எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

இணையத்தில் எழுத்தாளர்.. குங்குமத்தில் வாசகர் கேள்விக்கு என் பதில்..இணையத்தில் எழுத்தாளர்!


வலைப்பூக்களில் பலர் எழுதுகிறார்களே...


நானும் அதுபோல இணையத்தில் எழுத விரும்புகிறேன். அதற்குச் செலவாகுமா? என்ன வழி? - ஆர்.ராதிகா, ராஜபாளையம்.


பதில் சொல்கிறார் வலைப்பதிவர் - எழுத்தாளர் தேனம்மை லெக்ஷ்மணன்.


இணைய இணைப்பும் மின் அஞ்சல் கணக்கும் இருந்தாலே போதும்... வேறெந்த செலவும் இல்லாமல் வலைப்பூ தொடங்கலாம்.


blogger.com, wordpress.com, typepad.com போன்ற சேவைத்தளங்களில் இரண்டே நிமிடங்களில் பதிவுசெய்து, உடனே எழுதத் தொடங்கிவிடலாம்.


விரும்பினால் சுய விவரம், புகைப்படத்தோடு, பிடித்த திரைப்படங்கள், இசை, புத்தகங்கள் போன்ற ஆர்வங்களையும் பதிவு செய்யலாம்.


உங்கள் வலைத்தளத்துக்கு பெயர் சூட்ட வேண்டும். அதன்பிறகு டாஷ்போர்ட் பலகைக்குச் சென்று ‘புதிய இடுகை’ என்பதை க்ளிக் செய்து கதை, கவிதை, கட்டுரை என விரும்புவதை எழுதி வெளியிட வேண்டியதுதான்! படங்கள், வீடியோ, ஆடியோ க்ளிப்பிங்ஸ் இணைக்கும் வசதியும் உண்டு.


கணிணியில் தமிழ் எழுத யூனிகோட் எழுத்துரு தேவை. ‘பொங்கு தமிழ் யூனிகோட் எழுதி’ பயன்படுத்தலாம். அல்லது NHM Writer என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழையே எஸ்எம்எஸ்ஸில் ஆங்கிலத்தில் அடிப்பதுபோலவே, இதிலும் அடித்து, தமிழாகப் பெறும் கீபோர்டு வசதியும் உள்ளது.


வலைப்பூவில் எழுத ஆரம்பித்ததும் உறவினர்கள், நண்பர்களுக்குச் சொல்லலாம். பின்பற்றுபவர்கள் என்ற கேட்ஜெட்டை நம் வலைப்பூவில் சேர்க்கலாம். நாமும் பிற வலைப்பூக்களில் பின்பற்றுபவராகச் சேர்ந்து, படித்து, பின்னூட்டமிட்டால், நம் வலைப்பதிவை படிக்கும் வாசகர்கள் அதிகமாவார்கள்.


வலைப்பூவை பிரபலமாக்க திரட்டிகளில் இணைக்கலாம். தமிழ்மணம், தமிழிஷ், உலவு என பல திரட்டிகள் உள்ளன. திரட்டிகள் ஒவ்வொரு இடுகையையும் அறிவிப்பாக வெளியிடும்.


ஃபேஸ்புக், ட்விட்டரிலும் இடுகைகளைப் பகிரலாம். நெட்வொர்க் ப்ளாக்ஸ் போன்றவற்றிலும் இணைக்கலாம்.


வாரம் ஓரிரு பதிவாவது எழுதுதல் நல்லது. சிறப்பான பதிவுகள் வாசகர் வட்டத்தை உருவாக்கும்.


ஆங்கில வலைப்பூவாக இருந்தால் ‘கூகுள் ஆட்சென்ஸ்’ விளம்பரத்தை நம் வலைப்பூவில் வெளியிட அனுமதி கொடுத்து, வருகையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறிய தொகை ஒன்றையும் சம்பாதிக்க முடியும். வாழ்த்துகள் வலைப்பதிவரே!


டிஸ்கி:- இந்தக் கேள்வி பதில் 11. 4. 2011 குங்குமத்தில் வெளியானது.. நன்றி குங்குமம்..:))

26 கருத்துகள்:

 1. வலைப்பூக்களில் எவ்வளவு எழுதினாலும் - பத்திரிகைகளில், நாம் எழுதிய சிறு குறிப்பு வந்தாலும் பெரிய மகிழ்ச்சி தான். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. ரைட்டு.. வாழ்த்துக்கள் மேடம்...நீங்க போற ஸ்பீடு செம.. ம் ம்


  அப்புறம் விஜய் டி வி மேட்டர் போடலையா?

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள். புதிய பதிவர்களுக்கு பயனுள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 4. அப்புறம் விஜய் டி வி மேட்டர் போடலையா?///////////

  what matter

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் அக்கா!! புதுசா வலைப்பதிவு தொடங்குபவர்களுக்கு உதவும்..

  பதிலளிநீக்கு
 6. தமிழ் உதயம் கூறியது முற்றிலும் உண்மை!!!!
  வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 7. கலக்குறீங்க தேனு.மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. நல்ல வழிகாட்டுதல்.
  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 9. நல்ல வழிகாட்டுதல்.
  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 10. நான் Facebook மூலமாக இந்த பதிலையும் மற்றும் விஜய் டிவி நிகழ்ச்சி முழுவதையும் பார்த்தேன்... சந்தோஷமாக இருக்கிறது அக்கா! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! Keep Rocking! :-)

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள் தேனம்மை. தெளிவான விளக்கம்.

  பதிலளிநீக்கு
 12. அக்கா அடி தூள் கிளப்புறீங்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. //blogger.com, wordpress.com, typepad.com போன்ற சேவைத்தளங்களில் இரண்டே நிமிடங்களில் பதிவுசெய்து, உடனே எழுதத் தொடங்கிவிடலாம்.//

  இரண்டே நிமிடங்களில் Maggie நூடுல்ஸ் தயார் செய்வது போல ப்ளாக்கை தயார் செய்யலாம். அதே சமயத்தில் நூடுல்சில் உள்ளது போல் சிக்கல் இல்லாமல் எழுதுவது முக்கியம். சரிதானே..!!

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்கள் தேனம்மை லெக்ஷ்மணன்.

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துக்கள். பத்திரிகைகளில் உங்களை நிறைய பார்த்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 16. Very good Thenammai.Itz useful for the new bloggers.You've told everything in a nice manner.

  பதிலளிநீக்கு
 17. வாழ்த்துகக்ள்,
  விஜய் டீவில்யில் பேசினீஙக்ளா நான் பார்க்கலையே
  ஏதாவது ரெகார்ட்டு செய்து இருந்தால் அனுப்பி விடுங்களே,

  பதிலளிநீக்கு
 18. நன்றி ரமேஷ்

  நன்றி செந்தில்

  நன்றி மனோ

  நன்றி அருணா

  நன்றி பாலாசி

  நன்றி ராஜி

  நன்றி ராஜா

  நன்றி மேனகா

  நன்றி நானானி

  நன்றி ஸாதிகா

  நன்றி ரத்னவேல்

  நன்றி சித்து

  நன்றி ராமலெக்ஷ்மி.,

  நன்றி சசி

  நன்றி அருள்

  நன்றி ஆயிஷா

  நன்றி சிவகுமார்

  நன்றி மாதேவி

  நன்றி கோபி

  நன்றி ஆர் ஆர் ஆர்

  நன்றி வித்யா

  நன்றி முனியப்பன் சார்

  நன்றி ஜலீலா

  பதிலளிநீக்கு
 19. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...