எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

ஸ்ரீ கான குஹா.. இசைப்பள்ளியின் ஆண்டுவிழாவில்..சிறப்பு விருந்தினராக.

பிப்ரவரி 27 அன்று சென்னை., ஆழ்வார்திருநகர் திருவிக பூங்காவில் ஸ்ரீ கான குஹா இசைப்பள்ளியின் ஆண்டுவிழா ஸ்வரா 2011 நடைபெற்றது. அதற்கு சிறப்பு விருந்தினராக நானும் தங்கை கயல்விழிலெட்சுமணனும் கலந்து கொண்டோம்.குத்து விளக்கேற்றி., குழந்தைகளின் இனிய கானத்தோடு ஆரம்பமானது விழா.

இந்த இசைப்பள்ளியின் ஆசிரியர் திரு விவேக் நாராயணன். நண்பர் டைரக்டர் செல்வாவின் “அவர்” படத்துக்கு இசையமைப்பாளர் இவர்தான். விரைவில் வெளிவர இருக்கிறது படம். இவர் இசைப்பள்ளியில் படித்தவர்தான் பிரபல பாடகர் திப்பு.

விவேக் நாராயணன் மகள் தொகுத்து வழங்க ஆரம்பமான விழாவில் அவரது துணைவியார் எங்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

கயல்விழி லெட்சுமணன் தனது உரையில்., “ இந்தக் காலத்துக் குழந்தைகள் மிக அட்வான்ஸ்ட் திங்க்கிங் உள்ளவர்கள்.. நாம் எதுவும் சொல்லிக் கொடுக்கவே வேண்டாம். எல்லாம் அவர்களுக்கே தெரிகிறது. நிறைய எக்ஸ்போஷர் இருப்பதால் அவர்கள் எதையும் சீக்கிரம் கற்றுக் கொள்கிறார்கள். இங்கு பாடிய குழந்தைகள் சிறப்பாக பாடினார்கள். நல்ல திறமைசாலிகள். எனவே நான் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.” என்றார்.

அடுத்து பேசிய நான்., சங்கீத மும்மூர்த்திகளுக்கும் என் நமஸ்காரம். “ கீதஞ்ச., வாத்யஞ்ச., நிருத்யஞ்ச த்ரயம் சங்கீத சமுச்யதே .. பாடல்., வாத்தியக் கருவிகள் வசிப்பது .,நடனம்., இம்மூன்றுமே சங்கீதம் எனப்படுகிறது. இந்த இனிய மாலைப் பொழுதை பொன்மாலைப் பொழுதாக மாற்றிய இந்த இசைப்பள்ளியின் குழந்தைகளுக்கு நன்றி.


இசையின் 7 ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பறவையின் அல்லது மிருகத்தின் ஒலியில் இருந்து உருவானது.. உதாரணமாக ,”ச” ( ஷட்ஜமம்) என்ற ஒலி மயிலின் அகவலிலிருந்தும்., “ரி” ( ரிஷபம்) என்ற ஒலி ரிஷபத்தின் ஒலியில் இருந்தும் .,( இதுபோல் க-காந்தாரம்-- ஆடு., ம--மத்யமம்--கிரௌன்ச பட்க்ஷி., ப--பஞ்சமம்-- குயில் ., த -- தைவதம் -- குதிரை., நி-- நிஷாதம்-- யானை) உருவானது.


காலை., மதியம்., மாலை., இரவு பாடுவதற்கென தனித்தனி ராகங்கள் உள்ளன. ., பூபாளம் விடியலிலும்., மதியம் பைரவியும்., மாலையில் காஃபி ராகமும் இரவில் நீலாம்பரியும் பாடப்படும் ராகங்களில் சில.


மலர் மருத்துவம் போல இசைமருத்துவம் என ஒன்றை நான் படித்தேன்.. அதன் படி இசையின் மூலம் நோய்களைக் குணப்படுத்தலாம். ஹிந்தோளம் காய்ச்சலுக்கும்., கரகரப்பிரியா வயிற்று வலிக்கும் பைரவி தலைவலிக்கும் பாடினால் நோய் குறைகிறது என கண்டு பிடித்திருக்கிறார்கள்.


