செவ்வாய், 1 நவம்பர், 2011

கலைமகளில் சிறுகதைப் போட்டி.. ( முதல் பரிசு ரூ. 50,000/-)

கலைமகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.நூற்றாண்டு விழாவை ஒட்டி சிறுகதைப் போட்டியை அவரது குடும்பத்தினர் நடத்த உள்ளனர். பரிசு பெற்ற சிறுகதைகள் ஜூன் ஜூலை 2012 ஆம் இதழ்களில் பிரசுரிக்கப்படுமாம். முதல் பரிசு ரூ. 50,000/-. இரண்டாம் பரிசு ரூ.25,000/-. பிரபலமானவர்கள், புதியவர்கள் கலந்து கொள்ளலாமாம். 6 பக்கங்கள் ., ஒரு பக்கம் மட்டுமே வரும்படி எழுதி அனுப்ப வேண்டுமாம். டைப் பண்ணி அனுப்பினால் நலம். ஆனா ஈ மெயில் ஐடி கொடுக்கலை. போஸ்டல் மூலமாதான் அனுப்பனும். கடைசி தேதி 31, ஜனவரி 2012.அனுப்ப வேண்டிய முகவரி:-

கா. ஸ்ரீ. ஸ்ரீ. நூற்றாண்டு விழா சிறுகதைப் போட்டி.
கலைமகள்,
1, சமஸ்கிருத கல்லூரி சாலை,
சென்னை - 600 004.

********************************************

ஏ .. சொக்கா ஆயிரம் பொன்னா என்பது போல இதைப் பார்த்ததும் நம் சக வலைப்பதிவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். வெளிநாடுகளில் மற்றும் வட இந்தியாவில் வசிக்கும் ப்லாகர்களுக்காகவே இதை போட்டுள்ளேன். அது மட்டுமில்ல.., இந்தக் கதை எழுதுவதில் நமக்குப் பொறுமை இருக்கோ இல்லையோ., நிறைய ப்லாகர்களுக்குப் பொறுமை இருக்கு. அவங்க கதைகள் அழகாவும்., நயமாவும்., பிரமாதமாவும் இருக்கு. உடான்ஸ் போட்டிக்கும் வம்சி போட்டிக்கும் வரிஞ்சு கட்டிக்கிட்டு சூப்பரா எழுதப்பட்ட பல ப்லாகுகள் படித்தேன். சுரேகா., ராமலெக்ஷ்மி., மிடில் க்ளாஸ் மாதவி.( அடேயப்பா த்ரில்லர் எல்லாம் எழுதுறீங்க..)., ரமேஷ்., அப்புறம் அமைதிசாரல்., குமார்., கோபால் சார்., ரிஷபன்., ஸ்ரீராம்., அக்பர்., ஸ்டார்ஜன்., ஸாதிகா., ஹுசைனம்மா., ஜெய்., ஆர் ஆர் ஆர்., டி வி ஆர்., கேபிள் சங்கர்., கார்த்திக் பாலா , அம்பிகா., கண்ணகி., மதுரை சரவணன்., சரவணகுமார்., மோகன் குமார் ., கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மன்., சாந்தி லெட்சுமணன்., க. பாலாசி, வேலு இன்னும் பலர் இருக்காங்க.. எல்லாரும் எழுதுங்க.. உங்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

டிஸ்கி1. :- மூன்றாவது கோணம் நவம்பர் 6 ஆம் தேதி குரோம்பேட் ராஜ ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இணைய தள எழுத்தாளர்கள் சந்திப்பு விழா நடத்துகின்றார்களாம். moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி உங்க வருகையை பதிவு செய்துக்க சொல்றாங்க.

டிஸ்கி 2:- அதே கலைமகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றம் எப்படி என்ற கட்டுரை படித்தேன். தூக்கு மேடை பற்றியும்., அது நிறைவேற்றப்படும் நடைமுறைகள் பற்றியும்., ஹேங்மேன்கள் பற்றியும் விவரித்து தூக்கு மேடையின் படமும் போட்டிருந்தார்கள். சொல்லவொணா துக்கம் மனதை பிசைந்தது. இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாம்.

