எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 18 ஏப்ரல், 2011

அன்புள்ள அம்மாவுக்கு.. அவள் விகடனில் என் கவிதை..



எங்களுக்காய் கடவுள்

அனுப்பிய தேவதையே..

அன்பெனும் குடுவை நீ..


கலாசாலைகளும்

கற்பிக்க இயலாததெல்லாம்

கற்றுக் கொடுத்த

உயிர் கல்விக்கூடம் நீ..


எந்த இடத்திலும்

என் சுயத்தை

இழந்ததே இல்லை..

என் சுயத்தின்

ஆணிவேர் நீ..


நீ அன்பை

எவ்வளவு இட்டாலும்

கொள்ளும்தான் எனக்கு..

உன் அன்பை மட்டுமே

புசிக்கும் காயசண்டிகை நான்..


டிஸ்கி:- இது 12. 4. 2011 அவள் விகடனில் வெளிவந்து இருக்கு.. ( பத்ரிக்கைகளுக்கு அனுப்பும் ரங்க தங்க மணிகளே.. சில சமயம் உங்க படைப்பு பத்திகள் ஒதுக்கப்படுவது பொறுத்து எடிட் ஆகி சின்னதாகிவிடலாம்.. எனவே எடிட் பண்ணாலும் பரவாயில்லை என நினைக்கும் ரங்க தங்க மணிகள் தங்கள் படைப்புகளை பத்ரிக்கைக்கு கொடுங்க.. :)) ) ..

30 கருத்துகள்:

  1. அம்மாவுக்காய் ஒரு கவிதை அருமை தேனக்கா.. அவள் விகடனில் வெளியானதுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. //நீ அன்பை

    எவ்வளவு இட்டாலும்

    கொள்ளும்தான் எனக்கு..

    உன் அன்பை மட்டுமே

    புசிக்கும் காயசண்டிகை நான்..//

    அருமையாக சொல்லி இருக்கீங்க அம்மா. அவள்விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் மேலும் வளர :)

    பதிலளிநீக்கு
  4. உண்மை தான். பத்திரிகைகள் எடிட் செய்து வெளியிடுவதை தாங்கி கொள்ளும் மனம் வேண்டும். மூன்று பக்க சிறுகதையை ஒரு பக்க கதையாகவும் வெளியிடுவார்கள். கவிதை சிறப்பாக இருந்தது மேடம்.

    பதிலளிநீக்கு
  5. நீ அன்பை

    எவ்வளவு இட்டாலும்

    கொள்ளும்தான் எனக்கு..

    உன் அன்பை மட்டுமே

    புசிக்கும் காயசண்டிகை நான்..


    ....very touching....in tears....

    பதிலளிநீக்கு
  6. அக்கா, வாழ்த்துகள்.

    (இப்படியே டெம்ப்ளேட் பின்னூட்டம் மட்டுமே இனி போடப் போறேன்னு நினைக்கிறேன். பின்னே, நீங்களும், அந்தப் பத்திரிகையில் வந்துது, இந்தப் பத்திரிகையில் வந்துதுன்னுதானெ பதிவு போடுறீங்க?) :-)))))

    பதிலளிநீக்கு
  7. உன் அன்பை மட்டுமே

    புசிக்கும் காயசண்டிகை நான்//

    அற்புதம்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் தேனம்மை.
    கடவுள் அனுப்பிய தேவதை கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்து சொல்லியே கை வலிக்குது

    பதிலளிநீக்கு
  11. என் சுயத்தின்

    ஆணிவேர் நீ..//
    அருமையான நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. அம்மா என்பதே! ஒரு கவிதை தான்...
    யார் எழுதினாலும் கவிஞராகலாம்...
    சிறந்த கவிதை எழுதினால் சிறந்த அம்மா ஆகலாம்...

    பதிலளிநீக்கு
  13. >>>உன் அன்பை மட்டுமே

    புசிக்கும் காயசண்டிகை நான்..

    அழகு வரிகள் மேடம்

    பதிலளிநீக்கு
  14. படைப்புகளை அனுப்பவேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை.. அதைத்திருத்துவது ஒரு எடிட்டரின் உரிமை

    பதிலளிநீக்கு
  15. இதமான வரிகள் அக்கா.....வாழத்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. நன்றி சாந்தி

    நன்றி சமுத்ரா

    நன்றி உழவன்

    நன்றி ஜிஜி

    நன்றி காஞ்சனா

    நன்றி சசி

    நன்றி சிநேகிதி

    நன்றி சக்தி

    நன்றி கீதா

    நன்றி ரமேஷ்

    நன்றி மேனகா

    நன்றி சித்து

    நன்றி வேல்கண்ணன்

    நன்றி ஜலீலா

    நன்றி ஹுசைனம்மா..(!)

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி வித்யா

    நன்றி ஸாதிகா

    நன்றி ஆயிஷா

    நன்றி கோமதி

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி நசர்

    நன்றி ராஜி

    நன்றி ஆசியா

    நன்றீ நையாண்டி மேளம்

    நன்றி செந்தில்

    நன்றி செந்தில்..

    பதிலளிநீக்கு
  17. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...