பேசியுள்ளார். காரைக்குடி கம்பர் விழாவில் கவிதை படித்துள்ளார்.!!!. ( தமிழ்க் கவிஞர்களுக்கு கிடைக்கும் பெறும் பேறு இது. )


பேச்சு என்பது ஒரு மிகப் பெரும் கலை.. அது சிலருக்கே வாய்க்கும். இவர் அம்பத்தூர் கந்தர் சஷ்டி விழாவில் பெரியோரின் அனுபவமே என்ற தலைப்பில் பேசிய பேச்சின் சுருக்கம். ” கண்ணதாசன் அனுபவம் என்பதே நான்தான் என்று கடவுள் கூறுகிறார். ஆண்டவனுக்கு ஒப்பாக சொல்லப்படும் அனுபவம்தான் நாம் முன்னேற என்றும் தேவை. தீ என்றால் சுடும் என்று அனுபவத்தில் உணர்ந்து ஒருவர் சொல்வதை ஏற்றுக் கொள்பவன் தீயினால் சுடப்படுவதில்லை”


“இல்லை நான் ஆற்றல்மிக்கவன் என்று எண்ணி அனுபவசாலி சொல்வதைக் கேட்காத ஒருவன் தொட்டுத்தான் பார்த்தால் என்றால் சுட்டுவிடும். நம்முடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் பெரியோரின் அனுபவப்படி நிறைவேற்றப்படும்போது சிறப்பாக அமையும். ”


நம்முடைய வீடுகளில் மெயிண்டெனென்ஸ் குறைக்க சுண்ணாம்பு அடிக்கடி அடிப்பதை தவிர்க்க காரையோடு முட்டை வெண்கரு சேர்த்துப் பூசி பாலீஷ் செய்வார்கள். அதனால் இன்றுவரை வீட்டு தூண்களுக்கும் உள் சுவர்களுக்கும் வெள்ளை அடிக்க செலவு இல்லை.


அதே போல ஒவ்வொரு விஷயத்தையும் கணக்கெழுதி செலவு செய்வார்கள். எல்லாவற்றையும் பற்றுவரவு வைத்து பொதுவிலே கணக்கு வைத்து சண்டையில்லாமல் பெரிய குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்தன. இப்போது தனித்தனியாகக் குடித்தனங்கள். ஏனெனில் கேட்காத போது அறிவுரை சொன்னால் இளைஞர்களுக்குப் பிடிப்பதில்லை. கேட்கும்போது நம் அறிவுரையை சொல்லி நம் சமுதாயத்தை உயர்த்துவோம்..


கோயில் சாமி உலா வரும்போது தூக்கும் நகரத்தார் இளைஞர்களுக்கு கூட வரும் பெரியவர்கள் சொல்வார்கள்., ”மேலே பார்த்துத் தூக்கு ., கரண்டு கம்பி வருகிறது” என்றும்., போகும் திருப்பங்களில் முட்டுக் கட்டை போடுவதும்., வேல் வீசி வழிகாட்டுவதும் உண்டு.இதுபோல வாழ்க்கையிலும் வழிகாட்ட பெரியோர்கள் தேவை.


அதுபோல திறமைமிக்க ஒருவன் எவ்வளவு உழைத்தாலும் அவன் வெட்டுகின்ற கோடாரியை அவ்வப்போது தீட்டாவிட்டால் பயனில்லை என்று சிறு கதை ஒன்று உண்டு.


திறமைமிக்க இளைஞர்களே வாருங்கள். எங்கள் அனுபவங்களை நாங்கள் தருகிறோம். அதன்படி நடந்து உங்கள் சொந்த புத்திக் கூர்மையினால் இந்த சமுதாயத்தை உயர்த்தலாம்.”


இந்த சிறப்பான வாதங்களை சொல்லி வென்ற மணிமேகலைக்கு பாராட்டுக்கள். இன்னும் இளைஞர்களுக்கு உங்கள் நல்ல அறிவுரைகளை சொல்லி பண்படுத்துங்கள் . வாழ்த்துக்களுடனும் பெருமிதத்துடனும் உங்கள் அக்கா..

8 கருத்துகள்:

 1. கோயில் சாமி உலா வரும்போது தூக்கும் நகரத்தார் இளைஞர்களுக்கு கூட வரும் பெரியவர்கள் சொல்வார்கள்., ”மேலே பார்த்துத் தூக்கு ., கரண்டு கம்பி வருகிறது” என்றும்., போகும் திருப்பங்களில் முட்டுக் கட்டை போடுவதும்., வேல் வீசி வழிகாட்டுவதும் உண்டு.இதுபோல வாழ்க்கையிலும் வழிகாட்ட பெரியோர்கள் தேவை.
  -இந்த ஒரு வாதம் போதுமே... திருமதி மணிமேகலை வென்றதில் வியப்பென்ன..? பெரியாரைத் துணைக்கோடல் என்றும் பயன்தர வல்லது. நல்லதொரு விஷயத்தை அறிந்ததில் உங்களைப் போலவே பெருமிதத்துடன் நான் நன்றி நவில்கிறேன் தேனக்கா...

  பதிலளிநீக்கு
 2. தேனக்கா,

  பண்பானவர்களை மெம்னேலும் பண்படுத்தும் பகிர்வு.

  பாராட்டுக்களும், நன்றிகளும்!

  பதிலளிநீக்கு
 3. சொல்லும் கருத்துக்களை குரல் ஓங்கிச் சொல்லாமல் மிக நிதானமாக அதே சமயம் அழுத்தமாக சொல்லக் கூடியவர்.


  அருமையான பயனுள்ள ஆக்கம்..

  வரிக்கு வரி மேற்கோள் காட்டத்தகும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 4. அன்பு தேன் எங்கே நல்ல கருத்துகள் கண்ணில் பட்டாலும் எடுத்துச் சொல்லுகிறீர்கள். திருமதி.மணிமேகலையின் கருத்துகளை இங்கே வடித்திருப்பதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
  நன்றி மா.

  பதிலளிநீக்கு
 5. நன்றி கணேஷ்

  நன்றி சிபி

  நன்றி கோபால்

  நன்றி ராஜி

  நன்றி ஜலீலா

  நன்றி வல்லிசிம்ஹன்..:)

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...