24 கருத்துகள் :

பாண்டியன்ஜி சொன்னது…

உங்கள் விரிந்த உள்ளம் பாராட்டத்தக்கது.
பாண்டியன்ஜி

கணேஷ் சொன்னது…

ஒண்ணா ரெண்டா... அம்பதாயிரமாச்சே... இந்த நேரம் பாத்து எனக்கு கதை எழுத வரலையே சொக்கா...

வெளிநாட்டில் அல்ல... உள்ளூரிலேயே இருந்தாலும் இது மாதிரி நல்ல விஷயத்தை தவறவிடும் என் போன்றவர்களுக்கு வழி காட்டி உதவியிருக்கிறீர்கள். நானும் முயல்கிறேன். நன்றிக்கா...

தமிழ் உதயம் சொன்னது…

எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக கலைமகள் வருஷந்தவறாமல் சிறுகதை போட்டி நடத்துவதுண்டு. பதிவுலக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக தேனம்மை அவர்கள் - இம்மாதிரியான விளம்பரங்கள் செய்வது போற்றத்தக்க ஒன்று. நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

எல்லா எழுத்தாளர்களையும் உசிப்பி விட்டுள்ளீர்கள். உற்சாகமாக உள்ளது.

தங்களின் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள்.

நம் பதிவர்கள் யாராவது ஒருவருக்காவது கலைமகள் பரிசு கிடைத்தால் நமக்கு கூடுதல் மகிழ்ச்சியே.

எழுத்துலகில், எழுத்தாளர்களுக்கு இதுபோலத் தகவல்கள் தந்து ஊக்குவிக்க வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றி, பதிவிட்டுப் பகிர்ந்து கொண்டுள்ள விஷயங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். vgk

ஸாதிகா சொன்னது…

தேனு,தலைப்பைப்பார்த்துவிட்டு நீங்கள் எழுதிய சிறுகதைக்குத்தான் பரிசோ எனத் துள்ளலுடன் படிக்க ஆரம்பிக்கையில்...சும்மா சொல்லக்கூடாது தேனு..பதிவர்களை ஊக்குவிப்பதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை..வாழ்த்துக்கள்.தேனுவின் பரந்த மனப்பான்மைக்கு ராயல் சல்யூட்.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நல்ல செய்திகள்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//..பதிவர்களை ஊக்குவிப்பதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை..வாழ்த்துக்கள்.///

unmai

ராமலக்ஷ்மி சொன்னது…

தமிழ் உதயம் சொல்லியிருப்பதை நானும் வழிமொழிகிறேன்:)! உங்கள் பதிவின் மூலமே போட்டி விவரம் அறிய வருகிறேன். மிக்க நன்றி தேனம்மை.

நிஷாந்தன் சொன்னது…

அய்ம்பதாயிரம் ரூபாய் பரிசினை
அள்ளிச் செல்லும் வழி சொன்ன
ஆச்சி அவர்களுக்கு செப்புவோம்
ஆயிரமாயிரமாய் நன்றிகள் !
- நிஷாந்தன்

middleclassmadhavi சொன்னது…

பெரிய ஜாம்பவான்/ஜாம்பவதிகளுடன் என் பெயரையும் சொலியிருக்கீங்க! மிக்க நன்றி!