உலகம் முழுமையும் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம். அப்படி இருக்கும் போது உங்கள் தாய்தந்தையர் உங்களுக்கு கல்வி மட்டுமே முக்கியம் ., நல்ல வேலை கிடைத்து சம்பாதிப்பது மட்டுமே முக்கியம் என உங்களை சம்பாதிக்கும் மிஷின்களாக எண்ணாமல் தங்கள் குழந்தைகள் பல கலைகளையும் கற்றுத் தேர்ச்சியடைய வேண்டும் என இந்த இசைப்பள்ளியில் சேர்த்து இசையைக் கற்கச் செய்திருக்கிறார்கள்.

தன் குழந்தைகளை சரியாக கவனிக்காத பெற்றோர் இருக்கிறார்கள். வறுமையினால் கவனிக்க இயலாத பெற்றோரும் கூட இருக்கிறார்கள். இந்த மாதிரி சூழ்நிலையில் உங்களை ஊக்குவிக்கும் பெற்றோர் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எனவே நீங்கள் உங்கள் பெற்றோருக்கும் இந்த இசைப்பள்ளிக்கும் பெருமை தேடித்தரவேண்டும். இந்த இசைப்பள்ளி மிக அருமையான பாடகர் திப்புவை உருவாக்கி இருக்கிறது.

உலக அரங்கில் நம் இசையை ஒலிக்கச் செய்ய வேண்டும். நிறைய ஆராய்ச்சிகள் இசையில் மேற்கொள்ளப்படவேண்டும். இசைமருத்துவம் பற்றி கூட ஆராய்ச்சி மேற்கொண்டு நாம் தற்காலத்தில் உட்கொள்ளும் மருந்துகளைக் குறைக்கலாம். சர்வதேச அரங்குகளில் நம் தமிழிசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பாடுங்கள். நம் மொழியையும் இசையையும் உலகெங்கும் ஒலிக்கச் செய்யுங்கள் .. ” என்று கூறினேன்.


கலந்து கொண்டு பேச வாய்ப்பளித்த இசையமைப்பாளர் விவேக் நாராயணனுக்கும்., அவர் பட டைரக்டர் செல்வாவுக்கும் நன்றிகள்.


குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி ஜன கண மனவுடன் விழா இனிது நிறைவுற்றது.15 கருத்துகள்:

 1. தேனக்கா,

  எப்பவும் பிஸிதான் போல!

  டிஸ்கி: சாரலாட ஊருல ஒரு மாசம் இருந்துட்டு வந்தனே!

  பதிலளிநீக்கு
 2. விழாவினை நேரில் கண்டதை போன்றதொரு உணர்வு, வாழ்த்துக்கள் மேடம்!

  பதிலளிநீக்கு
 3. குமுதம் விகடன் கவிதைகளுக்கு பாராட்டுகள்.(இப்பதான் பார்த்தேன்..!)

  பதிலளிநீக்கு
 4. நல்ல பகிர்வு. குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள். தங்கள் பேச்சும் அருமை.

  பதிலளிநீக்கு
 5. அக்கா வர வர ரொம்ப அழகாயிட்டு வாறீங்க !

  பதிலளிநீக்கு
 6. எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 7. அருமையான பகிர்வைப் பகிர்ந்ததற்கு நன்றிங்க. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. வீட்ல கொஞ்ச நேரம் கூட சும்மா இருக்க மாட்டீங்களா, தினமும் ஏதாவது ஒரு விழா வாழ்த்துக்கள் அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் பெருக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. தேனு என்னோட கருத்து கானமல் போயிட்டதா?
  மீண்டும் இங்கே தொடர்கிறேன்.
  இசையிலும் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி. இசை பள்ளி குழந்தைகளுக்கும் என்னோட வாழ்த்துக்களை தெரியபடுத்தவும்.
  ப்ளூ கலர் உங்களின் லக்கியா?
  மேலும் மேலும் புகழோங்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. நிறைய பயனுள்ள கருத்துப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள் மேடம்.. விழாவுக்கெல்லாம் வி ஐ பி ஆகிட்டீங்க.ம் ம்

  பதிலளிநீக்கு
 12. சந்தோஷமா இருங்க கோபால்.:)

  நன்றி பிரியா

  நன்றி ஸ்ரீராம்

  நன்றி ராமலெக்ஷ்மி.,

  நன்றி ஹேமா

  நன்றி ரத்னவேல் சார்

  நன்றி ஜிஜி

  நன்றி அக்பர்


  நன்றி சசி

  நன்றி சாந்தி

  நன்றி விஜி

  நன்றி இராஜேஸ்வரி

  நன்றி செந்தில்..:))

  பதிலளிநீக்கு
 13. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...