ரிஷபன் சொன்னது…

போட்டி விவரம் தந்து எங்களை எல்லாம் உசுப்பேத்தி விட்டிருக்கிறீர்கள்..
கலைமகள் ஆபீஸ்ல திண்டாடப் போறாங்க.. வந்து குமியப் போற கதைகளைப் பார்த்துட்டு.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி பாண்டியன்ஜி

நன்றி கணேஷ்

நன்றி ரமேஷ்

நன்றி கோபால் சார்

நன்றி ஸாதிகா

நன்றி ராஜா

நன்றி டி வி ஆர்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி நிஷாந்தன்

நன்றி மாதவி

நன்றி ரிஷபன்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

r.v.saravanan சொன்னது…

சிறுகதை பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி மேடம் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்
எனது தளத்தில் ஒரு தொடர்கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன் நேரமிருக்கும் போது படியுங்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அட..ஐம்பதாயிரமா? அம்மாடியோவ்வ்..இப்பன்னு பார்த்து மூடு வரமாட்டேங்குதே..ம்...என்ன செய்யலாம்...யாராவது எனக்கு மதுரைக்கு போகவர ஸ்பான்ஸர் செய்யுங்களேன்..ப்ளீஸ்..அங்க மீனாட்சி அம்மன் கோவில்ல...ப்ரகாரம்..ப்ரகாரமா சுத்தறேன்..சொக்கனைப் பார்த்து கதையை கொடுத்து பரிசு வாங்கி..பஸ் டிக்கெட் சார்ஜை ரிஃபண்ட் பண்ணறேங்கண்ணா....

apsara-illam சொன்னது…

தேனம்மை மேடம் நலமா..?மீண்டும் உங்களுடைய தகவல் எங்களை போன்றவர்களுக்கு பயனளிக்கும் என நினைக்கிறேன்.என்ன ஒரு சிறு முயற்ச்சி பண்ணலாமேன்னு நப்பாசைதான்.பெரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் இது எனக்கு ஓவர் தான் இருப்பினும் பரிசுக்காக இல்லாவிடிலும்,நாங்களும் கலந்துக் கொண்டோம் என்றிருக்கட்டுமே என்பதற்க்காகதான்.பார்க்கலாம்.நானும் கலம் இறங்கியாச்சு யோசிக்க.
எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு தாங்களுக்கு மிகவும் நன்றி மேடம்.

அன்புடன்,
அப்சரா.

அமைதிச்சாரல் சொன்னது…

பகிர்ந்து கொண்டதுக்கும் 'என்னையும்' எழுத்தாளின்னு லிஸ்டுல சேர்த்துக்கிட்டதுக்கும் ரொம்ப நன்றி தேனக்கா :-))

ஸ்ரீராம். சொன்னது…

பகிர்வுக்கு நன்றி. உற்சாகமூட்டியுள்ளீர்கள். பதிவர்களுக்கு வாழ்த்துகள். தமிழ் உதயம் மற்றும் ராமலக்ஷ்மி கருத்துகளை வழிமொழிகிறேன்.

சே.குமார் சொன்னது…

அக்கா எல்லாருடைய பேரையும் போட்டு (என்னையும் சேர்த்துத்தான்) நல்லா உசுப்பேத்தி விட்டிருக்கீங்க... எல்லாரும் கலந்துக்கட்டும். நானும் கலந்துக்க முயற்சிக்கிறேன்.
உங்கள் பதிவின் மூலமாகத்தான் விவரம் அறிந்து கொண்டோம். அதற்கு நன்றி. என்ன மின்னஞ்சலில் அனுப்பச் சொல்லியிருந்தால் பரவாயில்லை.... கடிதம் வாயிலாக... முயற்சிக்கிறோம்....

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சரவணன்

நன்றி ஆர் ஆர் ஆர்

நன்றி அப்சரா

நன்றி சாந்தி

நன்றி ஸ்ரீராம்

நன்றி குமார்.

Ramkumar.R சொன்னது…

Thanks a lot sister for sharing this competition details.

Could you please provide some details/URLs of last year won stories.

Thanks in Advance,
Ramkumar.R

Ramkumar.R சொன்னது…

Thanks a lot sister for sharing the competition details.

Could you please provide the details/URLs for the last year Won stories.

Thanks in Advance,
Ramkumar.R

பெயரில்லா சொன்னது…

Thanks a lot sister for sharing the competition details.

Could you please provide the details/URLs for the last year Won stories.

Thanks in Advance,
Ramkumar.R

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...